Latest Updates
-
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
மஷ்ரூம் செட்டிநாடு மசாலா ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - காரசாரமா சூப்பர் சைடிஷா இருக்கும் -
இதய நோய் வரக்கூடாதா? அப்ப அமெரிக்க டாக்டர் சொல்ற இந்த 5 பழக்கங்களை வெச்சுக்கோங்க.. -
கடல் நீர் முழுவதும் குடிநீராக மாறினால் உலகில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
ஆகஸ்ட் 20-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை இந்த 3 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
தக்காளி தோசையும், உடுப்பி வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க..
உங்க முகம் பொலிவிழந்து டல்லா இருக்கா? அப்ப வார இறுதியில் இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க..
Skin Care Tips In Tamil: வாரம் முழுவதும் வேலைக்காக வெளியே அலைந்து திரிந்து உங்கள் முகம் பொலிவிழந்துவிட்டதா? அதுவும் தற்போது கொளுத்தும் வெயிலில் சிறிது நேரம் வெளியே சென்றுவிட்டு வீட்டிற்கு வந்தாலே, நமக்கே நம்மை அடையாளம் தெரியாத அளவில் நிறம் மாறி காணப்படுகிறோம்.
இப்படியான சூழ்நிலையில் சருமத்திற்கு போதுமான பராமரிப்புக்களை தவறாமல் கொடுத்து வந்தால் தான், சருமத்தை இளமையாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள முடியும். ஆனால் தற்போதைய மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையால் சருமத்திற்கு பராமரிப்பு கொடுப்பதற்கு தேவையான நேரம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும், அது வார இறுதி நாட்களாகவே இருக்கும்.

உங்கள் சூழ்நிலையும் இப்படியென்றால், சரும அழகை மேம்படுத்தவும், சரும நிறத்தை பராமரிக்கவும் வார இறுதி நாட்களில் ஒருசில ஃபேஸ் பேக்குகளை தவறாமல் போட்டு வந்தாலே போதும். கீழே அப்படிப்பட்ட ஒருசில ஃபேஸ் பேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு ஃபேஸ் பேக்கை போட்டு வந்தால் சரும அழகை பராமரிக்கலாம்.
1. மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு ருமுறை பயன்படுத்தி வந்தால், சருமத்தில் உள்ள கருமை நீங்குவதோடு, சருமம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
2. தேன் மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை போடுவதன் மூலம், முகத்தில் உள்ள கருமையான தழும்புகள் மற்றும் சரும கருமை நீங்கி, முகம் பளிச்சென்று காணப்படும்.
3. ஓட்ஸ் மற்றும் பால் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியை எடுத்து, அத்துடன் தேவையான அளவு பால் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம், கழுத்து போன்ற பகுதிகளில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு அதை 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கைப் போடுவதன் மூலம், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்குவதோடு, சருமமும் நீரேற்றத்துடன் பொலிவாக இருக்கும்.
4. பப்பாளி மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு முதலில் சிறிது நன்கு கனிந்த பப்பாளியை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின்பு அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக் சருமத்தில் உள்ள அழுக்குகளை திறம்பட நீக்கி, சரும பொலிவை மேம்படுத்தும். அதோடு சருமத்தை மென்மையாகவும், நீரேற்றத்துடனும் வைத்துக் கொள்ளும்.
5. கற்றாழை மற்றும் வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
* இந்த ஃபேஸ் பேக்கிற்கு 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1/4 கப் வெள்ளரிக்காயை எடுத்து மிக்சர் ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20-30 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை போடுவதன் மூலம், சரும வறட்சி தடுக்கப்படுவதோடு, சருமம் புத்துணர்ச்சியுடனும், பிரகாசமாகவும் இருக்கும்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள ஃபேஸ் பேக்குகளை வாரத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை பயன்படுத்தி வந்தால், சருமம் எப்போதும் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும். வேண்டுமானால், நீங்களும் முயற்சித்துப் பாருங்கள்.



Click it and Unblock the Notifications