For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகப்பரு தழும்புகள் உங்க அழகை கெடுக்குதா? இதோ அதை நீக்கும் சில எளிய வழிகள்!

சீழ் நிறைந்த பருக்கள் மறையும் போது தழும்புகளை விட்டு செல்லும். இந்த தழும்புகள் முக அழகையே கெடுத்துவிடும். நீங்கள் உங்கள் முகத்தில் வரும் பருக்களை தழும்புகளின்றி போக்க நினைத்தால், இந்த வழிகளைப் பின்பற்றுங்கள்.

|

டீனேஜ் பெண்கள் சந்திக்கும் பொதுவான ஓர் சரும பிரச்சனை தான் முகப்பரு. இந்த முகப்பரு பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கு வரும். பொதுவாக முகப்பரு சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருக்கும் போது, சரும துளைகளில் அடைப்புக்கள் ஏற்படும் போது வரும். சில சமயங்களில் ஹார்மோன் மாற்றங்களாலும் முகப்பருக்கள் வரும். இப்படி வரும் முகப்பருக்கள் தானாக மறைந்துவிடும். ஆனால் பலர் முகப்பரு வந்தால், அதை விரைவில் போக்க பல வழிகளை முயற்சிப்பார்கள்.

Natural Ways To Get Rid Of Acne Without Leaving Scars In Tamil

அதுவும் சீழ் நிறைந்த முகப்பருக்கள் இருந்தால், அதை கவனமாக கையாள வேண்டும். இல்லாவிட்டால் அதன் சீழ் முகத்தில் பரவி, நிறைய பருக்களை வரவழைவிடும். மேலும் சீழ் நிறைந்த பருக்கள் மறையும் போது தழும்புகளை விட்டு செல்லும். இந்த தழும்புகள் முக அழகையே கெடுத்துவிடும். நீங்கள் உங்கள் முகத்தில் வரும் பருக்களை தழும்புகளின்றி போக்க நினைத்தால், கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிகளைப் பின்பற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
2% சாலிசிலிக் அமில ஜெல்

2% சாலிசிலிக் அமில ஜெல்

உங்கள் முகத்தில் அசிங்கமான பிம்பிள் அதிகம் இருந்தால், அதைப் போக்க 2% சாலிசிலிக் அமில ஜெல்லை, இரவு தூங்கும் முன் பிம்பிள் மீது அல்லது பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்த, மறுநாள் காலையில் முகத்தைக் கழுவுங்கள். இதனால் இந்த ஜெல் பிம்பிளில் உள்ள சீழை முற்றிலும் வற்றச் செய்து, தழும்புகள் ஏற்படாமல் தடுக்கும். இந்த வழியானது வறட்சியான அல்லது சென்சிடிவ் சருமம் கொண்டவர்களுக்கு சிறந்தது.

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

ஹைட்ரஜன் பெராக்ஸைடு

100 சதவீதம் சுத்தமான ஹைட்ரஜன் பெராக்ஸைடு திரவதை சில துளிகள் பஞ்சுருண்டையில் எடுத்து, பிம்பிளின் மீது தடவி, சில நிமிடங்கள் ஊறு வைத்து, பின் வெதுவெதுப்பான அல்லது சுடு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த முறையை முயற்சிக்கும் போது, சிறிது எரிச்சலை அனுபவிக்க நேரிடும். அதை மட்டும் பொறுத்துக் கொள்ளுங்கள். ஆனால் இது நல்ல பலனைத் தரும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பிம்பிள் வந்தால், பலர் அது சீக்கிரம் போக டூத் பேஸ்ட்டை பயன்படுத்துவார்கள். ஆனால் அதற்கு பதிலாக சிறிது பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, முகத்தை சுத்தம் செய்து, பின் தயாரித்த பேக்கிங் சோடா பேஸ்ட்டை பிம்பிள் மீது தடவி, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்வதன் மூலம் பருக்கள் தழும்புகளின்றி மறையும்.

வெள்ளை வினிகர்

வெள்ளை வினிகர்

சில துளிகள் வெள்ளை வினிகரை பிம்பிள் மீது தடவ வேண்டும். ஆனால் வினிகரை தடவும் முன், முகத்தை நன்கு சுத்தம் செய்து உலர்த்தியிருக்க வேண்டும். பின் அந்த வினிகரை தடவி அப்படியே உலர்த்த விட வேண்டும். இப்படி செய்வதனால், அது பிம்பிளை குறைப்பதோடு, விரைவில் தழும்புகளின்றி பிம்பிள் மறையும்.

பென்சாயில் பெராக்சைடு

பென்சாயில் பெராக்சைடு

முகத்தில் பிம்பிள் அதிகம் இருக்கும் போது, பென்சாயில் பெராக்சைடு கொண்ட க்ரீம், ஜெல் அல்லது டோனர் போன்ற எதை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதனால் பென்சாயில் பெராக்சைடு தழும்புகளின்றி பிம்பிளை போக்கும். ஆனால் இதை பயன்படுத்திய பின், தவறாமல் ஆயில்-ப்ரீ மாய்ஸ்சுரைசரைத் தடவுங்கள். இல்லாவிட்டால் அது மிகுதியான வறட்சியை ஏற்படுத்தி, சருமத்தில் எரிச்ச ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Ways To Get Rid Of Acne Without Leaving Scars In Tamil

Here are some natural ways to get rid of acne without leaving scars. Read on to know more..
Story first published: Wednesday, December 7, 2022, 21:58 [IST]
Desktop Bottom Promotion