For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களை தேவதையாக்க பப்பாளியை எப்படி பயன்படுத்துவது?

முகச்சுருக்கம், சரும பாதிப்புகளைப் போக்க பப்பாளியை எப்படி பயன்படுத்தலாம் என இந்த கட்டுரையில் காணலாம்.

By Ambika Saravanan
|

பப்பாளி எல்லா காலங்களிலும் கிடைக்கக்கூடிய ஒரு சுவையான பழம். இதன் விலையும் மலிவாகவே இருப்பதால் இதை "ஏழைகளின் கனி" என்றும் கூறுவர். இதன் இனிமையான சுவையால் "பழங்களின் தேவதை " என்றும் அழைக்கப்படும் .

மனித உடலின் ஆரோக்கியம் மற்றும் அழகு இரண்டிலுமே பப்பாளியின் பங்கு மகத்தானது. பலவகையான ஊட்டச்சத்துக்களை கொண்ட பழங்களில் பப்பாளி முதன்மையானது.

இந்த நோய்கள் குணமாகும் என தெரிஞ்சா பப்பாளி விதைகளை தூக்கிப் போட மாட்டீங்க!!

சரும பராமரிப்பில் பப்பாளியின் உதவி மிகப் பெரியது.வறண்ட மேல் தோலை அகற்றி புதிய தோலை உண்டாக்கும் வேலையை இது செய்கிறது. நமது சருமம் சீரற்றதாகவும், கடினமானதாகவும் இருந்தால் அது பார்ப்பதற்கு நன்றாக இராது. முகத்தோலில் பெரியதாக துவாரங்கள் இருந்தால், அது ஒரு பெரிய பிரச்சனை.

திறந்த தோல் துளைகள் பல தோல் பிரச்சினைகளை உருவாக்க வாய்ப்புள்ளது. திறந்த துளைகள் அழுக்கு மற்றும் இறந்த தோல் செல்கள் மற்றும் கரும்புள்ளிகளை ஈர்க்கின்றன. அவை முகப்பருக்கள் உருவாக்க வழிவகுக்கும்.

இப்பிரச்சனையை பப்பாளியைக் கொண்டு தவிர்ப்பதெப்படி என இங்கே காண்போம்...

Beauty benefits of Papaya for your skin

உங்களுக்கு தேவையான பொருட்கள்:

பப்பாளி பல்ப் - 2 தேக்கரண்டி

தேன் - 2 தேக்கரண்டி

எலுமிச்சை சாறு (அல்லது ரோஸ் வாட்டர் ) - 1 டீஸ்பூன்

உங்களுக்கு மென்மையான சருமம்(sensitive skin) இருந்தால், எலுமிச்சை சாற்றை பயன்படுத்த வேண்டாம். அதற்கு பதிலாக ரோஸ் வாட்டர் பயன்படுத்தவும்.

செய்முறை:

ஒரு சுத்தமான கிண்ணத்தில் பப்பாளி கூழ் மற்றும் தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்கவும். மேல் சொன்ன கலவையை நன்கு கலக்க வேண்டும். உங்கள் முகத்தில் இந்த பசையை கெட்டியாக தடவவும்.

பின் 20 நிமிடங்கள் காத்திருக்கவும். தேய்க்கவோ அல்லது மசாஜ் செய்யவோ தேவை இல்லை. 20 நிமிடங்களுக்கு பிறகு சுத்தமான நீர் கொண்டு உங்கள் முகத்தை சுத்தம் செய்ய உடனடியாக மாற்றங்களை பார்க்க முடியும்.

பப்பாளியின் நன்மைகள் :

மஞ்சள் நிற பழங்களில் காணப்படும் கரோட்டின் சத்து இப்பழத்தில் அதிகம் காணப்படுகிறது. இந்த சத்து புற்று நோய் வராமல் தடுக்கிறது. 18 வகையான சத்துக்கள் கொண்ட ஒரே பழம் பப்பாளியாகும். உடல் ஆரோக்கியத்திற்காக ஊட்டச்சத்து மாத்திரைகளை சாப்பிடுவதைவிட தினமும் சிறிது பப்பாளி பழத்தை சாப்பிடுவது சிறந்த நன்மையை தரும்.

குழந்தைகளுக்கு பப்பாளி பழத்தை உண்ண கொடுப்பதால் அவர்களின் பற்கள் மற்றும் எலும்புகள் உறுதியாகும். கண் பார்வை கோளாறு குறையும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இதில் போலிக் ஆசிட்(folic acid) அதிகமாக உள்ளது. ஆகையால் குழந்தைகளின் உடல் மற்றும் மூளை வளர்ச்சிக்கு மிகவும் ஏற்றது . பெண்கள் இதை உண்பதால் மாத விலக்கு சீராகும். ஆண்களின் உயிரணு உற்பத்தி திறனை அதிகரிக்கும். இப்பழத்தை தினமும் உண்பதால் நரம்பு தளர்ச்சி குறையும். கல்லீரலில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய உகந்தது.

காலை உணவில் பப்பாளியை பழமாகவோ அல்லது ஜூஸாகவோ எடுத்துக் கொண்டால் உடல் கழிவுகளை வெளியேற்றும். மலச்சிக்கல் மற்றும் நெஞ்செரிச்சலை தீர்க்கும்.

உடல் எடை அதிகரித்து காணப்படுபவர் பப்பாளி பழத்தை காலை உணவாக சாப்பிட்டு வந்தால் விரைவில் எடை குறையும். 4 வாரங்கள் தொடர்ந்து இப்பழத்தை உண்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் குறையும். இந்த காயை சமைத்து உண்பதாலும் உடல் பருமன் குறையும்.

English summary

Beauty benefits of Papaya for your skin

Beauty benefits of Papaya for your skin
Story first published: Thursday, August 3, 2017, 10:09 [IST]
Desktop Bottom Promotion