For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அனைத்து விதமான தழும்புகளையும் விரைவில் போக்கும் அற்புத எண்ணெய்!

விளக்கெண்ணையை கொண்டு முகத்தில் உள்ள தழும்புகளை நீக்குவது எப்படி?

By Lakshmi
|

தழும்புகள் பெண்களின் அழகை குறைத்து காட்டும். இதனாலேயே பெண்கள் தழும்புகளை வெறுக்கின்றனர். பிரசவத்திற்கு பின்னர், உடல் எடை குறைவதால் உண்டாகும் தழும்புகள், அம்மை தழும்புகள், பருக்கள் உண்டான இடத்தில் வரும் தழும்புகள் என அனைத்து தழும்புகளும் பிரச்சனை தரகூடியது தான்.

அதுமட்டுமில்லாமல், நாமாகவே சில தழும்புகளை ஏற்படுத்திக்கொள்கிறோம். புடவை, பிளவுஸ் போன்றவற்றை அணியும் இடத்தில் சில தழும்புகள் காணப்படுகின்றன. இதற்காக மருத்துவரிடம் சென்றாலும், அதிக செலவாகும். ஆனால் இந்த தழும்பு பிரச்சனைக்கு இயற்கையாக ஒரு சிறந்த தீர்வு உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. விளக்கெண்ணை பயன்கள்:

1. விளக்கெண்ணை பயன்கள்:

1. விளக்கெண்ணெயில் இயற்கையான ஃபேட்டி ஆசிட் மற்றும் மினரல்கள் அதிகளவில் அடங்கியுள்ளன. இது சருமத்தின் ஈரப்பதத்தை தக்க வைக்கிறது.

2. முகத்தில் இருக்கும் சுருக்கங்களை போக்குகிறது.

3. தழும்புகளை போக்குகிறது.

4. முகத்தில் உள்ள அனைத்து மாசு, மருக்களையும் நீக்கி க்ளியர் ஸ்கின்னை தருகிறது.

5. இதில் ஆன்டி செப்டிக் மற்றும் ஆன்டி பாக்டீரியல் தன்மை உள்ளதால், சரும தொற்றுகளை போக்குகிறது.

2. சூடான எண்ணெய்

2. சூடான எண்ணெய்

தேவையான அளவு விளக்கெண்ணையை 40 நிமிடங்களுக்கு குறைவாக காய்ச்சிக்கொள்ள வேண்டும். இதனை ஆற வைத்து பின்னர், மேலிருந்து கிழாகவும், வட்ட வடிவாகவும் மசாஜ் செய்ய வேண்டும்.

பின்னர் சூடான நீரில் நனைய வைத்த துண்டினால் முகத்தை முடி 20 நிமிடங்கள் அமர வேண்டும். இந்த முறையை காலை, இரவு என தினமும் செய்து வந்தால் நல்ல பலனை கண்கூட காணலாம்.

3. விளக்கெண்ணை மற்றும் கற்றாழை

3. விளக்கெண்ணை மற்றும் கற்றாழை

கற்றாழை ஜெல்லை எடுத்துக்கொண்டு, அதில் 6 ஸ்பூன் விளக்கெண்ணையை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து, அதனை தழும்புகள் உள்ள இடங்களில் அப்ளை செய்து 30 - 45 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.

இந்த முறையை தினமும் இரவு செய்து வரலாம். இரவு முழுவதும் விட்டுவிட்டு கழுவினாலும் நல்ல பலன் கிடைக்கும்.

4. டீ ட்ரீ ஆயில் மற்றும் விளக்கெண்னை

4. டீ ட்ரீ ஆயில் மற்றும் விளக்கெண்னை

டீ ட்ரீ ஆயில் மற்றும் விளக்கெண்ணையை சம அளவு கலந்து கொள்ள வேண்டும். முகத்தை நன்றாக சுத்தம் செய்த பின்னர் இதனை அழுத்தாமல் மிருதுவாக மசாஜ் செய்ய வேண்டும். இதனை இரவு முழுவதும் கூட விட்டுவிடலாம். இது நல்ல பலனை தரும்.

5. பீட்ரூட் மற்றும் விளக்கெண்ணை

5. பீட்ரூட் மற்றும் விளக்கெண்ணை

பீட்ரூட் சாறை விளக்கெண்ணையுடன் கலந்து முகத்திற்கு தேய்த்து 20 நிமிடங்கள் மசாஜ் செய்து, பின்னர் குளிர்ந்த நீரினால் கழுவி விட வேண்டும். இவ்வாறு செய்வதால் விரைவில் தழும்புகள் மறையும்.

குறிப்பு :

குறிப்பு :

1. சுத்தமான கெமிக்கல்கள் இல்லாத விளக்கெண்ணையை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

2. புண்கள் மற்றும் தோலின் திறந்த பகுதிகளின் மீது போட கூடாது.

3. எரிச்சல் மற்றும் தோல் சிவந்தால், உடனடியாக குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும்.

4. கண்டிப்பாக வாரத்தில் இரண்டு நாட்கள் அல்லது மேலே குறிப்பிட்டுள்ள கால இடைவெளிப்படி இந்த முறையை செய்ய வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Caster Oil for Scar Removal

Caster Oil for Scar Removal
Story first published: Thursday, August 3, 2017, 11:59 [IST]
Desktop Bottom Promotion