வெயில் காலம் வந்தாச்சு! உங்கள் அழகை எப்படி தக்க வைக்கலாம்?

By: Divyalakshmi Soundarrajan
Subscribe to Boldsky

குளிர் காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பமாகப் போகிறது. கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் வழக்கத்திற்கு மாறாக அதிகமாகவே இருக்கும். அதில் இருந்து தப்பிக்க நம் உடலுக்கு மட்டுமல்ல நம் சருமத்திற்கும் சேர்த்து அக்கரை எடுத்துக்கொள்ள வேண்டும். நம் சருமத்தை கவனிக்காமல் விட்டால் வெயிலின் தாக்கத்தால் சருமம் கருத்துவிடும்.

Simple tricks to take care of your skin in summer

அதிகப்படியாக வெயிலில் சுற்றுவதால் புறஊதாக்கதிர்களின் தாக்கத்தினால் தோல் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கோடைகாலப் பிரச்சனைகளான முகப்பரு, கருத்த சருமம் மற்றும் சரும வறட்சி போன்றவை ஏற்படக்கூடும். எனவே, கோடை வெயிலில் இருந்து நம் சருமத்தை பாதுகாக்க வேண்டியது மிக அவசியமாகும்.

வாருங்கள் இப்போது சில எளிமையான சருமப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பார்ப்போம்... அடிக்கடி முகம் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகம் கழுவுதல் :

முகம் கழுவுதல் :

கோடை காலத்தில் முகத்தை அடிக்கடி கழுவ வேண்டும். அதனால், முகத்தில் கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்கள் சேராமல் தவிர்க்கலாம். முகத்தை ஒழுங்கான முறையில் கழுவுவதால் முகத்துளைகளில் அழுக்குகள் படியாமல் சருமத்தை மிருதுவாக வைத்துக்கொள்ள முடியும்.

அழகு சாதனப் பொருட்கள் :

அழகு சாதனப் பொருட்கள் :

கோடை காலத்தில் உபயோகிக்க, அழகு சாதனப் பொருட்களைத் தேர்ந்தெடுக்கும் போது மிகுந்த கவனம் தேவை. அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய அழகு சாதனப்பொருட்களைத் தவிர்ப்பதே நல்லது. இல்லையென்றால் அதுவே முகப்பரு மற்றும் சரும வெடிப்பு போன்றவை ஏற்படத்திவிடும். நீங்கள சரியான அழகு சாதனப் பொருட்களை தேர்வு செய்யவில்லையென்றால் அவை முகத்துளைகளை அடைத்து முகப்பரு ஏற்பட வாய்ப்பை அதிகரித்துவிடும்.

டோனரை தவறாமல் உபயோகிக்கவேண்டும்:

டோனரை தவறாமல் உபயோகிக்கவேண்டும்:

தினமும் காலையில் எழுந்தவுடன் டோனரை கொண்டு முகத்தை சுத்தம் செய்வதால் முகம் பொழிவுடன் இருக்கும். இது முகத்தில் உள்ள அதிகபடியான எண்ணெய் பசையைப் போக்கி, முகத்துளைகளில் அழுக்குகள் படியாமல் காக்கும். சாலிசிலிக் அமிலம் அதிகம் உள்ள டோனரை பயன்படுத்தினால் அது முகப்பரு மற்றும் சரும வெடிப்பில் இருந்து நமது சருமத்தை பாதுகாத்து முகத்தை மிருதுவாக்கும்.

சீழ் பிடித்த முகப்பருக்களுக்கு டீ ட்ரீ ஆயில் உபயோகிக்கலாம் :

சீழ் பிடித்த முகப்பருக்களுக்கு டீ ட்ரீ ஆயில் உபயோகிக்கலாம் :

எவ்வளவு தான் உங்கள் முகத்தை சுத்தமாக வைத்துக் கொண்டாலும் இந்த கொடைகாலத்தில் வேறு பல காரணங்களாலும் முகத்தில் எரிச்சல் ஏற்படக்கூடும். உங்கள் முகத்தை நன்றாக கவனித்துக்கொள்ள வேண்டியது மிக அவசியம்.

முகத்தில் எண்ணெய் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முகப்பரு வருவது போல் இருந்தால் டீ ட்ரீ ஆயிலை பஞ்சில் தொட்டு பருவின் மேல் தடவுங்கள். இது பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை அழித்து சீல் பிடித்த முகப்பருக்கள் வராமல் தடுக்க உதவும்.

 கடுமையான முகப்பருப் பிரச்சனை :

கடுமையான முகப்பருப் பிரச்சனை :

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் பலர் கடுமையான முகப்பரு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். அதற்கு தனி அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். கடுமையான முகப்பரு பிரச்சனைக்கு ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் காப்ஸ்யூல் நல்ல பலன் தருவதாக கூறுகின்றனர்.

வீட்டு வைத்தியம்:

வீட்டு வைத்தியம்:

எத்தனை வைத்தியம் இருந்தாலும் வீட்டு வைத்தியமே சிறந்தது. கோடைகால சருமப் பிரச்சனைக்கு வீட்டு வைத்தியமே மிகச் சிறந்தது. ஈஸியான தேன் ஃபேஸியல் உங்கள் சருமத்தை மிருதுவாகவும், வறட்சி இல்லாமலும் நீண்ட நேரம் வைத்துக் கொள்ளும்.

மேலும், குளிர்ச்சியானப் பொருட்களான வெள்ளரி, எலுமிச்சை, பப்பாளி, ஸ்ட்ராபெரி, மாம்பழம் போன்றவற்றை தொடர்ச்சியாக பயன்படுத்தி வர முகத்திற்கு பொழிவை கொடுக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Simple tricks to take care of your skin in summer

Simple tricks to take care of your skin in summer
Story first published: Tuesday, March 7, 2017, 16:05 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter