For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கழுத்தில் உள்ள கருமையை சீக்கிரமாக போக்க சூப்பர் டிப்ஸ்!

கழுத்தில் உள்ள கருமையை போக்குவது எப்படி

By Lakshmi
|

க்ரீம்களை பயன்படுத்துவதாலும், செயின் போடுவது, சூரிய ஒளிபடுவதாலும், கழுத்து பகுதி கருமையாக காணப்படுகிறது. கழுத்து பகுதி கருமையாக இருந்தால் முக அழகே சீரழிந்து போய்விடும். இந்த கழுத்து கருமையை போக்க இந்த பகுதியில் சில குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை

எலுமிச்சை

3 டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சளை சமஅளவு கலந்து அதனுடன் தேவைப்பட்டால் சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்துக் கொள்ளலாம்.

இதை இரவு நேரத்தில் கருமையான பகுதியில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவினால் சருமம் பளிச்சென்று இருக்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ் பொடியுடன் சிறிதளவு தக்காளி ஜீஸை கலந்து பேஸ்டாக செய்து, கழுத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து நன்றாக கழுவ வேண்டும்.

ஆரஞ்சு

ஆரஞ்சு

ஆரஞ்சுப் பழத்தில் உள்ள விட்டமின் C நமது சரும அழகை மேம்படுத்துகிறது. எனவே உலர்த்திய ஆரஞ்சு தோலில் செய்த பொடியுடன், 1 டேபிள் டீஸ்பூன் பால் அல்லது தயிரை கலந்து, கழுத்தின் கருமைப் பகுதியில் தடவி, 20 நிமிடம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

தேன்

தேன்

1 டேபிள் ஸ்பூன் பால் பவுடர் மற்றும் அரை டீஸ்பூன் பாதாம் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவு கலந்து பேஸ்ட் போல செய்து முகம் மற்றும் கருமை நிறைந்த கழுத்துப் பகுதியில் தேய்த்து, 15 நிமிடம் கழித்து கழுவினால் நம் முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீக்கப்பட்டு, முகம் பொலிவாக இருக்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா, இயற்கையாகவே கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. எனவே 1 டீஸ்பூன் அளவு பேக்கிங் சோடாவுடன் சமஅளவு தண்ணீர் சேர்த்து முகம் அல்லது உடம்பு முழுவது தடவி 20 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும். மேலும் இதை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறைகள் செய்யலாம்.

தக்காளி

தக்காளி

தக்காளி இயற்கையாகவே மருத்துவ குணம் நிறைந்தது. எனவே இந்த தக்காளியின் சாறை எடுத்து கருமை நிறம் அதிகமான இடத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவ வேண்டும். பின் இதே போல் தினமும் செய்து வந்தால், கருமை நீங்கி சருமம் பளபளப்பாக இருக்கும்.

பப்பாளி

பப்பாளி

பப்பாளி பழத்தை நாம் தினமும் சாப்பிட்டு வந்தாலே நமது சருமம் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் பப்பாளி பழத்தின் சாறு மற்றும் எலுமிச்சைப் பழத்தின் சாறு ஆகிய இரண்டையும் சமஅளவு கலந்து கருமை இருக்கும் இடத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து சுத்தமான நீரில் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to remove tan in neck

How to remove tan in neck
Desktop Bottom Promotion