For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முழங்கையில் உள்ள கருமையை நீக்கி மென்மையாக்க சில வழிகள்!!!

By Maha
|

உங்கள் முழங்கை கருப்பாகவும், கடினமானதாகவும் உள்ளதா? பத்தில் ஒன்பது பேர் சந்திக்கும் ஒரு பிரச்சனை தான் இது. இதற்கு மற்ற இடங்களுக்கு கொடுக்கும் பராமரிப்பின் அளவில் சிறிது கூட முழங்கை, முழங்கால் போன்ற இடங்களுக்கு கொடுக்காதது தான் காரணம்.

உங்களுக்கு நல்ல மென்மையான, வெள்ளையான முழங்கை வேண்டுமானால், தினமும் அவ்விடத்திற்கு ஒருசில பராமரிப்புக்களைக் கொடுங்கள். இதனால் அவ்விடத்தை அழகாக வைத்துக் கொள்ளலாம்.

இங்கு முழங்கையில் உள்ள கருப்பை நீக்கும் சில எளிய வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அவற்றை தவறாமல் செய்து வாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சர்க்கரை ஸ்கரப்

சர்க்கரை ஸ்கரப்

ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் சர்க்கரை மற்றும் 1 டேபிள் ஸ்பூன் வெதுவெதுப்பான தண்ணீர் ஊற்றி கலந்து, அதனை எடுத்து முழங்கையில் தடவி மசாஜ் செய்து உலர வைத்து கழுவ, முழங்கையில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறும்.

உப்பு ஸ்கரப்

உப்பு ஸ்கரப்

உப்பில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு முழங்கையை மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்து வந்தால், முழங்கையில் உள்ள கருமை நீங்கி, முழங்கை மென்மையாக இருக்கும்.

உருளைக்கிழங்கு ஜூஸ்

உருளைக்கிழங்கு ஜூஸ்

உருளைக்கிழங்கை வெட்டி, அதனைக் கொண்டு முழங்கையை மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் மீண்டும் தேய்த்து ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி 2 வாரம் தொடர்ந்து செய்து வந்தால், முழங்கையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

 மெருகேற்ற உதவும் கல்

மெருகேற்ற உதவும் கல்

முழங்கையை நீரில் கழுவி, பின் மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு வட்ட வடிவில் தேய்த்து, 5 நிமிடம் கழித்து, மீண்டும் அந்த கல்லைக் கொண்டு மேலும் கீழுமாக மசாஜ் செய்து வர வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், முழங்கை மென்மையாக இருக்கும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

தினமும் ஆலிவ் ஆயில் கொண்டு முழங்கையை மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், முழங்கை அழகாக பளிச்சென்று இருக்கும்.

வால்நட் ஸ்கரப்

வால்நட் ஸ்கரப்

5 வால்நட்ஸை பொடி செய்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முழங்கையில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான காட்டனால் துடைத்து எடுக்க வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், எதிர்பார்த்த பலனைப் பெறலாம்.

ஆரஞ்சு ஸ்கரப்

ஆரஞ்சு ஸ்கரப்

ஆரஞ்சு பழத் தோலின் பொடியுடன், ஸ்ட்ராபெர்ரி பழத்தை அரைத்து சேர்த்து, அத்துடன் சர்க்கரை 1 டேபிள் ஸ்பூன் சேர்த்து கலந்து, முழங்கையில் தடவி தேய்த்து, உலர வைத்து கழுவ வேண்டும்.

தயிர் மசாஜ்

தயிர் மசாஜ்

தயிரை சருமத்திற்கு பயன்படுத்தும் போது, அதனால் சருமம் போதிய ஈரப்பசையைப் பெற்று மென்மையாக இருக்கும். எனவே அந்த தயிரைக் கொண்டு தினமும் மசாஜ் செய்து வந்தால், முழங்கையில் வறட்சி ஏற்படுவது குறைவதோடு, அவ்விடத்தில் உள்ள இறந்த செல்களும் நீங்கி, முழங்கை மென்மையாகவும், பொலிவுடனும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies To Soften Elbows

Here are some of the home remedies to get smooth and soft elbows. Take a look.
Story first published: Friday, April 24, 2015, 16:23 [IST]
Desktop Bottom Promotion