சங்கு போன்ற கழுத்து வேணுமா? இந்த டிப்ஸ் படிங்க!!

Written By: Hemalatha V
Subscribe to Boldsky

கழுத்து என்பது முகத்திற்கு அடுத்தபடி நாம் பராமரிக்க வேண்டிய ஒன்றாகும். முகம் ஒரு நிறமாகவும், கழுத்து ஒரு நிறமாகவும் இருந்தால் அழகை கெடுப்பது போலாகிவிடும். அதுபோல் ரெட்டை நாடி, மரு, சுருக்கம் ஆகியவை ஒழுங்காக பராமரிக்காமல் இருக்கும் போது ஏற்படுபவை.

சிலருக்கு கழுத்து அழகாக இருந்தாலும் அதில் கரும்புள்ளிகளும், மருக்களும் தோன்றி அந்த அழகை பாதிக்கும். இவ்வாறு பிரச்சனைகள் ஆரம்பிக்கும்போதே கவனித்து சரி செய்தால் பரவாமல் காத்திடலாம். உங்கள் கழுத்தை சங்கு போல மாற்றிட சில குறிப்புகள் இங்கே..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தைராய்டு சுரப்பியை தூண்ட :

தைராய்டு சுரப்பியை தூண்ட :

கழுத்து அழகை பாதிக்கும்மற்றொரு காரணம் தைராய்டு சுரப்பி ஒழுங்கற்ற முறையில் சுரப்பதால் ஆகும். இதனால் கழுத்து வீங்கி விடும்.

இச்சுரப்பியை தூண்டும் வகையில் கழுத்தை மேலும், கீழும் பக்கவாட்டங்களிலு மெல்ல சாய்த்தல் வேண்டும். இப்படி பலமுறை செய்யலாம். தலையை அப்படியே வலது புறமாக 10 முறையும் செய்யலாம்.

இதனால் தைராய்டு சுரப்பி தொண்டப்பட்டு நன்றாக வேலை செய்யும். கழுத்திலும் சதைகள் ஏற்படாது. அதோடு தைராய்டு பிரச்சனையை மருத்துவரிடம் சென்று தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்ளுங்கள்.

சிக்கென்ற கழுத்தை பெற :

சிக்கென்ற கழுத்தை பெற :

வெது வெதுப்பான நீரில் துணி யை நனைத்து கழுத்தில் சுற்றி போடுங்கள். சூடு ஆறியதும் மீண்டும் வெதுவெப்பான நீரில் நனைத்து கழுத்தில் சுற்றி போடுங்கள். 10 நிமிடங்கள் கழித்து துண்டை எடுத்து விடலாம்.. தினமும் ஒரு வேளை இப்படி செய்துவர அழகிய கழுத்து கிடைக்கும்.

உணவு :

உணவு :

பச்சைக் காய்கறிகள், பழச்சாறு, சாலட் வகைகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை கழுத்தில் உண்டாகும் தொய்வை தடுக்கும்.

கவரிங்க் நகைகளை போடவேண்டாம் :

கவரிங்க் நகைகளை போடவேண்டாம் :

சிலருக்கு கவரிங் நகை அணிவதால் ஒவ்வாமை வரும் வாய்ப்பு உண்டு அல்லது சருமத்தில் கருமை ஏற்படும். கழுத்தில் கருமை ஏற்பட்டால் எளிதில் போகாது. ஆகவே கவரிங் மற்றும் அலர்ஜி உண்டாக்கும் மட்டமான நகைகளை போடாதீர்கள்.

தொங்கும் சதையை குறைக்க :

தொங்கும் சதையை குறைக்க :

முல்தானி மிட்டி, பன்னீர் மற்றும் கிளிசரின் கலந்து கழு த்தில் தடவி 30 நிமிடம் பொறுத்து சுத்தம் செய்வதால் கழுத்து சுருக்கம் இருக்காது. மேலும் பாலாடை குங்குமப் பூ கலந்து கழுத்தில் தடவி 30 நிமிடம் கழித்து கழுவினால் சிறுசிறு கரும்புள்ளிகள் மறையும்

கழுத்து சுருக்கங்கள் மறைய :

கழுத்து சுருக்கங்கள் மறைய :

முட்டை ஒன்றின் வெள்ளைக் கருவோடு, ஒரு ஸ்பூன் தேன் கலந்து கழுத்தில் தடவி அரை மணி நேரம் பொறுத்து கழுவினால் சுருக்கங்கள் விழுவதை தவிர்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Home Remedies to get a Younger Neck

How to get a Younger looking neck
Story first published: Saturday, September 3, 2016, 15:05 [IST]
Subscribe Newsletter