அக்குளை ஷேவ் செய்த பின் ரொம்ப அரிக்குதா? இதோ அதைத் தடுக்க சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

உடலில் அக்குள் பகுதியில் தான் வியர்வை அதிகம் வெளியேறும். ஏனெனில் அப்பகுதியில் காற்றோட்டம் குறைவாக இருப்பதோடு, அங்கு முடியின் வளர்ச்சியும் அதிகம் இருக்கும். அதுமட்டுமின்றி, அக்குள் எப்போதும் ஈரப்பசையுடன் இருப்பதால், அங்கு பாக்டீரியாக்களின் வளர்ச்சியும் அதிகம் இருப்பதால், வியர்வை துர்நாற்றம் வீசும்.

வியர்வை நாற்றம் அதிகம் வீசும் இடம் என்பதால், அத்தகைய அக்குளை சுத்தமாக வைத்துக் கொள்ள பலரும் அங்கு வளரும் முடியை ஷேவ் அல்லது ட்ரிம் செய்வோம். அப்படி ஷேவ் அல்லது ட்ரிம் செய்த பின், நிறைய பேர் அப்பகுதியில் மிகுந்த அரிப்பால் அவஸ்தைப்படுவார்கள்.

இந்த அரிப்பைத் தடுக்க என்ன செய்வதென்று தெரியாமல் பலர் புலம்புவார்கள். அத்தகையவர்களுக்கு இந்த கட்டுரை மிகவும் உபயோகமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டீ-ட்ரீ ஆயில்

டீ-ட்ரீ ஆயில்

சிறிது டீ-ட்ரீ ஆயிலை பஞ்சுருண்டையில் நனைத்து அக்குளில் தடவி வந்தால், அதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மை, அங்குள்ள பாக்டீரியாக்களை அழித்து, அரிப்பைத் தடுக்கும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லை ப்ரீசரில் வைத்து குளிர செய்து, அக்குளில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு பலமுறை செய்து வந்தால், அக்குள் அரிப்பைத் தடுக்கலாம்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெயில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் கொழுப்பு அமிலங்கள், சருமத்தில் உள்ள பிரச்சனைகளைக் குணப்படுத்தும். எனவே அக்குளில் அரிப்பு இருந்தால், தேங்காய் எண்ணெயை தினமும் அக்குளில் தடவி வாருங்கள்.

வேப்பிலை

வேப்பிலை

வேப்பிலையில் உள்ள மருத்துவ குணம், சருமத்தில் உள்ள கிருமிகளை அழித்து, சரும பிரச்சனைகளைத் தடுக்கும். அதிலும் அக்குள் அரிப்பைப் போக்க வேப்பிலையை அரைத்து பேஸ்ட் செய்து, அக்குளில் தடவி 20 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். இப்படி தினமும் ஒருமுறை செய்து வந்தால், அக்குள் அரிப்பு நீங்கும்.

சோள மாவு

சோள மாவு

சோள மாவு அக்குளில் உள்ள ஈரப்பசையைக் கட்டுப்படுத்தி, பாக்டீரியாக்களின் வளர்ச்சியைத் தடுக்கும். எனவே குளித்து முடித்த பின், சோள மாவை அக்குளில் தடவுங்கள்.

ஐஸ் கட்டி

ஐஸ் கட்டி

ஐஸ் கட்டியை அரிப்புள்ள அக்குளில் வைத்து சிறிது நேரம் மசாஜ் செய்தால், அக்குள் அரிப்பு உடனே தடுக்கப்படும்.

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ

வைட்டமின் ஈ பாதிக்கப்பட்ட சரும செல்களை புத்துயிர் பெற செய்யும், அரிப்பில் இருந்து நிவாரணம் அளிக்கும். எனவே வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை வெட்டி, அதனுள் உள்ள ஜெல் கொண்டு அக்குளை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், அக்குள் அரிப்பு வருவதைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Herbal Remedies To Get Rid Of Armpit Rashes

Listed in this article are herbal remedies for armpit rashes. To cure, heal nasty rashes try this homemade mask.
Story first published: Friday, October 7, 2016, 12:35 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter