Latest Updates
-
அக்டோபர் 07 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு சிக்கல்கள் தேடிவந்து கதவைத் தட்டுமாம் -
1/2 கப் வேர்க்கடலை இருந்தா.. இந்த பக்குவத்துல சட்னி அரைங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
அவிட்டம் நட்சத்திரத்தில் ராகு: இந்த 3 ராசிக்காரங்களை யாராலும் வீழ்த்த முடியாது! உங்க ராசியும் இதுல இருக்கா? -
சுக்கிரன் துலாம் ராசியில் அஸ்தமனடைவதால் வெற்றியையும், செல்வத்தையும் குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
பித்ரு பக்ஷ காலகட்டத்தில் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஸ்கூலுக்கு ஒருடைம் இந்த சோயா ரைஸ் செஞ்சு குடுங்க.. மிச்சம் வெக்காம சாப்பிடுவாங்க.. -
Mahalaya Amavasya 2026: முன்னோர்களின் சாபம் நீங்க.. மகாளய அமாவாசையில் இந்த 5 தானங்களை செய்யுங்க.. -
நார்த் இந்தியன் ஸ்டைல் முட்டைக்கோஸ் உருளை சப்ஜி ரெசிபி - செஞ்சு பாருங்க - சப்பாத்திக்கு டாப்பா இருக்கும் -
டிராபிக் போலீஸ் ஏன் வெள்ளை நிற யூனிஃபார்ம் அணிகிறார்கள் - இதுக்கு பின்னாடி உள்ள காரணம் என்ன தெரியுமா? -
கல்யாண வீட்டு சுரைக்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. பிடிக்காதவங்க கூட சாப்பிடுவாங்க..
முகச்சுருக்கம் உங்க அழகை கெடுக்குதா? அப்ப பாலை இந்த மாதிரி தினமும் யூஸ் பண்ணுங்க..
Skin Care Tips In Tamil: ஒவ்வொருவருமே நல்ல மென்மையான பட்டுப்போன்ற சருமத்துடன் நீண்ட காலம் இளமையாக காட்சியளிக்க விரும்புவோம். ஆனால் வயது அதிகரிக்கும் போது சருமத்தில் கொலாஜன் உற்பத்தி குறைந்து, சருமமானது வயதடைந்த தோற்றத்தை பெறுகிறது.
இது தவிர நமது வாழ்க்கை முறை, ஒருசில பழக்கவழக்கங்கள், வெயிலில் அதிகம் சுற்றுவது, சுற்றுச்சூழல் மாசுபாடு, மன அழுத்தம், தூக்கமின்மை, சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களை கொடுக்காமல் இருப்பது போன்றவைகளாலும் விரைவில் சருமத்தில் சுருக்கங்கள் வரத் தொடங்குகிறது.

இப்படி முகத்தில் காணப்படும் சுருக்கங்களைப் போக்க வேண்டுமானால், அதற்கு நம் வீட்டு சமையலறையில் உள்ள சில பொருட்கள் உதவி புரியும். அதுவும் நாம் தினமும் பயன்படுத்தும் பால், இந்த சரும சுருக்கங்களைப் போக்குவதில் மிகச்சிறந்தது.
அதற்கு பாலைக் கொண்டு சருமத்திற்கு பராமரிப்புக்களை கொடுக்க வேண்டும். கீழே முகத்தில் காணப்படும் சுருக்கங்களைப் போக்க உதவும் சில பால் ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்துவதன் மூலம், சரும சுருக்கங்களை விரைவில் போக்கலாம்.
1. பால்
* ஒரு பௌலில் காய்ச்சாத பச்சை பாலை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு பஞ்சுருண்டையை எடுத்து, பாலில் நனைத்து, முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தை துடைத்தெடுக்க வேண்டும். இப்படி தினமும் இரவு தூங்கும் முன் செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, சரும சுருக்கங்களும் மறையத் தொடங்கும்.
2. பால் மற்றும் கற்றாழை
* ஒரு பௌலில் கற்றாழை ஜெல் மற்றும் பாலை எடுத்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்து 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், சரும சுருக்கம் இயற்கையாக மறையும்.
3. பால் மற்றும் வாழைப்பழம்
* ஒரு பௌலில் நன்கு கனிந்த வாழைப்பழத்தை எடுத்து மசித்து, அத்துடன் 2-3 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர நல்ல பலன் கிடைக்கும்.
4. பால் மற்றும் செம்பருத்தி
* முதலில் செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.
* பின் ஒரு பௌலில் 2 டீஸ்பூன் செம்பருத்திப் பூ பொடியை எடுத்து, அத்துடன் பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர, சருமத்தில் உள்ள சுருக்கம் மறையும்.
5. பால் மற்றும் தேன்
* முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் பாலை எடுத்து, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்தில் தடவி, சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இப்படி வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வர, சரும சுருக்கம் நீங்குவதோடு, சருமமும் பளிச்சென்று பட்டுப்போன்று இருக்கும்.



Click it and Unblock the Notifications
