முதுமையான சருமமா உங்களுக்கு ? இளமையாக மாற்றும் ஃபேஸியல் சீரம் பற்றி தெரியுமா

Posted By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

சீரம் என்பது தற்போது மார்க்கெட்டில் புகழ்பெற்று வரும் பியூட்டி பொருளாகும். உங்கள் முகத்திற்கு லேயரிங் மேக்கப் போட்டாலும் அது உங்களுக்கு 100% திருப்தியை தர முடிவதில்லை.

முந்தைய நாட்களில் மாய்ஸ்சரைசர் மற்றும் ஆன்டி ஏஜிங் க்ரீம் போன்றவற்றை தான் பயன்படுத்தி வந்தோம் .ஆனால் இப்பொழுது உங்கள் அழகை அதிகபட்சமாக அழகூட்டத்தான் இந்த பியூட்டி சீரம் மார்க்கெட்டில் களமிறங்கியுள்ளது.

வெந்தயத்தை எப்படி சரும அழகை மெருகூட்ட பயன்படுத்துவது?

இந்த சீரம் உங்கள் முகத்திற்கு தேவையான அசத்தும் அழகையும், ஆரோக்கியமான பொலிவையும் இரண்டே இரண்டு பம்ப்ஸ் அளவிலேயே தந்து விடுகிறது. சீரம் உங்கள் மாய்ஸ்சரைசர் இடத்தை மட்டும் பூர்த்தி செய்யாமல் அதற்கு மேலும் அதன் நன்மைகள் நீள்கிறது.

சீரம் ஒரு சக்தி வாய்ந்த பியூட்டி பொருளாகும். இது உங்கள் முகத்திற்கும், மாய்ஸ்சரைசர் அல்லது சன்கீரீன் லேயரிங்க்கும், நைட் க்ரீமாகவும் செயல்பட்டு பவர்புல் அழகை தருகிறது.

சீரம் நீர்ம நிலை பொருள் என்பதால் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின்கள் எளிதாக சருமத்தில் ஊடுருவி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

 All You Need To Know About Facial Serum In Beauty Care

இருப்பினும் ஆயில் டைப் சீரமும் மார்க்கெட்டில் விற்கப்படுகின்றன. ஆனால் லைட் ஆயில்ஸ் சீரம் மிகவும் புகழ் பெற்றதாகவும் எல்லாராலும் விரும்பக் கூடியதாகவும் உள்ளது. சீரத்தை மாய்ஸ்சரைசருக்கு லேயரிங்காக பயன்படுத்தும் போது அதிக அளவு மாய்ஸ்சரைசர் பயன்படுத்தாவிட்டால் சீரத்தின் ஆக்டிவ் பொருட்கள் செயலிழந்து விடுகின்றன.

சீரமும் மாய்ஸ்சரைசரையும் சேர்த்து லேயரிங் பண்ணும் போது பொருட்களின் அடர்த்தி மிகவும் முக்கியமானது. முதலில் அடர்த்தி குறைந்த லைட் பொருட்களை லேயரிங் செய்து அப்புறம் அடர்த்தி அதிகமான பொருட்களை லேயரிங் செய்ய வேண்டும்.

இந்த சீரத்தை நீங்கள் பகல் நேரத்தில் அல்லது மாலையில் எப்பொழுது வேண்டுமானாலும் உங்கள் விருப்பத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். இரவில் படுப்பதற்கு முன் பயன்படுத்தினால் காலையில் பயன்படுத்த தேவையில்லை.

இந்த சீரம் எல்லாருக்கும் தேவையில்லை. உங்கள் முகத்திற்கு கூடுதல் பராமரிப்பு தேவை என்று நினைத்தால் மட்டுமே இதை பயன்படுத்தலாம். இப்பொழுது உங்கள் முகம் தற்போதுள்ள அழகுப் பொருட்களால் அழகாக இருந்தால் அதுவே போதுமானது. உங்களுக்கு அதில் திருப்தி இல்லை என்றால் சீரம் மிகவும் சிறந்தது.

மார்க்கெட்டில் 6 வகையான சீரம் இருக்கின்றன.

 All You Need To Know About Facial Serum In Beauty Care

ஆன்டி ஏஜிங் சீரம்

இதில் ரெட்டினால் உள்ளது. சரும கோடுகள், சரும சுருக்கம் போன்ற வயதாகும் பிரச்சினைகளை சரி செய்கிறது.

எக்ஸ்ப்லேட்டிங் சீரம்

இதில் உள்ள கிளைகோலிக் மற்றும் சாலிசைகிளிக் அமிலம் சருமத்தில் உள்ள இறந்த செல்களை ஒரு நாள் இரவிலே போக்கிவிடுகிறது.

பிரைட்டனிங் சீரம்

இதில் கோஜிக் உள்ளது. சருமத்தில் உள்ள திட்டுகளை போக்கி சருமத்தை பொலிவான நிறமாக்குகிறது.

ஹைட்ரேட்டிங் சீரம்

இதில் கிளிசரின் மற்றும் ஹையாலுரோனிக் அமிலம் அடங்கியுள்ளது. இது சருமத்திற்கு போதுமான ஈரப்பதத்தை அளிக்கிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட் சீரம்

இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது சருமத்தில் ஏற்படும் தீவிர பிரச்சினைகளை சரி செய்கிறது.

மல்டி டாஸ்கிங் சீரம் :

இது எல்லா பயன்களையும் கலந்து கொஞ்சம் செய்கிறது. சருமம் வயதாகுதலை தடுத்தல் , சரும ஈரப்பதம் மற்றும் பிரைட்டனிங் ஸ்கின் போன்றவற்றை செய்கிறது.

பல மில்லியன் மக்கள் தங்கள் சரும பராமரிப்புக்கு தகுந்த சீரத்தை தேர்ந்தெடுத்து பயன்படுத்துகின்றனர். இன்னும் நீங்க ஏன் வெயிட் பண்றீங்க.

English summary

All You Need To Know About Facial Serum In Beauty Care

All You Need To Know About Facial Serum In Beauty Care
Story first published: Wednesday, July 19, 2017, 9:00 [IST]