Latest Updates
-
சைவ உணவை விரும்பி சாப்பிடும் உலகின் டாப் 10 நாடுகள் - இந்தியா எத்தனாவது இடத்தில் இருக்கு தெரியுமா? -
உருளைக்கிழங்கு, சீஸ் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. அள்ளும்.. -
1 கப் பச்சைப் பயறு இருந்தா இந்த மாதிரி கொங்கு ஸ்டைல் கடையல் செஞ்சு பாருங்க - ஆரோக்கியமா, சுவையா இருக்கும் -
கடகத்தில் இருக்கும் செவ்வாய்: நவம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
தேங்காய் ரவா தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
அக்டோபர் 02 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாள் காத்திருக்காம் -
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
செவ்வாய் துலாம் ராசிக்குள் செல்வதால் சகல நன்மைகளையும் அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் வெள்ளை பட்டாணி இருந்தா இந்த பஞ்சாபி வடானா மசாலாவை செஞ்சு பாருங்க - சப்பாத்தி. பூரிக்கு செமையா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரங்க உலகை சுற்றும் சுதந்திரப் பறவைகளாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா?
கோடையில் சருமம் பளபளக்க வேண்டுமா? இதோ இந்த பழம் போதும்..!
ஆப்பிள் தவிர, வாழைப்பழம் ஆரோக்கியமான பழமாக கருதப்படுகிறது. ஆனால் வாழைப்பழத்தை விட வாழைப்பழத் தோல்கள் பயனுள்ளதாக இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? வாழைப்பழத்தில் இருக்கும் அனைத்து சத்துக்களும் அதன் தோலிலும் உள்ளது. மேலும் இன்று வாழைப்பழத்தோலின் பயன்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம்.
வாழைப்பழம் பற்றி இந்த விஷயம் தெரிந்தால் வாழைப்பழத்தை பயனற்றது என்று நினைத்து குப்பைத் தொட்டியில் வீச மாட்டீர்கள். வாழைத்தோலை தினமும் குறிப்பாக கோடையில் பயன்படுத்த வேண்டும். இப்படி செய்து வந்தால் கோடை காலத்திலும் உங்கள் சருமம் அழகாகவும், தழும்புகள் இல்லாமலும் இருக்கும்.

ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த, வாழைப்பழத் தோல்கள் சருமத்தை ஒளிரச் செய்யவும் மற்றும் சுருக்கங்களைக் குறைக்கவும் உதவும் என்று ஹெல்த்லைன் தெரிவித்துள்ளது . இது மாய்ஸ்சரைசராகவும் செயல்படுகிறது. சருமத்தை ஹைட்ரேட் செய்ய உதவுகிறது. வாழைப்பழத்தோலுக்கும் பழம் போன்ற பண்புகள் இருப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
வாழைப்பழத் தோலில் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதனால் சருமம் மென்மையாகவும், பளபளப்பாகவும் இருக்கும். தவிர, இதில் வைட்டமின் சி உள்ளது, இது சருமத்தில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்துவதால், சருமத்தில் உள்ள சுருக்கங்களும் குறையும். கோடை காலத்தில் வாழைப்பழத்தோலை சருமத்தில் தடவினால் முகப்பருக்கள் வராமல் தடுக்கிறது. தழும்புகளும் மறையும். வாழைப்பழத்தோல் சருமத்தை குளிர்விக்கும்.
வாழைப்பழத் தோலை எவ்வாறு பயன்படுத்துவது?
1. வாழைப்பழத் தோலின் உட்புற வெள்ளைப் பகுதியை முகத்தில் தடவி ஐந்து முதல் பத்து நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்யவும். அதுமட்டுமின்றி வாழைப்பழத்தோலை பேஸ்ட் செய்து தயிர் அல்லது தேனுடன் கலந்து முகத்தில் தடவலாம். வாழைப்பழத்தோல் துண்டுகளை கண்களுக்கு அடியில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை வைத்தால் கருவளையம் நீங்கும்.
2. வாழைப்பழத் தோலைப் பயன்படுத்துவதற்கு முன்பு முகத்தை நன்றாகக் கழுவவும். வாழைப்பழத்தோலை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை முகத்தில் தடவ வேண்டும். குறிப்பாக நீங்கள் வெயிலில் இருந்து வீட்டிற்கு வரும்போது இதைப் பயன்படுத்தவும். இது சருமத்தை குளிர்விக்கும். தோல் சுருங்குவதை தடுக்கிறது.
வாழைப்பழ தோல் மாஸ்க்
வாழைப்பழம் உடலுக்கு மிகவும் சத்தானது, ஆனால் சருமத்தைப் பொறுத்தவரை வாழைப்பழத்தில் வைட்டமின் பி6, பி12, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் துத்தநாகம் போன்ற சருமத்திற்கு உகந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன, இவை அனைத்தும் எந்த பக்க விளைவுகளும் இல்லாமல் பல தோல் பிரச்சனைகளை சமாளிக்க உதவும்.
1. பாதி வாழைப்பழத்தை எடுத்து சிறிய துண்டுகளாக நறுக்கி, முழு தோலிலும் சேர்த்து நருக்கிக் கொள்ளவும்.
2. வாழைப்பழத் தோலை மிக்சியின் உதவியுடன் அரைத்து, இரண்டு மிருதுவான பேஸ்ட் ஆகும் வரை நன்கு கலக்கவும். அதில் இருக்கும் பழத்தை சாப்பிடலாம்.
3. அதில் ஒரு தேக்கரண்டி தேன் மற்றும் தயிர் சேர்க்கவும். இந்த கலவையில் நன்கு கிளறவும். பிறகு சிறிது ரோஸ் வாட்டரை சேர்த்து பேஸ்டாக மாற்றலாம்.
4. உங்கள் முகம் மற்றும் கழுத்து பகுதியில் பேஸ்ட்டைப் பயன்படுத்துங்கள்.
5. சில நிமிடங்கள் உலர விடவும், பின்னர் உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.



Click it and Unblock the Notifications
