முகத்துல இந்த 6 பொருள்களும் போடறதுக்கு முன்னாடி கொஞ்சம் யோசிங்க!!

Written By:
Subscribe to Boldsky

எதை செய்தால் பித்தம் தணியும் என்பது போலத்தான். முகம் அழகாக இருக்கவும், முகப்பருக்களை நீக்க, கரும்புள்ளி போக என ஆளாளுக்கு பாட்டி வைத்தியம் என்று பரிந்துரைக்க, அதையெல்லாம் போட்டு பரிசோதனை எலியாக மாறி கடைசியில் முகத்தில் தேவையில்லாத தழும்பும், வேதனையும் மிஞ்சும்படி பலருக்கும் அனுபவம் உண்டாயிருக்கும்.

அப்படி உங்களுக்கும் அனுபவம் ஆயிருக்கா? இல்லையென்றால் மகிழ்ச்சிதான். இப்போதாவது சுதாகரித்துக் கொள்ளுங்கள். சில பொருட்களை நமது சருமத்தின் தன்மை தெரியாமல் போடக் கூடாது. அவ்வாறான பொருட்கள் எவையென தெரிய விருப்பமா? தொடர்ந்து படியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெட்ரோலியம் ஜெல்லி :

பெட்ரோலியம் ஜெல்லி :

பெட்ரோலியம் ஜெல்லி மிகவும் அடர்த்தியானது. பாதத்திற்கு மற்றும் உதட்டிற்கு போடலாம். ஆனால் சருமத்திற்கு போடவே கூடாது.

ஏனென்றால அதில் நீர்தன்மை இல்லாததால் சரும துவாரங்களுக்குள் அடைத்துக் கொள்ளும். இதனால் பல பாதிப்புகள் உங்கள் முகத்தில் உண்டாகும். மிகக் குறிப்பாக கரும்புள்ளி உண்டாகும். சருமம் விரைவில் தொய்வடைந்து விடும்.

டோனர்

டோனர்

கடைகளில் வாங்கும் டோனரை அதன் பாட்டிலை பரிசோதித்துப் பாருங்கள். அதில் ஐசோ ப்ரோபை ஆல்கஹால் என இருந்தால் கண்டிப்பாக அதனை வாங்காதீர்கள்.

இந்த ஆல்கஹால் சருமத்தில் கொப்புளங்களை உண்டாகும் அதிகப்படியான் அவறட்சியை உண்டாக்கும். அலர்ஜியை தோற்றுவிக்கும். சிலருக்கு டோனர் ஒத்துக் கொள்ளாததற்கு இந்த வேதிப் பொருளே காரணம்.

டூத் பேஸ்ட் :

டூத் பேஸ்ட் :

நிறைய இடங்களில் படித்திருப்பீர்கள். டூத் பேஸ்ட் முகப்பருக்களை குணமாக்கும் என்று. ஆனால் அவை எரிச்சலை உண்டாக்கும். முகபப்ருக்களை இனும் அதிகபப்டுத்திவிடும். சரும செல்களை சுருங்கச் செய்யும். ஆகவே டூத் பேஸ்ட் முகத்தில் முகப்பருக்களுக்கு போடக் கூடியதல்ல!!

எலுமிச்சை அல்லது வினிகர் :

எலுமிச்சை அல்லது வினிகர் :

எலுமிச்சையில் சிட்ரிக் அமிலம் உள்ளது. வினிகரில் அசிடிக் அமிலம் உள்ளது. நமது சருமம் நடு நிலையான ஐ பெற்றது. இந்த இரண்டுமே அமில நிலையில் இருப்பதால் அவை சருமத்தை வறட்சி அடையச் செய்துவிடும். சுருக்கங்களை அதிகமாக்கி விடும்.

சமையல் சோடா :

சமையல் சோடா :

எலுமிச்சையில் அமிலத்தன்மை இருப்பது போல் சமையல் சோடாவில் காரத்தன்மை கொண்டது. இதுவும் சருமத்தில் அதிகப்படியான வறட்சியை அரிப்பை, அலர்ஜியை தோற்றுவிக்கும். ஆகவே இதையும் முகத்தில் போடக்கூடாது. குறிப்பாக இதனை ஸ்க்ரப் செய்ய பயன்படுத்தவே கூடாது.

 க்ளென்ஸிங்க் பிரஷ் :

க்ளென்ஸிங்க் பிரஷ் :

முகத்தை சுத்தம் செய்யும் க்ளென்சிங்க் பிரஷ் பார்லரில் உபயோகிப்பதுண்டு. சிலர் வீட்டிலும் வாங்கி உபயோகிப்பார்கள். எப்போதாவது உபயோகிக்கலாம். ஆனால் அடிகக்டி உபயோகித்தால் இவை சருமத்தில் எரிச்சலை உண்டாக்கும். வீக்கத்தை உண்டாக்கும். சருமம் பாதிக்கபப்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

6 Things you should think about before putting on your face

6 Things you should think about before putting on your face
Story first published: Thursday, April 20, 2017, 8:15 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter