கருவளையம் சீக்கிரம் மறைய என்ன செய்யலாம்?

Written By:
Subscribe to Boldsky

கருவளையம் கண்களை மட்டுமல்லாது முக அழகையும் கெடுக்கும். வயதான தோற்றத்தை தரும். கருவளையத்திற்கு மிக முக்கிய காரணம் தூக்கமின்மையே.

அதன் பின் அதிக நேரம் மொபைல், டிவி பார்ப்பது. கவலைகள், மாத்திரகள் என பலவிதமன காரணங்களாலும் கருவளையம் உண்டாகிறது.

எத்தனையோ குறிப்புகளை பயன்படுத்தியிருப்பீர்கள். இருப்பினும் சரியாகவில்லையா. இங்கே சொல்லப்பட்டிருக்கும் குறிப்புகள் விரைவில் பலன் தரும். செய்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அரிசி மற்றும் கருஞ்சீரகம் :

அரிசி மற்றும் கருஞ்சீரகம் :

அரிசி, கருஞ்சீரகம் தலா 2 ஸ்பூன் எடுத்து அரை கிளாஸ் நீரில் போட்டு கொதிக்க வையுங்கள். பின் அந்த நீரை ஆற வைத்து வடிகட்டிக் கொள்ளுங்கள். இந்த நீரில் ரோஸ் வாட்டரை கலந்து இந்த நீரை பஞ்சினால் தொட்டு கண்கலில் வைக்கவும். தினமும் இரவில் செய்து வந்தால் வேகமாக கருவளையம் மறையும்.

சாமந்தி இதழ் :

சாமந்தி இதழ் :

நீரை ஒரு பாத்திரத்தில் எடுத்து நன்றாக கொதிக்க வையுன்ங்கள் பின் அடுப்பை அணைத்து அதில் சாமந்தி இதழ்களை போட்டு மூடி வைக்கவும் அதனை அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து அவ்வப்போது பஞ்சினால் கண்கலீல் ஒற்றிக் கொள்ளுங்கள். உடனடியாக பலன் தரும்.

 தாமரை பூ :

தாமரை பூ :

தாமரை பூ இதழை தண்ணி விடாமல் அரைத்து அதனுடன் விளக்கெண்ணெய் மற்றும் தேன் 1 ஸ்பூன் கலந்து 7 மணி நேரம் அறை வெப்பத்திலேயே வைத்திருங்கள். பின்னர் அதனை ஃப்ரிட்ஜில் வைத்து, இரவுகளில் இந்த கலவையை கண்களை சுற்றியும் போடுங்கள்.

முள்ளங்கி பீட்ரூட் :

முள்ளங்கி பீட்ரூட் :

முள்ளங்கி, பீட்ரூட் மற்றும் கேரட் சாறை சம அளவு எடுத்து அதனை கண்களை சுற்றியும் தடவுங்கள். தினமும் செய்தால் ஒரே வாரத்தில் பலனை காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to get rid of dark circle

Effective remedies to get rid of dark circle,
Story first published: Wednesday, February 1, 2017, 8:15 [IST]
Subscribe Newsletter