Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
கோடைக்கு ஏற்ற குளிர்ச்சியான சந்தன ஃபேஸ் பேக் செய்வது எப்படி?
முகம் எப்பொழுதும் பிரகாசமாக ஜொலிக்க வேண்டும் என நாம் அனைவரும் நினைப்போம். அதிலும் பெண்கள் எல்லோரிடமிருந்தும் தனித்து நிற்க வேண்டும் என்று ஏங்குவது வழக்கம். அதிலும் வெயில் காலம் வந்தவுடனே நாம் முதலில் கவனிக்கும் விஷயம் நமது சரும பாதுகாப்பு தான். சில நிமிடங்கள் வெளியில் சென்று வந்தாலே முகத்தின் பொலிவு முற்றிலுமாக மாறிவிட கூடும். அந்த அளவிற்கு வெயிலின் தாக்கம் தற்போது இருந்து வருகிறது.
இந்த கோடை காலத்தை சிறப்பாக சமாளித்து உங்களின் சரும அழகை பொலிவாக்க சந்தானம் உதவுவதாக அழகியல் வல்லுநர்கள் கூறுகின்றனர். சந்தனத்தை வைத்து பயன்படுத்த கூடிய ஃபேஸ் பேக் பற்றி இனி தெரிந்து கொள்வோம். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு குறைந்தபட்சம் ஒரு முறை செய்து வந்தாலே உங்கள் சருமம் பளபளப்பாக இருக்கும்.

சந்தனத்தின் பயன்கள்
சந்தனம் நாம் அனைவரும் அறிந்தது.. அனைவருக்கும் பிடித்தது.. உங்கள் அழகை இரட்டிப்பாக்கும். இயற்கையாகவே கிடைக்கும் சந்தனம் சருமத்திற்கு தீங்கு விளைவிக்காத பல குணங்களைக் கொண்டது. சந்தனத்தைப் பயன்படுத்துவதால் முகத்தின் பொலிவு அதிகரிப்பது மட்டுமின்றி, மிருதுவாகவும் இருக்கும்.
சந்தனத்தை பொதுவாக சோப்புகள் மற்றும் அழகு சாதனப் பொருட்களைத் தயாரிக்க பயன்படுத்துவார்கள். இது ஒரு இயற்கையான கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது மற்றும் சருமத்திற்கு முழு பாதுகாப்பு தருகிறது. குறிப்பாக முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. மேலும் சருமத்தில் உள்ள அழுக்குகளை வெளியேற்றவும் இது வழி செய்கிறது. முக்கியமாக சூரிய ஒளியின் பாதிப்பை தணித்து சருமத்தை மென்மையாக வைக்கிறது. வறண்ட மற்றும் சுருக்கங்கள் கொண்ட சருமத்தை மீளுருவாக்கம் செய்கிறது. ஆனால் பலருக்கு சந்தனத்தை எப்படி பயன்படுத்துவது என்று தெரியவில்லை. எனவே சந்தனத்தை எப்படி எளிமையாக முகத்திற்கு தடவுவது என்று பார்க்கலாம்.
சந்தனம், பால் ஃபேஸ் மாஸ்க்
ஒரு டீஸ்பூன் சந்தன பொடியை எடுத்துக் கொள்ளவும். பொடி இல்லாவிட்டால்.. சந்தனம் மிகவும் நல்லது. சந்தனத்தை சிறிது தண்ணீரில் நனைத்து, கல்லில் தேய்த்து பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். இந்த சந்தன கலவையில் ஒரு தேக்கரண்டி பால் அல்லது ஒரு தேக்கரண்டி ரோஸ் வாட்டர் சேர்க்கவும்.. மற்றொரு டீஸ்பூன் மஞ்சள் சேர்க்கவும். மஞ்சள் கிருமி நாசினியாக செயல்படுகிறது. பால் ஒரு மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது. ரோஸ் வாட்டர் சருமத்தை புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
இந்த கலவையை முகத்தில் தடவவும். 20 நிமிடம் நன்கு உலர விடவும். பின்னர் அதை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். வாரம் ஒருமுறை இந்த ஃபேஸ் பேக்கை செய்து பாருங்கள்.. முடிவு உங்களுக்கே தெரியும். பருக்கள், தழும்புகள் இருந்தாலும்...அவை அனைத்தும் சரியாகிவிடும்.
எலுமிச்சை மற்றும் சந்தனம் ஃபேஸ் மாஸ்க்
இது எண்ணெய் பசை சருமத்தை கொண்டவர்களுக்கான சிறந்த ஃபேஸ் மாஸ்க் ஆகும். இதை தயார் செய்ய எலுமிச்சை சாறுடன் சிறிது சந்தன பொடியை கலந்து பேஸ்ட் போன்று ஆக்கி கொள்ளவும். பிறகு இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் முழுவதும் தடவி உலர விடவும். 15 நிமிடங்கள் கழித்து உங்கள் முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இப்படி செய்து வந்தால் சருமத்தில் சுரக்க கூடிய செபம் என்கிற முக்கிய மூலப்பொருளை உற்பத்தி செய்து முகத்தின் துளைகளை இறுக்கமாக்குகிறது.
தக்காளி மற்றும் சந்தனம் ஃபேஸ் பேக்
இந்த ஃபேஸ் பேக்கை தயார் செய்ய 1 டீஸ்பூன் வெள்ளரி சாறு, 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, அரை டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் தக்காளி சாறு மற்றும் 3 டீஸ்பூன் சந்தன பொடி ஆகியவற்றை ஒன்றாக கலந்து, மென்மையான பேஸ்ட் போன்று உருவாக்கவும். இதை முகத்தில் தடவி 25 நிமிடங்கள் அப்படியே உலர விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும். முகத்தில் ஏற்பட்டுள்ள பலவித பாதிப்புகளை குணமாக்க இந்த ஃபேஸ் பேக் உதவும்.
வெள்ளரிக்காய் மற்றும் சந்தனம் ஃபேஸ் மாஸ்க்
இதை தயாரிக்க 2 டேபிள் ஸ்பூன் தயிர் அல்லது வெள்ளரிக்காய் சாறுடன் சம அளவு சந்தனப் பொடியைக் கலந்து கொள்ளவும். பிறகு இதை முகத்தின் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவவும். சிறிது நேரம் உலர விட்டு, பின்னர் முகத்தை கழுவவும். இந்த ஃபேஸ் மாஸ்க் மூலம் உங்களுக்கு நீங்கள் உடனடி தீர்வுகள் கிடைக்கும்.
முட்டை மற்றும் சந்தனம் ஃபேஸ் பேக்
சருமத்தின் அமைப்பை மேம்படுத்தவும், சுருக்கங்களைத் தவிர்க்கவும் இந்த முட்டை-சந்தனம் ஃபேஸ் பேக் உதவுகிறது. இதற்கு 1 முட்டையின் மஞ்சள் கரு, 1 டீஸ்பூன் தயிர் மற்றும் 3-4 டீஸ்பூன் சந்தனப் பொடியைப் எடுத்து கொண்டு ஃபேஸ் பேக் போன்று கலந்து கொள்ளவும். பிறகு இந்த பேஸ்ட்டை உங்கள் முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விடுங்கள். உலர்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவவும்.



Click it and Unblock the Notifications