For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மழைக்கால சருமப் பிரச்சனைகளுக்கான 6 சரியான தீர்வுகள்!

By Karthikeyan Manickam
|

மழைக்காலம் என்பது ஒரு இனிமையான காலம், ஒரு குளுமையான காலம் மட்டுமல்ல. இந்த சமயத்தில் தான் சளி, காய்ச்சல் உள்ளிட்ட சில பிரச்சனைகளும் ஏற்படும்.

இந்தப் பிரச்சனைகள் எப்போது தோன்றும் என்றே நம்மால் ஊகிக்க முடியாது. மழைக் காலம் வருவதற்கு முன்பே இதுப்போன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கும் தயாராக இருக்க வேண்டும்.

மேலும் நம் சருமத்தில் ஏற்படும் வெடிப்புகள், பூஞ்சைத் தொற்றுக்கள் போன்றவையும் அத்தகைய மழைக்காலப் பிரச்சனைகளில் ஒன்று தான். இந்த சருமப் பிரச்சனைகளை எப்படித் தீர்ப்பது என்பதற்கான சில வழிகளை நாம் பார்க்கலாமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகம் கழுவ வேண்டும்

முகம் கழுவ வேண்டும்

எந்த வகை சருமமாக இருந்தாலும் சரி. அழுக்கு, கறை எதுவும் அதில் தங்கி விடக் கூடாது. 2 மணி நேரத்திற்கு ஒருமுறை முகத்தைக் கழுவிக் கொண்டே இருக்க வேண்டும். ஈரத்துணி கொண்டும் முகத்தைத் துடைத்துக் கொண்டே இருக்க வேண்டும். தரமான சோப்பு அல்லது ஃபேஸ் வாஷ் மட்டும் உபயோகப்படுத்த வேண்டும்.

டோனர் பயன்படுத்த வேண்டும்

டோனர் பயன்படுத்த வேண்டும்

மழைக் காலத்தில் அடிக்கடி உலர்ந்து போகும் சருமத்தைக் காக்க டோனரை உபயோகிக்க வேண்டும். ஒரு நாளுக்கு 2 முறை டோனரைத் தடவுவது நலம். அதிலும் ஆல்கஹால் இல்லாத கற்றாழை டோனரைப் பயன்படுத்துவது சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

லோஷன்/க்ரீம் தடவ வேண்டும்

லோஷன்/க்ரீம் தடவ வேண்டும்

மழைக் காலத்தில் ஈரப்பதம் அதிகம் இருக்கும் என்பதால் ஹெவி லோஷன் அல்லது க்ரீம்களைப் பயன்படுத்தக் கூடாது. மிருதுவான மாய்ஸ்சுரைசிங் க்ரீம்களைத் தடவினால் தான் அவை முகத்தில் ஒட்டாமல் இருக்கும்.

ஆவி பிடிக்க வேண்டும்

ஆவி பிடிக்க வேண்டும்

சருமத்தில் உள்ள தோல்கள் மழைக் காலத்தில் அடைத்துக் கொள்ளும். இந்த அடைப்புகளை நீக்க, ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆவி பிடிக்க வேண்டும். இந்த ஆவி சருமத்தில் நன்றாக ஊடுருவி, துளைகளில் அடைத்துள்ள அழுக்குகளை அகற்றும். ஆவி பிடித்து சில நிமிடங்கள் கழித்து, ஐஸ்கட்டிகளை முகத்தில் நன்றாகத் தேய்க்க வேண்டும்.

உலர் தோலை உரிக்க வேண்டும்

உலர் தோலை உரிக்க வேண்டும்

மழைக் காலங்களில் சில சமயம் தோல்களின் மேல் புறம் உலர்ந்து செதில்களாகத் தங்கியிருக்கும். அதை அவ்வப்போது மெல்லிய துடைப்பான் கொண்டு உரித்து நீக்கிவிட வேண்டும். வாரத்திற்கு 2 முறை இதைச் செய்வது நலம். மாதத்திற்கு 2 முறை இரசாயன க்ளைக்கோலிக் பீல் முறையிலும் தோலை உரிப்பதால் முகம் பளபளப்பாக இருக்கும்.

புதினா/பப்பாளி ஃபேஸியல் செய்ய வேண்டும்

புதினா/பப்பாளி ஃபேஸியல் செய்ய வேண்டும்

மழைக் காலத்தில் புதினா அல்லது பப்பாளி ஃபேஸியல் செய்வது மிகவும் ஆரோக்கியமானது. புதினா குளுமையானது மட்டுமல்ல, சருமத்தையும் மிருதுவாக்கும். பப்பாளியோ உலர்ந்த தோலை ஈரப்பதமாக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Unclogging Skin Pores During Monsoon

Monsoons are not only synonymous with soothing and cooling showers, but also skin eruptions, fungal infections and clogged skin pores.
Desktop Bottom Promotion