For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெயில், குளிர் ரெண்டுக்குமே முகம் கருத்துப்போகுதா?... இந்த பொடிய தேய்ங்க நல்ல கலராகிடுவீங்க...

பாசிபயறு பார்ப்பதற்கு நல்ல பச்சை கலரில் இருக்கும். இந்த பருப்பில் நிறைய புரோட்டீன்கள் உள்ளன. இது சமைப்பதற்கு மட்டும் அல்ல உங்கள் முகத்திற்கு நல்ல சிவப்பழகை கொடுக்கவும் பயன்படுகிறது.

|

பாசிபயறு பார்ப்பதற்கு நல்ல பச்சை கலரில் இருக்கும். இந்த பருப்பில் நிறைய புரோட்டீன்கள் உள்ளன. இது சமைப்பதற்கு மட்டும் அல்ல உங்கள் முகத்திற்கு நல்ல சிவப்பழகை கொடுக்கவும் பயன்படுகிறது. இதை முகத்தில் அப்ளே செய்து வந்தால் நல்ல பொலிவையும் ஆரோக்கியமான சருமத்தையும் கொடுக்கும்.

remedies for skin tan in tamil

Image Courtesy

அது மட்டுமல்லாமல் பருக்களால் ஏற்படும் தழும்புகள், கரும் புள்ளிகள், வெயிலால் ஏற்படும் கருமை, நிறத்திட்டுகள் போன்ற எல்லா பிரச்சினைகளையும் எந்த வித செலவும் இல்லாமல் இந்த ஒரு பொருளை கொண்டே விரட்டி அடித்திடலாம்.

இங்கே இந்த பாசிபயறு கொண்டும் தயாரிக்கும் பேஸ் பேக்குகள் பற்றி பார்க்க போகிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எப்படி பயன்படுகிறது

எப்படி பயன்படுகிறது

நமது சருமத்திற்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. களைப்படைந்த முகத்திற்கு புத்துயிர் அளிக்க கூடியது. இது ஒரு ஸ்க்ரப் மாதிரி செயல்பட்டு சருமத்தின் மேல் உள்ள இறந்த செல்களை நீக்குகிறது. ரெம்ப போட்டு சருமத்தில் தேய்க்காதீர்கள். ஏனென்றால் எரிச்சல், வறட்சி உருவாகும்.

சருமத்தில் உள்ள அழுக்கை போக்கி சருமத்தை சுத்தம் செய்ய உதவுகிறது.

சூரிய ஒளியால் ஏற்படும் கருமை, சரும நிற மாற்றம், பருக்கள் ஏன் முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கக் கூட இது பயன்படுகிறது.

பாசிபயறு பொடி தயாரிப்பது எப்படி

பாசிபயறு பொடி தயாரிப்பது எப்படி

Image Courtesy

இந்த பாசிபயறு பொடியை நீங்கள் வீட்டிலேயே தயாரிக்கலாம். அதை ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து சில மாதங்களுக்கு கூட பயன்படுத்தி கொள்ளலாம்.

கொஞ்சம் பாசிபயறு எடுத்து மிக்சியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும். கொஞ்சம் கொரகொரப்பாக இருக்கலாம். இதை அப்படியே ஒரு காற்று புகாத டப்பாக்களில் அடைத்து வைத்து கொள்ளுங்கள். பிறகு தேவைப்படும் போது பயன்படுத்தி கொள்ளுங்கள்.

தண்ணீர் எதாவது பட்டு விட்டால் பொடி கெட்டு விடும். எனவே எடுக்கும் போது கைகளில் தண்ணீர் இல்லாதவாறு பார்த்து கொள்ளுங்கள்.

இறந்த செல்களை நீக்குதல்

நாம் தினமும் வெளியே செல்லும் போது நிறைய தூசிகள், மாசுகள் மற்றும் வெயில் போன்றவை நம் சருமத்தை பாதிப்படைய செய்கின்றன. எனவே ஒவ்வொரு நாளும் நம் முகத்தை புத்துணர்ச்சியாக்குவது முக்கியம். இதற்கு மசூர் பொடி மற்றும் பால் சேர்ந்த பேக் போதும். இது சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை கொடுத்து சருமத்தை புதுப்பிக்கிறது.

ஈரப்பதம் உண்டாக

ஈரப்பதம் உண்டாக

Image Courtesy

தேவையான பொருட்கள்

1டேபிள் ஸ்பூன் பாசிபயறு பொடி

1 டேபிள் ஸ்பூன் பால்

பயன்படுத்தும் முறை

மேலே குறிப்பிட்டுள்ள இரண்டையும் ஒன்றாக கலந்து நன்றாக பேஸ்ட் மாதிரி ஆக்கிக் கொள்ளவும். இதை சருமத்தில் தடவி வட்ட இயக்கத்தில் ஸ்க்ரப் செய்ய வேண்டும். உங்கள் நெற்றி, கன்னெலும்புகள், கன்னம் போன்ற பகுதிகளில் 5 நிமிடத்திற்கு மசாஜ் செய்ய வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவுங்கள். வறண்ட சருமம் உடையவர்கள் வாரத்திற்கு ஒரு முறையும் எண்ணெய் சருமம் உள்ளவர்கள் வாரத்திற்கு இரண்டு முறை எனவும் செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

சரும நிறத்திட்டுகளை அகற்றுதல்

சரும நிறத்திட்டுகளை அகற்றுதல்

இந்த பேஸ் பேக் சருமத்தில் உள்ள நிறத்திட்டுகளை நீக்குகிறது. தேன் சருமத்திற்கு நல்ல மாய்ஸ்சரைசர் மாதிரி செயல்படுகிறது. பாசிபயறில் உள்ள புரோட்டீன் முகத்திற்கு நிறத்தையும், தேன் சருமம் வயதாகுவதையும் தடுக்கிறது.

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் பாசிபயறு பொடி

1 டேபிள் ஸ்பூன் தேன்

பயன்படுத்தும் முறை

மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு பொருட்களையும் நன்றாக கலந்து முகத்தில் தடவி சிறுது நேரம் வைத்து இருங்கள்

15 நிமிடங்கள் கழித்து கழுவி நன்றாக உலர்த்தி கொள்ளுங்கள். சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சரும நிறமேறும்.

முகம் சிவப்பாக பேக்

முகம் சிவப்பாக பேக்

பாசிபயறு உங்கள் முகத்திற்கு சிவப்பழகையும் பொலிவையும் கொடுக்கும். கடலை மாவு, மஞ்சள் சேர்ந்த கலவை நல்ல ஆயுர்வேதிக் முறையாகும். இது உங்கள் சரும பிரச்சினைகளை போக்கி சருமத்தை பொலிவு பெறச் செய்யும். இந்த பேக் சரும பருக்கள், வெயிலில் ஏற்பட்ட கருமை போன்றவற்றை போக்கி சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதை ஒரு நாள் ஒரு நாள் பயன்படுத்தி வாருங்கள். உங்கள் முகம் மட்டுமல்ல உடலில் உள்ள எந்த பகுதியிலும் சரும கருமையை போக்க பயன்படுகிறது.

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் பாசிபயறு பவுடர்

1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு

1 டேபிள் ஸ்பூன் யோகார்ட்

2-3 அளவு கொஞ்சமாக மஞ்சள்

பயன்படுத்தும் முறை

எல்லா பொருட்களையும் நன்றாக பேஸ்ட் மாதிரி கலந்து கொள்ளவும்.

இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி உலர விடுங்கள். உள்ளங்கைகளில் கொஞ்சம் தண்ணீர் கொண்டு அந்த பேஸ்ட்டை நன்றாக ஸ்க்ரப் செய்து விடுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்

பட்டு போன்ற மென்மை

பட்டு போன்ற மென்மை

செவ்வந்தி பூவில் நிறைய ஆன்டி செப்டிக் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் உள்ளன. இது சீக்கிரம் உங்கள் முகத்தில் உள்ள பருக்களை மறையச் செய்து பொலிவான சருமத்தை கொடுக்கும். இதில் சேர்க்கப்படும் ரோஜா இதழ்கள் உங்கள் சருமத்திற்கு நல்ல கலரை கொடுக்கும். இந்த பேக் எல்லா சருமத்திற்கும் ஏற்றது.

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் பாசிபயறு பவுடர்

1 செவ்வந்தி பூ

சில ரோஜா இதழ்கள்

பயன்படுத்தும் முறை

பூவின் காம்பை நீக்கி விட்டு இதழ்களை மட்டும் எடுத்து கொள்ளுங்கள். அதனுடன் ரோஜா இதழ்களையும் சேர்த்து நன்றாக நசுக்கி கொள்ளுங்கள்.

இதனுடன் பாசிபயறு சேர்த்து கலந்து முகத்தில் அப்ளே செய்யவும்

10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும்.

தேவையற்ற முடிகளை நீக்க

தேவையற்ற முடிகளை நீக்க

பெண்களுக்கு முகத்தில் உதட்டிற்கு மேல் மற்றும் கீழ் பகுதிகளில் தேவையற்ற முடிகள் தோன்றி இருக்கும். இது பார்ப்பதற்கு உங்களுக்கு ஒரு அசெளகரியத்தை ஏற்படுத்தும். எனவே இந்த தேவையற்ற முடிகளை நீக்குவதோடு அதை வளர விடாமல் செய்யவும் பாசிபயறு பேக் உதவுகிறது. இதை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது இந்த பூனை முடிகள் வலுவிழந்து உதிர்வதை நீங்கள் பார்க்கலாம். அப்படியே கூடிய விரைவில் அதன் வளர்ச்சியும் நின்று விடும்.

தேவையான பொருட்கள்

1 டேபிள் ஸ்பூன் பாசிபயறு பவுடர்

1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு

1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு

1 டேபிள் ஸ்பூன் பால்

2-3 சொட்டுகள் பாதாம் எண்ணெய்

பயன்படுத்தும் முறை

ஒரு பெளலை எடுத்து அதில் பாசிபயறு பவுடர், கடலை மாவு, அரிசி மாவு இவற்றை கலந்து கொள்ளுங்கள்.

இதனுடன் பால் மற்றும் பாதாம் எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள். கலவை கட்டியாக இருந்தால் இன்னும் கொஞ்சம் பால் சேர்க்கவும்.

முகத்தில் தடவி 5 நிமிடங்கள் வலை காய வைக்கவும்.

இப்பொழுது அதை வட்ட இயக்கத்தில் ஸ்க்ரப் செய்து விடுங்கள். மறுபடியும் 5 நிமிடங்கள் காத்திருக்கவும்.

பிறகு குளிர்ந்த நீரில் கழுவி முகத்தை நன்றாக துடைத்து விடுங்கள்.

கொஞ்சம் நாட்களில் முகத்தில் உள்ள தேவையற்ற முடி உதிர்ந்து விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to remove tan with gram dal? Fairness with gram dal

Gram flour is an ingredient remedy for a host of skin issues that has been passed on through generations as the secret.
Story first published: Monday, July 23, 2018, 17:56 [IST]
Desktop Bottom Promotion