ஜாக்கிரதை..! இந்த சமையலறைப் பொருட்கள் உங்க சருமத்தை மோசமாக பாதிக்கும்! ஏன் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக கெமிக்கல் கலந்த க்ரீம்கள், லோஷன் போன்றவை தான் சரும ஆரோக்கியத்தைப் பாதிக்கும். ஆனால் அவைகளுக்கு சிறந்த மாற்றாக பயன்படுத்தும் சில சமையலறைப் பொருட்களும் நம் சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பது தெரியுமா?

6 Natural Ingredients That May Damage Your Skin

ஆம், நம் வீட்டு சமையலறையில் உள்ள ஒருசில பொருட்கள், சருமத்தில் அழற்சியை உண்டாக்கி, பல சரும பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். எனவே கீழே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை முகத்திற்கு பயன்படுத்தும் முன், சோதித்து பார்த்து பின் பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

எண்ணெய்களுள் தேங்காய் எண்ணெய் பிம்பிளை உண்டாக்கும் என்பது தெரியுமா? அதிலும் எண்ணெய் பசை சருமத்தினர் என்றால், இந்த தேங்காய் எண்ணெயை முற்றிலும் தவிர்ப்பதே நல்லது.

பட்டை

பட்டை

பட்டை சிலருக்கு தீவிரமான எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும். எனவே பட்டையை ஃபேஸ் பேக்கில் சேர்த்து சருமத்திற்கு பயன்படுத்தும் முன், மறக்காமல் சோதித்துப் பாருங்கள்.

மில்க் க்ரீம்

மில்க் க்ரீம்

உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் என்றால், மில்க் க்ரீம்மை சருமத்திற்கு பயன்படுத்தாதீர்கள். இது சருமத்துளைகளை அடைத்து, வெள்ளைப் புள்ளிகளை அதிகம் வரவழைக்கும்.

வினிகர்

வினிகர்

வினிகரில் உள்ள அசிட்டிக் தன்மை, சென்சிடிவ் சருமத்தினருக்கு மிகவும் ஆபத்தானது. சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், இந்த வினிகரை சருமத்தில் பயன்படுத்தினால், அது கடுமையான அரிப்புக்களை ஏற்படுத்தும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் pH அளவு குறைவாக உள்ளது. அதாவது இதில் அமிலத்தன்மை சற்று அதிகம் உள்ளது என்று அர்த்தம். எனவே உங்கள் சருமத்தில் ஏற்கனவே காயங்கள் இருந்தாலோ அல்லது சென்சிடிவ் சருமத்தினராக இருந்தாலோ, எலுமிச்சை சாற்றினை பயன்படுத்தாதீர்கள். இல்லாவிட்டால் அது நிலைமை மோசமாக்குவதோடு, சருமத்தில் தீவிர அரிப்பையும், எரிச்சலையும் உண்டாக்கும்.

தக்காளி ஜூஸ்

தக்காளி ஜூஸ்

வறட்சியான சருமத்தினர் தக்காளியை சருமத்திற்கு பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது சருமத்தில் வறட்சியை மேலும் அதிகரித்து, மிகவும் சென்சிடிவ்வாக்கி விடும். அதோடு, எரிச்சலையும் உண்டாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

6 Natural Ingredients That May Damage Your Skin

Here are some natural ingredients that may damage your skin. Read on to know more...
Story first published: Friday, April 7, 2017, 11:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter