For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏன் தினமும் ஒரு முறைக்கு மேல் முகத்திற்கு சோப்பை பயன்படுத்தக் கூடாது தெரியுமா?

By Maha
|

முகத்தை சுத்தம் செய்ய பலரும் பயன்படுத்தும் ஓர் பொதுவான பொருள் தான் சோப்பு. ஆனால் இந்த சோப்பை ஒருவர் அளவுக்கு அதிகமாக முகத்திற்கு பயன்படுத்தக்கூடாது. இதற்கு சோப்பில் சேர்க்கப்பட்டுள்ள கெமிக்கல்கள் சரும செல்களை கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக்கும்.

மேலும் அனைவருக்குமே அனைத்து சோப்புகளும் பொருந்தும் என்று கூற முடியாது. எனவே ஒவ்வொருவரும் சரியான சோப்புகளை வாங்கி பயன்படுத்த வேண்டியது அவசியம். அதுமட்டுமின்றி அவற்றை ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

அப்படியெனில் முகத்தை எப்படி சுத்தம் செய்வது என்று கேட்கலாம். முகத்தை சுத்தம் செய்ய சோப்பு மட்டும் தான் உதவும் என்றில்லை, சில இயற்கை பொருட்களும், ஏன் சரும வகைக்கேற்ப விற்கப்படும் மைல்டு ஃபேஸ் வாஷ்களையும் பயன்படுத்தலாம்.

இங்கு ஏன் தினமும் ஒரு முறைக்கு மேல் முகத்திற்கு சோப்பை பயன்படுத்தக் கூடாது என்பதற்கான சில காரணங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரும செல்கள் பாதிப்பு

சரும செல்கள் பாதிப்பு

சோப்புக்களில் உள்ள மோசமான கெமிக்கல்கள், சரும செல்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். சரும செல்கள் பாதிப்பிற்குள்ளானால், அதனால் முக அழகு பாதிப்பிற்குள்ளாகும். ஆகவே சோப்பை அதிகமாக முகத்திற்குப் பயன்படுத்தாதீர்கள்.

சரும வறட்சி

சரும வறட்சி

சோப்புக்களை அதிகமாக முகத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள நேச்சுரல் எண்ணெய் முழுமையாக வெளியேற்றப்பட்டு, சருமம் மிகுந்த வறட்சிக்குள்ளாகும்.

கொழுப்பு அமிலங்கள் நீங்கும்

கொழுப்பு அமிலங்கள் நீங்கும்

சோப்புக்கள் சருமத்திற்கு பாதுகாப்பளிக்கும் கொழுப்பு அமிலங்களை முழுமையாக வெளியேற்றி, அதனால் பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளை எதிர்த்துப் போராடும் தன்மையைக் குறைத்துவிடும். இதனால் அதிக சரும பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும்.

முகப்பரு

முகப்பரு

சோப்புக்கள் சருமத்தில் இருக்கும் கொழுப்பு அமிலங்களை வெளியேற்றி, பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகளின் தாக்கத்தை அதிகரித்து, அதன் காரணமாக முகப்பரு அடிக்கடி வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கும்.

வைட்டமின்கள் வெளியேறும்

வைட்டமின்கள் வெளியேறும்

சோப்புக்களை அதிகமாக முகத்திற்கு பயன்படுத்தினால், அதனால் சருமத்தில் உள்ள அத்தியாவசிய வைட்டமின்கள் வெளியேற்றப்பட்டு, அதனால் சரும பொலிவும், ஆரோக்கியமும் குறைந்துவிடும்.

pH அளவு பாதிக்கப்படும்

pH அளவு பாதிக்கப்படும்

சோப்புக்களில் உள்ள கெமிக்கல்கள், சருமத்தின் ஈரப்பசையைக் குறைப்பதோடு, சருமத்தின் pH அளவை பாதித்து, அதனால் பல பிரச்சனைகள் வர வழிவகுக்கும்.

சருமத்துளைகள் அடைக்கப்படும்

சருமத்துளைகள் அடைக்கப்படும்

நிறைய சோப்புக்களில் ஃபேட்டி அமிலங்கள் அதிகமாக உள்ளது. இவை சருமத்துளைகளில் தேங்கி அடைப்பை ஏற்படுத்தி, அதனால் முகப்பரு பிரச்சனையை மேன்மேலும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reasons Why You Should Not Use Soap To Wash Your Face

Have you ever wondered if using soap to wash your face is healthy for your skin? Then learn about why you should not use soap to wash your face..
Desktop Bottom Promotion