For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குளிர்கால சரும பராமரிப்பிற்கான ஃபேஸ் மாஸ்க்குகள்...

By Maha
|

குளிர்காலத்தில் உடலுக்கு எப்படி பிரச்சனைகள் வருகிறதோ, அதேப் போன்று சருமத்திற்கும் நிறைய பிரச்சனைகள் வரும். அதிலும் இதுவரை நன்கு அழகாக பராமரித்து வந்த சருமம், குளிர்காலம் என்றால் உடனே மாறிவிடும். ஆகவே அந்த மாதிரியான காலத்தில் சருமத்தை நன்கு அழகாக பராமரிக்க ஃபேஸ் மாஸ்க், ஸ்கரப் போன்றவற்றை செய்ய வேண்டும்.

ஆனால் இவற்றில் ஃபேஸ் பேக் தான் மிகவும் சிறந்தது. அதிலும் ஒவ்வொரு வகையான சருமத்திற்கு ஒவ்வொரு விதமான ஃபேஸ் மாஸ்க்குகள் உள்ளன. அவ்வாறு சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் மாஸ்க்குகளை போடாமல், கண்ட கண்ட ஃபேஸ் மாஸ்க்குகள் போட்டால், சருமத்திற்கு பல பிரச்சனைகள் வரும்.

அதிலும் செயற்கைப் பொருட்களை பயன்படுத்தி ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதை விட, வீட்டில் இருக்கும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்துதைத் தான் அதிகம் விரும்புவர். ஏனெனில் இதனால் எந்த ஒரு பக்கவிளைவுகளும் ஏற்படாமல் இருக்கும். ஆகவே எந்த மாதிரியான சருமத்திற்கு எந்த ஃபேஸ் மாஸ்க்குகளை போட்டால் சரியாக இருக்கும என்பதைப் படித்து, செய்து பாருங்களேன்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அவோகேடோ மாஸ்க்

அவோகேடோ மாஸ்க்

அவோகேடோ மாஸ்க் தான் வறட்சியான சருமம் உள்ளவர்களுக்கு அவோகேடோ ஃபேஸ் மாஸ்க் தான் எப்போதும் சிறந்தது. அதற்கு அவோகேடோ பழத்தை அரைத்து, ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து, பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு தடவி, மாஸ்க் போட்டால், சருமத்திற்கு தேவையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வறட்சியின்றி மென்மைத்தன்மை போன்றவை கிடைக்கும்.

பால் ஃபேஸ் மாஸ்க்

பால் ஃபேஸ் மாஸ்க்

சருமம் சோர்வின்றி காணப்பட்டால், அப்போது பால் பொருட்களை வைத்து மாஸ்க் செய்தால், சரியாகிவிடும். அதிலும் தயிர், மோர், புளிப்பு க்ரீம் போன்றவற்றை கலந்து, முகத்தில் பூசி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள pH-இன் அளவு சமமாக இருப்பதோடு, குளிர் காலத்தின் போது வீசும் காற்றினால், சருமத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் தடுக்கும.

முட்டையின் வெள்ளைக் கரு மாஸ்க்

முட்டையின் வெள்ளைக் கரு மாஸ்க்

எண்ணெய் பசை சருமத்திற்கு இநத மாஸ்க் மிகவும் சூப்பராக இருக்கும் அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவை முகத்திற்கு தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இரும் இதடின

ஓட்ஸ் மாஸ்க்

ஓட்ஸ் மாஸ்க்

குளிர்காலத்திற்கு ஓட்ஸ் மிகவும் சிறந்ததாக இருக்கும். இந்த மாஸ்க் செய்வதற்கு ஓட்ஸ், முட்டை மஞ்சள் கரு மற்றும் தேன் போன்றவற்றை நன்கு கலந்து, முகத்திற்கு தடவி, 20 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் நன்கு மென்மையாகவும், புத்துணர்ச்சியுடனும் இருக்கும்.

வாழைப்பழ மாஸ்க்

வாழைப்பழ மாஸ்க்

காம்பினேஷன் சருமம் உள்ளவர்கள் வாழைப்பழ மாஸ்க்கை ட்ரை செய்யலாம். அந்த மாஸ்க்கிற்கு வாழைப்பழத்துடன், ஸ்வீட் க்ரீம் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால், சருமம் மென்மையாகவும், ஈரப்பசையுடனும், அழகாக மின்னும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Home-Made Face Masks for Winter Skin Care | குளிர்கால சரும பராமரிப்பிற்கான ஃபேஸ் மாஸ்க்குகள்...

Application of masks is one of the most ancient forms of beauty treatment all around the world. Read here more about our specially selected winter masks for busy modern women!
Desktop Bottom Promotion