For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீண்ட காலம் இளமையா தெரியணுமா? அப்ப இந்த பருப்பைக் கொண்டு ஃபேஸ் பேக் போடுங்க..

மசூர் பருப்பு சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்கி, சரும நிறத்தை மேம்படுத்த உதவுவதோடு, சருமத்தை நீண்ட காலம் இளமையாக வைத்துக் கொள்ளும். அதற்கு சரும பிரச்சனைகளுக்கு ஏற்ப மசூர் பருப்பைக் கொண்டு ஃபேஸ் பேக் போட வேண்டும்.

|

நீங்கள் உங்கள் சருமம் பட்டுப் போன்று அழகாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அதே வேளையில் சரும சுருக்கத்தைப் போக்கி, சரும நிறத்தையும் மேம்படுத்த வேண்டுமா? ஆனால் உங்களுக்கு எந்த கெமிக்கல் கலந்த பொருட்களைக் கொண்டும் சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்க விரும்பவில்லையா? அப்படியானால் உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில் ஒரு அற்புதமான பொருள் உள்ளது. அது தான் மைசூர் பருப்பு என்று அழைக்கப்படும் மசூர் பருப்பு.

Homemade Face Masks Using Masoor Dal

இந்த ஒரு பருப்பு சருமத்தில் உள்ள அழுக்குகளை போக்கி, சரும நிறத்தை மேம்படுத்த உதவுவதோடு, சருமத்தை நீண்ட காலம் இளமையாக வைத்துக் கொள்ளும். அதற்கு சரும பிரச்சனைகளுக்கு ஏற்ப மசூர் பருப்பைக் கொண்டு ஃபேஸ் பேக் போட வேண்டும். கீழே எந்த சரும பிரச்சனைக்கு மசூர் பருப்பை எந்த மாதிரி பயன்படுத்த வேண்டும் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து அதன்படி ஃபேஸ் பேக் போடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சருமத்தை இறுக்கமாக்க..

சருமத்தை இறுக்கமாக்க..

ஒருவரது சருமம் இறுக்கத்துடன் இருந்தால் தான், இளமையான தோற்றத்துடன் காட்சியளிக்க முடியும். நீங்கள் உங்களின் தளர்ந்த சருமத்தை இறுக்கமாக்க நினைத்தால், மசூர் பருப்பை பொடி செய்து, பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி நன்கு காய வைக்க வேண்டும். நன்கு காய்ந்த பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவி உலர்த்திய பின் தவறாமல் மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும். இந்த பேக் சருமத்தை இறுக்கமாக்க உதவுவதோடு, சருமத்திற்கு பொலிவை அளிக்கிறது.

முகப்பருவைப் போக்க..

முகப்பருவைப் போக்க..

உங்களுக்கு முகப்பரு அதிகமாக வருமா? அப்படியானால் ஒரு டேபிள் ஸ்பூன் மசூர் பருப்பு பொடியுடன் 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெய், 1 டீஸ்பூன் கிளிசரின் மற்றும் 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ஒருமுறை போட்டு வந்தால், முகப்பரு பிரச்சனையைத் தடுக்கலாம்.

முதுமையைத் தோற்றத்தை தடுக்க..

முதுமையைத் தோற்றத்தை தடுக்க..

நீங்கள் சருமம் எப்போதும் இளமையாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களா? அதற்காக ஒரு அற்புதமான நேச்சுரல் ஃபேஸ் பேக்கை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியானால் ஒரு பௌலில் மசூர் பருப்பு பொடி மற்றும் கடலை மாவை சமஅளவில் எடுத்து, காய்ச்சாத பாலை ஊற்றி பேஸ்ட் செய்ய வேண்டும். பின் அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின்னர் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.

பொலிவான முகத்திற்கு...

பொலிவான முகத்திற்கு...

தினமும் உங்கள் முகம் பொலிவிழந்து இருக்கிறதா? அப்படியானால் சருமத்தை பொலிவாக்க, மசூர் பருப்பு பொடியுடன், எண்ணெய் பசை சருமத்தினராக இருந்தால், சில துளிகள் வெள்ளை வினிகர் மற்றும் சிறிது நீர் சேர்த்து பேஸ்ட் செய்ய வேண்டும். அதுவே வறட்சியான சருமத்தைக் கொண்டவரானால், மசூர் பருப்பு பொடியுடன் தேன் சேர்த்து பேஸ்ட் செய்ய வேண்டும். அதுவே சாதாரண சருமத்தைக் கொண்டவரானால், தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்ய வேண்டும். பின் அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

சரும கருமையை நீக்க...

சரும கருமையை நீக்க...

சரும கருமையை நீக்க வேண்டுமானால், மசூர் பருப்பு பொடியுடன் காய்ச்சாத பச்சை பால் சேர்த்து பேஸ்ட் செய்ய வேண்டும். பின் அதை முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின்னர் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்தின் நிறம் மேம்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Face Masks Using Masoor Dal

Here are some homemade face masks using masoor dal to improve your beauty. Read on to know more...
Story first published: Tuesday, November 22, 2022, 20:20 [IST]
Desktop Bottom Promotion