20 நிமிடத்தில் வறண்டு, பொலிவிழந்து உள்ள முகத்தை பிரகாசமாக்க வேண்டுமா? இதோ சில எளிய வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

இயற்கை பொருட்கள் சருமத்திலும், தலைமுடியிலும் பல அற்புத மாயங்களை செய்யக்கூடியவை. ஆகவே சருமம் மற்றும் தலைமுடி பிரச்சனைகளுக்கு கெமிக்கல் கலந்த கண்ட கண்ட பொருட்களைப் பயன்படுத்துவதற்கு பதிலாக, இயற்கை பொருட்களைப் பயன்படுத்துங்கள்.

Rice Recipes That Can Help To Treat Dull And Dry Skin

அப்படி சரும பிரச்சனைகளைப் போக்க உதவும் சமையலறைப் பொருட்களுள் ஒன்று தான் அரிசி. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, சரும பொலிவை மேம்படுத்துவதோடு, போதிய நீர்ச்சத்தையும் வழங்கி, சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ளும்.

இங்கு கோடையில் ஏற்படும் சரும வறட்சி மற்றும் பொலிவிழந்து இருக்கும் முகத்தை பிரகாசமாக்க அரிசியைக் கொண்டு எப்படியெல்லாம் சருமத்திற்கு மாஸ்க் போடலாம் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரிசி மற்றும் பால் பவுடர்

அரிசி மற்றும் பால் பவுடர்

ஒரு பௌலில் அரிசி பவுடருடன், பால் பவுடரை சேர்த்து எடுத்து, அத்துடன் 1 ஸ்பூன் தேன் மற்றும் தேவையான அளவு பால் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20-25 நிமிடம் நன்கு உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் போதிய நீர்ச்சத்தைப் பெற்று, நீண்ட நேரம் வறட்சியடையாமல் இருக்கும்.

அரிசி மற்றும் மஞ்சள்

அரிசி மற்றும் மஞ்சள்

அரிசி மாவு மற்றும் மஞ்சள் தூளை சிறிது எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 ஸ்பூன் மில்க் க்ரீம் மற்றும் 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி நன்கு காய்ந்த பின், குளிர்ந்த நீரில் கழுவ, முகம் பிரகாசமாகவும், வறட்சியின்றியும் இருக்கும்.

அரிசி மற்றும் பப்பாளி

அரிசி மற்றும் பப்பாளி

1 துண்டு பப்பாளிப் பழத்தை மசித்து, அத்துடன் 3-4 ஸ்பூன் அரிசி மாவு, 1 ஸ்பூன் தேன் மற்றும் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் கழித்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனால் வறட்சி நீங்குவதோடூ, பருக்களும் மறையும்.

அரிசி மற்றும் க்ரீன் டீ

அரிசி மற்றும் க்ரீன் டீ

1 பௌலில் சாதத்தை எடுத்து நன்கு கையால் பிசைந்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் சிறிது க்ரீன் டீ தயாரித்து எஞ்சியுள்ள இலைகளைப் போட்டு, 1 ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்துக் கழுவ வேண்டும்.

அரிசி, ரோஸ் வாட்டர் மற்றும் தயிர்

அரிசி, ரோஸ் வாட்டர் மற்றும் தயிர்

1 கப் அரிசி மாவுடன், 1 கப் தயிர், 1 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து, கட்டி சேராதவாறு நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

அரிசி மற்றும் பட்டை

அரிசி மற்றும் பட்டை

வறட்சியான சருமம் கொண்டவர்கள், 1 கப் அரிசி மாவுடன், 2 ஸ்பூன் பட்டைத் தூள், 1 ஸ்பூன் கிளிசரின், 1 ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்துக் கழுவ வேண்டும்.

அரிசி மற்றும் கிரான்பெர்ரி ஜூஸ்

அரிசி மற்றும் கிரான்பெர்ரி ஜூஸ்

1 கப் அரிசி மாவுடன், சிறிது கிரான்பெர்ரி ஜூஸ் சேர்த்து, அதோடு 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 ஸ்பூன் எப்சம் உப்பு சேர்த்து நன்கு பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்துக் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இதனால் முகப்பொலிவு மேம்படுவதோடு, முதுமைத் தோற்றமும் தடுக்கப்படும்.

அரிசி மற்றும் ஒயின்

அரிசி மற்றும் ஒயின்

இந்த மாஸ்க்கில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது. இது சரும வறட்சியைப் போக்குவதோடு, நல்ல நிறத்தையும் வழங்கும். அதற்கு சிறிது அரிசி மாவுடன், 1 ஸ்பூன் சந்தன பவுடர் மற்றும் 1 ஸ்பூன் தேன் ஆகியவற்றை சேர்த்து, ஒயின் ஊற்றி பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Rice Recipes That Can Help To Treat Dull And Dry Skin

The combination of rice and other ingredients are the best to treat dry and dull skin.
Story first published: Monday, March 20, 2017, 14:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter