மூக்கின் மேல் இருக்கும் சொரசொரப்பை நீக்க சில இயற்கை வழிகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்கள், பெண்கள் என அனைவருக்குமே பட்டுப்போன்ற மென்மையான சருமம் வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஆனால் அதற்கு இடையூறை விளைவிக்கும் வண்ணம் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை முகத்தில் ஏற்பட்டுவிடும். ஒருவேளை பருக்கள் முகத்தில் இல்லாமல் இருந்தாலும், மூக்கின் மேல் மற்றும் அதனைச் சுற்றிய இடங்கள் மட்டும் சொரசொரவென்று லேசாக கருப்பாகவும், வெள்ளையாகவும் இருக்கும்.

பருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க 20 வீட்டுக்குறிப்புகள்!!!

கரும்புள்ளி பிரச்சனையானது எண்ணெய் பசை சருமத்தினருக்கு தான் அதிகம் இருக்கும். அதிலும் சருமத்துளைகளில் இருந்து வெளிவரும் எண்ணெயானது வெளியேறாமல் அடைக்கப்படும் போது ஏற்படும். சருமத்தின் மென்மையைத் தடுக்கும் கரும்புள்ளி பிரச்சனையை தடுக்க சமையலறையிலேயே நிறைய பொருட்கள் உள்ளன. இங்கு கரும்புள்ளியை நீக்க உதவும் சமையலறைப் பொருட்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதனை அன்றாடம் செய்து உங்கள் முகத்தை பட்டுப்போன்று மென்மையாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி, அதனைக் கொண்டு சொரசொரவென்று உள்ள கரும்புள்ளிகள் இருக்கும் இடத்தில் சிறிது நேரம் நன்கு தேய்த்து, பின் நீரில் கழுவி, துணியால் அழுத்தி துடைத்தால், கரும்புள்ளிகள் நீங்கி, சருமம் மென்மையாக இருக்கும்.

தேன்

தேன்

தேன் கூட கரும்புள்ளிகளைப் போக்க உதவும். அதற்கு தேனை லேசாக சூடேற்றி, அதில் சிறிது சர்க்கரை சேர்த்து, பின் அதனை மூக்கின் மேல் தடவி லேசாக மசாஜ் செய்து, முகத்தை கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கும்.

பட்டையுடன் தேன்

பட்டையுடன் தேன்

பட்டையை பொடி செய்து அதனை தேனில் கலந்து, முகத்தில் தடவி தேய்த்து கழுவினால், கரும்புள்ளிகளானது விரைவில் மறையும்.

தக்காளி

தக்காளி

தக்காளியை அரைத்து, அதனை முகத்தில் தடவி ஊற வைத்து, பின் கழுவி துணியால் துடைத்தால், முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்குவதோடு, கரும்புள்ளிகளும் போய்விடும்.

கார்ன் ஸ்டார்ச்

கார்ன் ஸ்டார்ச்

கார்ன் ஸ்டார்ச்சில் தண்ணீர் சேர்த்து கலந்து, அதனை முகத்தில் தடவி உலர வைத்து, பின் தேய்த்து கழுவினால், முகத்தில் உள்ள சொரசொரப்பு நீங்கும்.

 ஆவிப்பிடிப்பது

ஆவிப்பிடிப்பது

அனைத்தையும் விட ஆவிப்பிடிப்பது தான் மிகவும் சிறப்பான வழி. அதிலும் சுடுநீரில் மூலிகைகளான லாவெண்டர், எலுமிச்சை தோல் மற்றும் புதினா இலைகள் ஆகியவற்றை சேர்த்து, ஆவிப்பிடித்து சுத்தமான துணியால் முகத்தை துடைத்தால், முகம் புத்துணர்ச்சியாக இருப்பதுடன், கரும்புள்ளிகளும் விரைவில் மறையும்.

பால்

பால்

தினமும் 2-3 முறை பாலை பஞ்சில் நனைத்து, முகத்தை துடைத்து எடுத்தால், முகத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் பொலிவோடும் மென்மையாகவும் இருக்கும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கற்றாழை துண்டு கொண்டு மேல்புறம் நோக்கி தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கும்.

டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட்

டூத் பேஸ்ட் கூட கரும்புள்ளிகளை நீக்க உதவும். அதற்கு தினமும் இரவில் படுக்கும் முன், டூத் பேஸ்ட்டை மூக்கின் மேல் தடவி நன்கு உலர்ந்ததும், அதனை மேல்புறம் நோக்கி உரித்து எடுத்தால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

சர்க்கரை

சர்க்கரை

கரும்புள்ளிகளை நீக்க சர்க்கரை கூட பெரிதும் உதவியாக இருக்கும். அதற்கு ஈரமான முகத்தில் சர்க்கரைக் கொண்டு மென்மையாக தேய்த்தால், முகத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கரும்புள்ளிகள் போய்விடும்.

எலுமிச்சை

எலுமிச்சை

சருமத்துளைகளின் அடைப்பால் ஏற்படும் கரும்புள்ளியை, எலுமிச்சை கொண்டு போக்கலாம். அதற்க எலுமிச்சையை மூக்கின் மேல் தேய்த்தால், சருமத்துளைகளானது திறந்து, கரும்புள்ளிகள் வருவது தடுக்கப்படும்.

முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கரு

முட்டையின் வெள்ளைக்கருவை முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் தண்ணீரை கையில் நனைத்து முகத்தை தேய்த்தால், கரும்புள்ளிகள் நீங்கி முகம் பட்டுப்போன்று இருக்கும்.

கடலை மாவு

கடலை மாவு

கடவை மாவில் சிறிது பாதாம் பொடி சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முகத்தில் தடவி ஊர வைத்து, கழுவும் போது தேய்த்துக் கொண்டே கழுவினால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

தயிர்

தயிர்

2 டேபிள் ஸ்பூன் தயிரில், 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி ஊற வைத்து தேய்த்து கழுவினாலும், கரும்புள்ளிகள் நீங்கும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில், தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மேல்புறம் நோக்கி தேய்த்தால், கரும்புள்ளிகள் போய்விடும்.

மஞ்சள் தூள் மற்றும் புதினா ஜூஸ்

மஞ்சள் தூள் மற்றும் புதினா ஜூஸ்

1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூளில் புதினா ஜூஸ் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, மூக்கின் மேல் தடவி உலர வைத்து குளிர்ந்த நீர் பயன்படுத்தி நன்கு தேய்த்து கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், கரும்புள்ளிகள் மறையும்.

ஸ்ட்ராபெர்ரி இலைகள்

ஸ்ட்ராபெர்ரி இலைகள்

ஸ்ட்ராபெர்ரியின் இலைகள் கூட கரும்புள்ளிகளைப் போக்க உதவும். எப்படியெனில் அதில் உள்ள அல்கலைன் வீக்கத்தைக் குறைத்து, சருமத் துளைகளை சுத்தம் செய்து, அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கும்.

வெந்தய கீரை

வெந்தய கீரை

வெந்தயக் கீரையை அரைத்து அதனை மூக்கின் மேல் தடவி நன்கு உலர வைத்து, பால் பயன்படுத்தி கழுவினால், கரும்புள்ளிகள் போய்விடும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ் சிறந்த ஸ்கரப்பர். ஆகவே ஓட்ஸ் பொடியில் பால் சேர்த்து கலந்து, அதனை ஈரமான முகத்தில் தடவி தேய்த்து, சிறிது நேரம் கழித்து கழுவினால் கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.

கருப்பு காராமணி

கருப்பு காராமணி

கருப்பு நிற காராமணியை பொடி செய்து, பின் அதில் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, மூக்கின் மேல் தடவி ஊற வைத்து தேய்த்து கழுவ வேண்டும். இதனாலும் கரும்புள்ளிகளைப் போக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

20 Homely Ways To Get Rid Of Blackheads

Do you resent looking at your face in the mirror cause of those nasty blackheads? If, yes, then we have some ways to get rid of it?
Subscribe Newsletter