குளிர்காலத்தில் உங்கள் சருமத்தை சுருக்கத்திலிருந்து எப்படி பாதுகாக்கலாம்?

By: Srinivasan P M
Subscribe to Boldsky

நீங்கள் என்ன செய்தாலும் குளிர்காலத்தில் உங்கள் சருமம் பாதிப்படைவதையும் அதனால் ஏற்படும் அசவுகரியங்களையும் தவிர்ப்பது கடினம்.

சரும வறட்சி இல்லாதவர் உட்பட ஏறக்குறைய அனைவருக்குமே இந்த பிரச்சனை ஏற்படும். எண்ணெய்பசை சருமம் உடையவருக்கும் கூட இந்த பனிக்காலம் வறட்சியை ஏற்படுத்தும்.

winter body care tips for cracked painful skin

எந்த வகை சருமம் உடையவரானாலும் குளிர்காலம் என்றால் சருமம் மற்றும் உடல் பராமரிப்பில் கவனம் செலுத்தவேண்டியது அவசியம். இதற்கு சற்று பொறுமை மற்றும் நேரம் செலவிடுதல் அவசியமென்றாலும் அதற்கான பலன்கள் நிச்சயம் உண்டு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
குளிக்கும் முன் எண்ணெய் தடவுதல்:

குளிக்கும் முன் எண்ணெய் தடவுதல்:

தினமும் குளிக்க போகும் முன் ஒரு பாடி ஆயில் அல்லது எளிய தேங்காய் எண்ணெயைக் கூட உடலில் நன்கு தடவி பின்னர் குளிப்பதால் உங்கள் சரும ஈரப்பதத்தைப் பாதுகாத்து குளிக்கும்போது ஏற்படும் அதிகபட்ச ஈரப்பத இழப்பைத் தவிர்க்கிறது.

வெதுவெதுப்பான தண்ணீர்:

வெதுவெதுப்பான தண்ணீர்:

குளிர்காலத்தில் குளிர்ந்த நீரில் குளிப்பது முடியாத காரியம். ஆனால் சூடான தண்ணீர் சரும வறட்சியை அதிகரிக்கும் என்பதால் வெதுவெதுப்பான தண்ணீரை குளிக்கப் பயன்படுத்துங்கள். இது மிகவும் முக்கியமான உடல் பராமரிப்புக் குறிப்பு.

வழக்கமான மாய்ஸ்சரைசர் வேண்டாமே

வழக்கமான மாய்ஸ்சரைசர் வேண்டாமே

குளித்தபிறகு பயன்படுத்தும் உங்கள் வழக்கமான மாயிஸ்சரைசரை விடுத்து பாடி பட்டர் பயன்படுத்தலாம். இது உங்கள் சரும வறட்சியைத் தடுத்து ஈரப்பதத்தை தக்கவைக்கிறது. குளிர்காலத்தில் நீங்கள் நிச்சயம் பின்பற்றவேண்டிய குறிப்பு இது.

தண்ணீர்

தண்ணீர்

உங்களுக்கு தாகம் இல்லையென்றாலும் வெயில் காலங்களில் பருகுவதுபோல் போதுமான அளவு தண்ணீர் பருகவேண்டியது அவசியம். இது உடம்பில் பல உணர் இயலாத சிக்கல்களைத் தவிர்க்கும்.

மசாஜ் எண்ணெய்:

மசாஜ் எண்ணெய்:

இரவு உறங்கச் செல்லும் முன் மசாஜ் எண்ணெய் உபயோகியுங்கள். இதை வாரம் குறைந்தது ஒருமுறையாவது செய்துவந்தால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரித்து குளிர்காலத்தில் சரும ஈரப்பதத்தைத் தக்கவைக்கும். வாரம் ஒருமுறைக்கு மேல் செய்வது சிறந்தது.

ஹாண்ட் கிரீம்

ஹாண்ட் கிரீம்

உடல் பராமரிப்பில் நாம் முக்கியமாக மறந்துவிடுவது நமது கைகள். ஒரு நாள் முழுவது அதிக வேலைகளை செய்வது இந்தக் கைகள் என்றாலும் நாம் அதிக கவனம் செலுத்துவதில்லை.

எனவே கைகளில் தடவிக்கொள்ளும் ஹாண்ட் க்ரீம் போன்ற ஒன்றை பயன்படுத்து கையில் சருமம் வறட்சியாகாமல் தடுக்கலாம்.

ஷியா பட்டர் :

ஷியா பட்டர் :

சரும வறட்சியால் கடுமையாக பாதிக்கப்படுபவர்கள் வேறு எந்த முயற்சியும் பலன் தராத் போது ஷியா பட்டரை முயன்று பார்க்கலாம். இந்த ஷியா பட்டர் அல்லது ஷியா பருப்பு வெண்ணெய் எவ்வளவு மோசமான சரும வறட்சிக்கும் உகந்ததாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

winter body care tips for cracked painful skin

Tips to protect your skin from wrinkles and dryness during winter seasons
Story first published: Tuesday, November 15, 2016, 18:38 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter