Latest Updates
-
புதாதித்ய ராஜயோகம்: டிசம்பர் மாத தொடக்கமே இந்த 4 ராசிக்காரர்களுக்கு அமோகமா இருக்கும்! -
டிசம்பரில் விருச்சிக ராசியில் நுழையும் புதன் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கார்த்திகை தீபம் ஸ்பெஷல் நெய் அப்பம் - எப்படி 15 நிமிடத்தில் செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சிம்பிளான காலிஃபிளவர் சால்னா ரெசிபி - செஞ்சு பாருங்க - இட்லி, சப்பாத்திக்கு அட்டகாசமாக இருக்கும் -
வீட்டில் பணம் பெருக வேண்டுமா? அப்ப ஃபெங் சூயி சொல்லும் இந்த 5 அதிர்ஷ்ட பொருட்களை வாங்கி வையுங்க.. -
குளிர்காலத்தில் சருமத்தை ஆரோக்கியமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருக்கும் 5 பழங்கள் - மறக்காம சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் காரணமே இல்லாமல் மிகவும் கோபப்படுபவர்களாக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃப்ரிஸி ஹேர் பிரச்சனையா? அப்ப முடியை மென்மையாக வைத்திருக்க டாக்டர் கூறும் டிப்ஸ் இதோ! -
பழங்கள் ப்ரெஷாக இருந்தாலும் அதற்குள் புழுக்கள் இருக்க காரணம் என்ன? அவை எப்படி பழத்திற்குள் செல்கிறது தெரியுமா? -
சிம்ம ராசியில் வக்ரமாகும் குருபகவான்: இந்த 4 ராசிக்கு பேன்க் பேலன்ஸ் டபுள் ஆகப்போகுது! உங்க ராசி இதுல இருக்கா?
வெயிலால் முகம் கருப்பாயிடுச்சா? அப்ப காபித் தூளை வெச்சு இப்படி அடிக்கடி ஃபேஸ் பேக் போடுங்க..
Summer Skin Care Tips In Tamil: தற்போது வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. இப்படி கொளுத்தும் வெயிலில் அதிகம் சுற்றினால், சரும நிறம் மாறி கருமையாகிவிடும். அதோடு, காலநிலை மிகவும் சூடாக இருப்பதால் வியர்வை அதிகம் சுரந்து, சருமத் துளைகளில் அழுக்குகளும், இறந்த செல்களும் தேங்கி அடைப்புக்களை ஏற்படுத்தி, முகப்பரு பிரச்சனையையும் அதிகம் உண்டாக்கும்.
நீங்கள் இப்படி முகப்பரு பிரச்சனையையும், முகக் கருமை பிரச்சனையையும் சந்திக்கிறீர்களா? கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாலே கருப்பாக இருக்கிறீர்களா? இப்படி கருமையான முகத்தை வெள்ளையாகவும், பிரகாசமாகவும் வைத்துக் கொள்ள நினைக்கிறீர்களா? அதுவும் இயற்கை பொருட்களைக் கொண்டே எளிய வழியில் சரும நிறத்தை அதிகரிக்க நினைக்கிறீர்களா?

அப்படியானால் காபித் தூள் பெரிதும் உதவி புரியும். அதுவும் அந்த காபித் தூளைக் கொண்டு ஃபேஸ் பேக்குகளைப் போடும் போது சரும கருமை நீங்கி, முகம் பளிச்சென்று வெள்ளையாக ஜொலிக்கும். இப்போது சரும கருமையைப் போக்கி வெள்ளையாக்க உதவும் காபி ஃபேஸ் பேக்குகளைக் காண்போம்.
1. காபி மற்றும் தேன் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு கைகளை நீரில் நனைத்து, மென்மையாக மசாஜ் செய்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, முகம் பிரகாசமாக இருக்கும்.
2. காபி மற்றும் பால் ஃபேஸ் பேக்
* முதலில் ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், முகம் எப்போதும் பிரகாசமாக இருக்கும்.
3. காபி, மஞ்சள் மற்றும் தயிர் ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள், 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு கைகளை நீரில் கழுவி, முகத்தை மென்மையாக மசாஜ் செய்து, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போட்டு வந்தால், முகம் வெள்ளையாக இருக்கும்.
4. காபி மற்றும் எலுமிச்சை ஃபேஸ் பேக்
* ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
* பின்பு 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.
5. காபி மற்றும் கற்றாழை ஃபேஸ் பேக்
* முதலில் ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் காபித் தூள் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்து கலந்து கொள்ள வேண்டும்.
* பின் அதை முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.
* இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கும்.



Click it and Unblock the Notifications
