என்றுமே சுருக்கமில்லா முகத்தோடு இருக்க தினசரி நீங்க யூஸ் பண்ண வேண்டிய மஞ்சள் ஃபேஸ் பேக்!

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

உலகம் முழுவதும் ஒத்துக் கொண்ட ஒரு விஷயம் என்னவென்றால் மஞ்சள் சருமத்திற்கு மிகவும் சிறந்தது. இருப்பினும் எல்லாருக்கும் ஏற்படும் ஒரு குழப்பம் இதை எப்படி சருமத்திற்கு பயன்படுத்துவது என்பது தான் .

மஞ்சள் அழகு சாதனப் பொருட்களில் சிறந்த ஒன்று. இது முகச்சுருக்கத்தை போக்கக் கூடியது. முகப்பருக்களை போக்கி முகத்தௌ பளிச்சிட வைக்கும் .

சில பெண்கள் இதை தினமும் குளிக்கும் போது பயன்படுத்தி வருகின்றனர். இந்த மஞ்சளை உங்கள் அழகு பராமரிப்பு பட்டியயலில் சேர்ப்பதற்கு முன் அதன் பயன்பாட்டை அறிந்து கொள்வது மிகவும் அவசியம். இங்கே அதன் பயன்பாட்டை பற்றிய சில தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன வாங்க பார்ப்போம்.

மஞ்சள் பாலின் திகைக்க வைக்கும் 15 நன்மைகள்!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஞ்சளின் நன்மைகள்

மஞ்சளின் நன்மைகள்

மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் உங்கள் சருமத்தை பளிச்சிட செய்கிறது. சருமத்தில் உள்ள காயங்கள் மற்றும் அழற்சிகளை இதில் உள்ள கெமிக்கல் பொருளான குர்குமின் சரி பண்ணுகிறது.

மஞ்சள் முகத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதை கட்டுப்படுத்துகிறது. எனவே எண்ணெய் சருமத்தால் பாதிக்கப்படுபவர்களுக்கு உகந்தது இதன் பயன்பாடு முகத்திற்கு மட்டுமில்லாமல் தோள்பட்டை, மூட்டுகள், கழுத்து போன்றவற்றிற்கும் பயன்படுகிறது.

இது ஒரு ஆன்டி ஏஜிங் பொருள் என்பதால் நீங்கள் பயன்படுத்தினால் சருமம் வயதாவது தடுக்கப்படும்.

இந்த அளவுக்கு இதன் பயன்பாடு எல்லையில்லாதது. கண்டிப்பாக உங்களுக்கு இப்பொழுது மஞ்சளின் முக்கியத்துவம் புரிந்து இருக்கும் என நினைக்கிறேன். சரி வாங்க இப்பொழுது இந்த மஞ்சளை பயன்படுத்தி பேஸ் பேக்ஸ் எப்படி தயாரிக்கலாம் என்று பார்ப்போம் இந்த பேஸ் பேக்ஸ்யை தினமும் பாதிக்கப்பட்ட இடத்தில் பயன்படுத்தி வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

முகப்பரு சருமத்திற்கு :

முகப்பரு சருமத்திற்கு :

1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இதற்கு ஸ்பூன் மற்றும் நேரம் தேவைப்படும். கலவையில் உள்ள கற்றாழை ஜெல் மஞ்சள் நிறம் ஆகும் வரை காத்திருக்க வேண்டும். பிறகு உங்கள் முகத்தில் பருக்கள் பகுதியில் தடவ வேண்டும். இந்த பேஸ் பேக் உங்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும். நன்றாக காய்ந்ததும் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

சென்ஸ்டிவ் சருமம்

சென்ஸ்டிவ் சருமம்

முதலில் சந்தனப் பொடியை தண்ணீர் விட்டு நன்றாக பேஸ்ட் ஆக்கி கொள்ள வேண்டும்.

பிறகு 2 டேபிள் ஸ்பூன் சந்தன பேஸ்ட்டுடன் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலந்து அதை முகத்தில் தடவி 15 - 20 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த அல்லது வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.

வறண்ட சருமம்

வறண்ட சருமம்

இது வறண்ட சருமத்திற்கு தேவையான ஈரப்பதத்தை தரும் பேஸ் பேக் ஆகும். முதலில் ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக அடித்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து கலவை மஞ்சளாகும் வரை காத்திருக்க வேண்டும். பிறகு இதை முகத்தில் தடவி உலர விட்டு குளிர்ந்த நீரில் கழுவவும்.

சரும கருமையை போக்குதல்

சரும கருமையை போக்குதல்

சரும நிறப் பிரச்சினைக்கு இந்த மூன்று பொருட்களும் மிகவும் சிறந்தது. 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவவும்.

 உடனடி நிறத்திற்கு

உடனடி நிறத்திற்கு

மஞ்சளில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருள் உங்கள் சருமத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. பேக் செய்வதற்கு 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் கடலை மாவு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் இருக்க வேண்டும்.

உலராமல் இருப்பதற்கு பால் அல்லது ரோஸ் வாட்டரை முகத்தில் பிரஷ் அல்லது கைகளை பயன்படுத்தியோ தடவ வேண்டும். பிறகு நீரில் கழுவினால் உங்களின் நிறம் மேம்பட்டு இருக்கும்.

எண்ணெய் சருமம்

எண்ணெய் சருமம்

இந்த பேக் எண்ணெய் சருமத்திற்கு உகந்தது. 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள்,2 டேபிள் ஸ்பூன் பால் கலந்து முகத்தில் தடவ வேண்டும். பாலின் அளவு உங்கள் தேவைக்கேற்றது. இதை நன்றாக உலர வைத்து பிறகு நீரில் கழுவி விட வேண்டும்.

சீரற்ற சருமம்

சீரற்ற சருமம்

உங்கள் சருமம் வறண்டு சீரற்ற தோற்றத்துடன் காணப்பட்டால் அதற்கு இது பயன்படுகிறது. 1 டேபிள் ஸ்பூன் தேன், 1 டேபிள் ஸ்பூன் ரோஸ் வாட்டர் அதிகமான மஞ்சள் தூள் சேர்த்து முகத்தில் பேக் போட்டு உலர வைத்து 20 நிமிடங்கள் கழித்து நீரில் கழுவ வேண்டும்.

பருவிற்கு

பருவிற்கு

உங்கள் முகத்தில் ஏற்படும் பருக்களை குணப்படுத்த இந்த பேக் உதவுகிறது.முதலில் வேப்பிலையை மிக்ஸியில் போட்டு பேஸ்ட்டாக அரைத்து கொள்ளவும். பிறகு இதனுடன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி உலர வைத்து நீரில் கழுவ வேண்டும். இந்த பேக் உங்கள் பருக்கள் விரைந்து செயல்பட்டு நல்ல பலனை கொடுக்கும்.

கருமைக்கு :

கருமைக்கு :

நீண்ட நாட்களாக சருமம் கருப்பாக இருக்கிற பிரச்சினை இருந்தால் அதற்கு இது தீர்வாகும். கண்டிப்பாக இது உங்கள் சருமத்தை வெள்ளையாக்கி பொலிவானதாகவும் மாற்றும்.

இதற்கு 1/2 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர், 1/2 டேபிள் ஸ்பூன் லெமன் ஜூஸ் போன்றவற்றை கலந்து பேக் போட்டு 30 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும். பிறகு குளிக்கலாம் அல்லது நீரில் கழுவி விடலாம்.

சரும ஈரப்பதத்திற்கு

சரும ஈரப்பதத்திற்கு

2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால், 1 டேபிள் ஸ்பூன் புதினா இலை பேஸ்ட் , 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் எல்லாவ கலந்து கெட்டியாக பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவி 20 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும். பிறகு நீரில் கழுவ வேண்டும்.

இந்த பேஸ் பேக்குகளில் உங்களுக்கு தகுந்த முறையை பயன்படுத்தி பயன்பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Easy To Make Turmeric-based Face Packs For Everyday Use

10 Easy To Make Turmeric-based Face Packs For Everyday Use
Story first published: Monday, July 3, 2017, 9:00 [IST]