முழங்கை மற்றும் முழங்கால் கருமையை போக்கும் உபயோகமான வழிகள்

By: Ambika Saravanan
Subscribe to Boldsky

தெரிந்தோ தெரியாமலோ வெள்ளை நிற சருமம் நமக்கு ஒரு தன் நம்பிக்கையை கொடுக்கிறது. வெள்ளை நிறத்தில் சருமம் இருக்கும்போது கருமையான கை மற்றும் கால் முட்டிகள் இந்த தன்னம்பிக்கையை இழக்கச் செய்கிறது. இந்த பாகத்தையும் மற்ற பாகத்தை போல் வெண்மையாக்க நாம் பலரும் பல முறைகளை பின்பற்றுகிறோம்.

Home remedies for dark elbow and knees

எவ்வளவோ செலவு செய்து பல ஒப்பனை பொருட்களை வாங்கி கருமை நிறத்தை மறைக்கிறோம். ஆனால் இந்த கருமையை போக்க நமது சமயலறையில் இருக்கும் பொருட்களே போதுமானது. வாருங்கள்! அவை என்னென்ன பொருட்கள் என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய்யை கை மற்றும் கால் முட்டிகளில் தடவி வர வேண்டும். இதனால் அதன் கருமை நிறம் நாளடைவில் மாறும்.

ஆலிவ் எண்ணெய்யை முட்டிகளில் தடவுவதால் மற்ற இடங்கள் போல இவையும் வெண்மையாகும். இரண்டையும் கலந்து கைகளில் தேய்க்கலாம்.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சை சாறு:

முழங்கை மற்றும் கால் முட்டிகளில் எலுமிச்சை சாற்றை தடவி வர சில நாட்களில் நீங்கள் நினைத்தபடி உங்கள் முட்டிகள் வெண்மையாகும்.

பாதி அறிந்து சிறிதளவு பிழிந்த எலுமிச்சை பழத்தில், சர்க்கரையை தூவி கொள்ள வேண்டும். சர்க்கரை சேர்த்த எலுமிச்சை பழத்தோலை கொண்டு கை மற்றும் கால் முட்டிகளில் நன்றாக தேய்க்க வேண்டும். 1 வாரம் இதனை தொடர்ந்து செய்வதால் நல்ல பலன் கிடைக்கு

பாதாம் பவுடர் மற்றும் யோகர்ட் :

பாதாம் பவுடர் மற்றும் யோகர்ட் :

பாதாம் பவுடருக்கு தோல் உரிக்கும் தன்மை உண்டு. யோகர்டுக்கு இயற்கையாகவே சுத்தம் செய்யும் தன்மை உண்டு. ஆகவே இவை இரண்டையும் சேர்த்து பேஸ்ட் போல் செய்து கைகளிலும் கால்களிலும் தடவுவதால் விரைவில் கருமை நிறம் மறையும்.

எலுமிச்சை மற்றும் உப்பு:

எலுமிச்சை மற்றும் உப்பு:

எலுமிச்சை சாறுடன் சிறிதளவு உப்பு சேர்த்து முட்டிகளில் தடவினால் நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். பேக்கிங் சோடாவுடன் எலுமிச்சை சாறை சேர்த்தால் ஒரு இயற்கை ப்ளீச் கிடைக்கும். இது முழங்கால் மற்றும் முழங்கையின் கருமை நிறத்தை மாற்றி நல்ல பொலிவை கொடுக்கும்.

கடலை மாவு மற்றும் தயிர்:

கடலை மாவு மற்றும் தயிர்:

இயற்கை முறையில் சருமத்தை மென்மையாக்க கடலை மாவை பயன்படுத்தலாம். இதனுடன் தயிர் சேர்த்து சருமத்தில் தடவுவதால் சருமம் மேலும் அழகாகும். கை மற்றும் கால் முட்டிகளின் நிறம் மாறி அழகு பெறும் .

பால் மற்றும் மஞ்சள் தூள்:

பால் மற்றும் மஞ்சள் தூள்:

பாலுடன் மஞ்சள் தூள் சேர்த்து முட்டிகளில் தடவும்போது அதன் கருமை நிறம் விலகி தோலின் இயற்கையான நிறம் கிடைக்கும்.

படிகக் கல்:

படிகக் கல்:

படிக கல்லிற்கு தோலை உரிக்கும் தன்மை உள்ளது. கருமை நிறம் அதிகமாக இருக்கும் கை மற்றும் கால் முட்டிகளில் இந்த கல்லை கொண்டு மெதுவாக தேய்த்தால் கருமை நிறம் விலகும்.

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காய்:

வெள்ளரிக்காயை வெட்டி உங்கள் முழங்கால் மற்றும் முழங்கையில் வைப்பதால் அதன் நிறம் மாறும். அல்லது வெள்ளரிக்காய் ஜூஸ் செய்து முட்டிகளில் தடவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

சந்தன தூள் மற்றும் மஞ்சள் தூள்:

சந்தன தூள் மற்றும் மஞ்சள் தூள்:

மஞ்சள் மற்றும் சந்தன தூளை எடுத்து சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து முழங்கை மற்றும் முழங்காலில் தடவி வந்தால் விரைவில் அதன் கருமை நிறம் மாறும். முட்டிகள் பார்ப்பதற்கு அழகாக தோன்றும்.

மேலே கூறிய முறைகளை பின்பற்றி முழங்கை மற்றும் முழங்காலின் கருமையை போக்கி அழகை கூட்டுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home remedies for dark elbow and knees

Home remedies for dark elbow and knees
Subscribe Newsletter