For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஏனுங்க...உங்க தாடி நரைமுடியாக இருக்கா..? கருகருவென தாடி வேணுமா..?

பார்க்க அழகாக நிவின் பாலி போல தாடி வளரணும்னு யாருக்குத்தான் ஆசை இருக்காது. அதுவும் கருகருவென நம்ம ஸ்டைலுக்கு பிடித்தது போல தாடி வைக்கறது பல ஆண்களோட விருப்பமான ஒன்று. பெண்களுக்கும் அழகான அடர்த்தியான கர

|

ஆண்களுக்கு அழகே இந்த தாடிதானே. பார்க்க அழகாக நிவின் பாலி போல தாடி வளரணும்னு யாருக்குத்தான் ஆசை இருக்காது. அதுவும் கருகருவென நம்ம ஸ்டைலுக்கு பிடித்தது போல தாடி வைக்கறது பல ஆண்களோட விருப்பமான ஒன்று. பெண்களுக்கும் அழகான அடர்த்தியான கருமையான தாடி வைத்திருக்கும் ஆண்கள் மீது தனி பிரியமும் ஈர்ப்பும் இருக்கத்தான் செய்யும்.

beauty

ஆனால் இந்த அழகிய ஆசைகளை உங்கள் தாடியில் உள்ள நரைமுடிகள் கெடுத்துவிடுகிறதா..? மேலும் கருமையான தாடி இல்லை என வருந்துகிறீர்களா..? கவலையை விட்டுத்தள்ளுங்கள். உங்கள் நரைகள் கொண்ட தாடியை கருமையாக மாற்ற வழிகள் இதோ இருக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
# நரை வர காரணம்

# நரை வர காரணம்

தாடியில் நரை வர முக்கிய காரணமாக சொல்லப்படுவது மெலனின் நிறமி குறைவே. அதுவும் பலருக்கு இளம்வயதிலேயே தாடியின் முடிகள் வெள்ளையாக மாறிவிடுகிறது. இதனால் பலர் மன வருத்தத்தோடே எப்போதும் காணப்படுகின்றனர். அதோடு ஊட்டச்சத்துக்கள் குறைந்த உணவுகளை உண்பதாலும், காப்பர், ஐயோடின், மற்றும் இரும்பு சத்து குறைவதாலும் தாடியின் முடி வெள்ளையாக மாறுகிறது. மேலும் அதிகமாக மது பழக்கம் உள்ளவர்களுக்கு இந்த நரை அதிகம் வரக்கூடும்.

வீட்டு வைத்தியம் :-

வீட்டு வைத்தியம் :-

# குறிப்பு 1

ஒரு பாத்திரத்தில் 1 டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஊற்றி, மிதமான சூட்டில் எண்ணெய் காய்ந்தவுடன் 10 அரைத்த கருவேப்பிலை இலை சாற்றை அதில் சேர்க்கவும். சாறு நன்கு எண்ணெய்யில் இறங்கிய பிறகு அதனை குளிர வைக்கவும். இதனை தாடியில் 5 நிமிடம் தினமும் மசாஜ் செய்து வந்தால் நரை முடிகளை போக்கலாம். அத்தோடு முடி கருகருவென வளர செய்யும்.

#குறிப்பு 2

#குறிப்பு 2

கற்றாழை சாற்றை 1/4 கப் எடுத்து கொண்டு அதனுடன் 1 டீஸ்பூன் வெண்ணெய் சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன்பிறகு இதனை தாடியில் தடவி 20 நிமிடம் கழித்து காட்டன் துணியால் துடைத்துவிடுங்கள். கற்றாழை நரைகள் தடுக்க பெரிதும் உதவும். இளநரைகள் வருவதை முன்பே தடுத்து அடர்த்தியான தாடியை தரும். தாடியில் பொடுகு ஏற்படுவதையும் குணப்படுத்தும்.

# குறிப்பு 3

# குறிப்பு 3

1 டேபிள்ஸ்பூன் தேங்காய் எண்ணெய்யை கடாயில் ஊற்றி மிதமான சூட்டில் காயவிட்டு, பின்பு 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பவ்டரை சேர்த்து நன்கு கலக்கவும். கலவையை ஆறவிட்டு 10 நிமிடம் நன்றாக மசாஜ் செய்யவும். நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி முடிகளை நரைகளில் இருந்து காப்பாற்றும். மேலும் இதில் அதிகம் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் தாடியின் வேரை உறுதிப்படுத்தி இளநரைகள் வராமல் காக்கும். இந்த கலவை மெலனின் நிறமியை அதிகம் தாடி பகுதியில் சுரக்க செய்து கருமையான தாடியை தரும்.

# குறிப்பு 4

# குறிப்பு 4

100 ml தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நன்றாக கொதிக்க விட்டு, பிறகு 10 கருவேப்பிலை இலைகளை போடவும். கருவேப்பிலை இலையின் சாறு அதில் இறங்கிய பின் 10 நிமிடம் குளிர வைக்கவும். இந்த நீரை தினமும் குடித்து வர வெள்ளை முடி பிரச்சனையை தீர்க்கலாம். அதோடு கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் பி மெலனின் நிறமியை அதிகம் சுரக்க செய்து நரையை தடுக்கும். மேலும் மென்மையான தாடியையும் இது தரும்.

# குறிப்பு 5

# குறிப்பு 5

பிளாக் டீ இலைகளை 1 டேபிள்ஸ்பூன் எடுத்து 1 கப் நீரில் 5 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு வடிகட்டி அதனை குளிர செய்து தாடியில் தடவவும்.15 நிமிடம் கழித்து இதனை வெதுவெதுப்பான நீரில் கழுவிடவும். பிளாக் டீ இலையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் கேரட்டின் மற்றும் மெலனினின் உற்பத்தியை அதிகரித்து தாடியை வெள்ளை முடிகளில் இருந்து காக்கும்.

# குறிப்பு 6

# குறிப்பு 6

1 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றை 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பவ்டரில் கலந்து கொள்ளவும். சிறிது தண்ணீரை அதில் ஊற்றி கலக்கவும். இந்த பேஸ்டை தாடியில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இவ்வாறு செய்தால் தாடியின் நரை குறைந்து கருமையான தாடி வளரும்.

# குறிப்பு 7

# குறிப்பு 7

தேங்காய் எண்ணெய்யை தினமும் தூங்க போகும் முன்பு தாடியில் தடவி மசாஜ் செய்தால் இழந்த கருப்பான தாடியை விரைவில் பெற முடியும். லாரிக் அமிலம் அதிகம் இதில் உள்ளதால் உங்கள் தாடி வெள்ளை ஆவதை தடுக்கும். மெல்லிய தாடிகளை அடர்த்தியாக வளர செய்யும். மேலும் தாடியின் முடி உதிர்வை தடுக்க பெரிதும் பயன்படும்.

# குறிப்பு 8

# குறிப்பு 8

1 டீஸ்பூன் மருதாணி பவுடர் மற்றும் 1 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர் ஆகியவற்றை நன்கு தண்ணீர் ஊற்றி கலக்கவும். அதனை தாடியில் வெள்ளை முடிகள் உள்ள இடத்தில் பூசி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். மருதாணியில் உள்ள பழுப்பு சேர்ந்த நிறம் அதன் நரைகளை கலராக மாற்றிவிடும். மேலும் இளநரைகளை வராமல் தடுக்கும். தாடியின் மேன்மையை மேலும் மெருகேற்றும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: beauty அழகு
English summary

tips for grey beard

Grey Beard..!! Don't worry..solution is here
Story first published: Tuesday, July 24, 2018, 15:15 [IST]
Desktop Bottom Promotion