For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முடி வெடிப்பு அதிகமா இருக்கா? அப்ப இதுல ஒரு ஹேர் பேக்கை வாரத்துக்கு 2 தடவ போடுங்க...

பிளவுபட்ட முடிகளை வெட்டி தான் நீக்க வேண்டும். ஆனால் தலைமுடிக்கு ஒருசில பொருட்களால் அடிக்கடி பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, முடிகளில் ஏற்படும் வெடிப்புகளைத் தடுக்கலாம்.

|

நம் எதற்கு அதிகம் கவலைப்படுகிறோமோ இல்லையோ, தலைமுடியில் ஏதேனும் பிரச்சனையை சந்தித்தால், அதை நினைத்து அதிகம் கவலைப்படுவோம். அந்த அளவு தலைமுடி ஒருவரது அழகை சிறப்பாக வெளிக்காட்டுவதில் முக்கிய பங்கை வகிக்கிறது. அப்படிப்பட்ட தலைமுடியில் நிறைய பெண்கள் சந்திக்கும் ஓர் பிரச்சனை தான் முடி வெடிப்பு. எப்போது தலைமுடியானது அதிகம் வறட்சியடைகிறதோ, அப்போது முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்படும். மேலும் காலநிலை, கெமிக்கல் கலந்த தலைமுடி பராமரிப்பு பொருட்கள், ஹேர் ஸ்ட்ரைனர், ஹேர் ட்ரையர் போன்றவற்றாலும் முடியின் முனைகளில் வெடிப்புகள் ஏற்படும். இந்த முடி வெடிப்புகள் வந்தால், முடியின் முனைகளை வெட்டுவோம்.

Natural Remedies To Get Rid Of Split Ends In Tamil

பிளவுபட்ட முடிகளை வெட்டி தான் நீக்க வேண்டும். ஆனால் தலைமுடிக்கு ஒருசில பொருட்களால் அடிக்கடி பராமரிப்புக்களைக் கொடுக்கும் போது, முடிகளில் ஏற்படும் வெடிப்புகளைத் தடுக்கலாம். இப்போது முடி வெடிப்பு பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவும் சில எளிய இயற்கை வழிகளைக் காண்போம். அதை மேற்கொண்டு உங்கள் தலைமுடியை ஆரோக்கியமாக மற்றும் அழகாக வைத்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நெல்லிக்காய் மற்றும் அஸ்வகந்தா ஹேர் மாஸ்க்

நெல்லிக்காய் மற்றும் அஸ்வகந்தா ஹேர் மாஸ்க்

ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் பொடி மற்றும் 3 டேபிள் ஸ்பூன் அஸ்வகந்தா பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை நீர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, ஸ்கால்ப் முதல் முடியின் முனை வரை நன்கு தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி ஒரு ஹேர் மாஸ்க் போடுவதால், சேதமடைந்த தலைமுடிக்கு வேண்டிய சத்துக்கள் கிடைத்து, தலைமுடி ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருக்கும். முக்கியமாக இந்த ஹேர் மாஸ்க் பிற தலைமுடி தொடர்பான பிரச்சனைகளையும் தடுக்கும்.

கற்றாழை

கற்றாழை

ஒரு பௌலில் 2-3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லை எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த ஜெல்லை ஸ்கால்ப் முதல் தலைமுடியின் முனை வரை தடவி 30-40 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் மைல்டு ஷாம்பு கொண்டு முடியை அலச வேண்டும். இந்த கற்றாழை ஹேர் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்துவதால், முடி வெடிப்பு பிரச்சனையைத் தடுக்கலாம்.

பீர்

பீர்

பீர் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, பலவிதமான தலைமுடி பிரச்சனைகளையும் தடுக்கும். ஆனால் அதற்கு கார்பனேட்டட் பீரைப் பயன்படுத்தக்கூடாது, அது தலைமுடியைத் தான் சேதப்படுத்தும். கார்பனேற்றப்படாத பீரைத் தான் எப்போதும் தலைமுடிக்கு பயன்படுத்த வேண்டும். அதுவும் தலைக்கு ஷாம்பு போட்ட பின்னர் இறுதியாக பீரைக் கொண்டு தலைமுடியை அலசி 2-3 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி செய்வதால், சேதமடைந்த மயிர்கால்களுக்கு பீரில் உள்ள சர்க்கரை மற்றும் புரோட்டீன் கிடைத்து, முடி வெடிப்பு கட்டுப்படும். மேலும் பீர் தலைமுடியின் அடர்த்தியை அதிகரிக்க உதவி புரியும்.

பப்பாளி காய்

பப்பாளி காய்

முடி வெடிப்பு பிரச்சனையை சந்திப்பவர்கள், பப்பாளி காயை அரைத்து, அத்துடன் தயிர் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி 30-45 நிமிடம் ஊற வைத்து பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இந்த ஹேர் பேக்கை வாரத்திற்கு 2 முறை போட்டு வந்தால், தலைமுடி ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்கும்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய் ஆரோக்கியமான எண்ணெய்களுள் ஒன்று. இந்த எண்ணெயைக் கொண்டு தலைமுடியை பராமரித்து வந்தால், முடி எப்போதும் அழகாக இருக்கும். அதற்கு பாதாம் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் ஷவர் கேப்பை அணிந்து 1-2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

தயிர்

தயிர்

ஒரு பௌலில் 4 டேபிள் ஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் அதை தலைமுடியில் தடவி, ஷவர் கேப் அணிந்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும். இந்த ஹேர் பேக்கும் முடி வெடிப்பைத் தடுக்கும்.

வாழைப்பழ ஹேர் மாஸ்க்

வாழைப்பழ ஹேர் மாஸ்க்

தலைமுடியில் ஏற்படும் அதிகப்படியான வறட்சி தான் முடி வெடிப்பிற்கு முக்கிய காரணம். இந்த முடி வெடிப்பை போக்க வாழைப்பழம் பெரிதும் உதவி புரியும். அதற்கு நன்கு கனிந்த வாழைப்பழத்தை நன்கு மசித்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து கலந்து, தலைமுடியின் வேர் முதல் முடியின் முனை தடவி, பின் ஷவர் கேப் அணிந்து, 1-2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Remedies To Get Rid Of Split Ends In Tamil

Here are some natural remedies to get rid of split ends. Read on to know more...
Story first published: Thursday, December 8, 2022, 21:36 [IST]
Desktop Bottom Promotion