For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே, உங்கள் இளநரையை கலரிங் செய்யணுமா..? அதற்கு இந்த காய்கறிகள் மற்றும் பழங்களே போதும்..!

By Haripriya
|

முடியை பராமரிப்பதே பலரின் பெரும்பாடாக உள்ளது. பலர் உடல் பாகங்களிலே மிக முக்கியமான ஒன்றாக இந்த முடியைத்தான் கருதுவார்கள். ஒரு முடி உதிர்ந்தால் கூட அதை பற்றி வருந்தும் மனிதர்களை கூட இங்கு காண முடியும். முடி என்பது ஒருவருக்கு மிக அழகான பாகமாகத்தான் பலராலும் எண்ணப்படுகிறது. ஆனால் இன்று பத்தில் 7 பேர் முடி சார்ந்த ஏதோ ஒரு பிரச்சினையால்தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். முடி உதிர்தல், வழுக்கை, இளநரை, முடி உடைதல், பொடுகு தொல்லை... இப்படி முடியை பற்றிய பிரச்சினைகள் வரிசையில் நின்று கொண்டுதான் இருக்கிறது.

Hair Coloring Tips Using Fruits & Vegetables

இதற்கு தீர்வு என்னவென்று பார்த்தால், வகை வகையான ஷாம்புகள், கண்டிஷனர்கள், டைகள் என சந்தையில் வேதி பொருட்கள் மட்டுமே குவிந்து கிடக்கின்றன. இவற்றிற்கு மாற்று இல்லையா என்றால்..? அவைதான் வீட்டில் இருந்த பொருட்களை வைத்தே தயார் செய்யும் முறைகள். எப்போதும் இயற்கையான முறையே எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது. இந்த பதிவில் அதிக பேருக்கு உள்ள இளநரைகளை எவ்வாறு காய்கறி மற்றும் பழங்களை கொண்டு கலரிங் செய்யலாம் என்பதை பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஏன் வெள்ளை வருகிறது..?

ஏன் வெள்ளை வருகிறது..?

முடிக்கு முக்கியமாக 2 நிறங்கள்தான் அடிப்படையாக இருக்கிறது. அவற்றை தருவது யூமெலானின் (Eumelanin) மற்றும் பொமேலானின் (Pheomelanin). இதில் முதல் வகை, நம் தலைமுடி கறுப்பாக இருப்பதற்குக் காரணமாக உள்ளது. இரண்டாம் வகை, தலை முடி செம்பட்டையாக அல்லது ஆரஞ்சு நிறத்தில் அமைய காரணமாக இருக்கிறது.

இந்தியர்களின் தலை முடி இவற்றில் முதல் வகையை சார்ந்தது. ஏனெனில் நம் மரபணுவில் யூமெலானின் அதிகம் இருப்பதால், முடி கருமையாக இருக்கிறது. இந்த கருமை நிறம் குறைய சில காரணிகள் உள்ளன. முடி வளர வளர அதன் வேரில் நிறமி சுரத்தல் நின்று, நரையாக மாற கூடும். ஆனால் இப்போதெல்லாம் சிறிய குழந்தை முதலே இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.

எந்த வண்ணம் உங்களுக்கு வேண்டும்..?

எந்த வண்ணம் உங்களுக்கு வேண்டும்..?

பலருக்கு முடி நரையாக மாறிய பின், எந்த வித கலரிங் செய்வது என்பது குழப்பான ஒன்றாக இருக்கும். இதற்கு பதில்... கருப்பு அல்லது பழுப்பு ஆரஞ்ச் நிறத்தில் உங்கள் முடிகளை கலர் செய்து கொள்ளலாம். அல்லது மெல்லிய பிங்க் கலரிலும் கலரிங் செய்யலாம். இதற்கென்றே உங்கள் வீட்டில் உள்ள சில பொருட்கள் உதவுகிறது. இவை முற்றிலும் இயற்கை பொருளாக இருப்பதால் எந்தவித பாதிப்பும் உங்கள் முடிக்கு ஏற்படாது.

குறிப்பு #1

குறிப்பு #1

உங்கள் முடி பிங்க் சேர்ந்த கருமையாக மாற வேண்டுமா..? அதற்கு இந்த கலரிங் குறிப்பு நன்கு உதவும்.

தேவையானவை :-

பீட்ரூட்

முட்டை

நெல்லிக்காய் பவுடர்

மருதாணி பவுடர்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் பீட்ரூட் சாற்றை எடுத்து கொண்டு, அதனுடன் 1 முட்டையை நன்கு கலக்கவும். பின் 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பவுடர், 2 டீஸ்பூன் மருதாணி பவுடர் கலந்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு அதனை தலைக்கு தேய்த்து 2 மணி நேரம் கழித்து தலையை அலசினால் நரைகள் அற்ற முடிகள் வரும். இந்த குறிப்பை மாதத்திற்கு 3 முறை செய்ய வேண்டும்.

குறிப்பு #2

குறிப்பு #2

பலருக்கு முடி பழுப்பு கலந்த ஆரஞ்ச் நிறத்தில் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள். அவர்களுக்கு ஏற்றது இந்த டீ மற்றும் காபி டிகாஷனால் தயாரித்த கலரிங் பேஸ்ட்.

தேவையானவை :-

காபி டீகாஷன்

டீ டீகாஷன்

மருதாணி பவ்டர்

நெல்லிக்காய் பவ்டர்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் 3 டீஸ்பூன் மருதாணி பவ்டர், 2 டீஸ்பூன் நெல்லிக்காய் பவ்டர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். பின், இதில் 2 டீஸ்பூன் காபி டிகாஷன், 2 டீஸ்பூன் டீ டிகாஷன் சேர்த்து ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் அதனை தலையில் தடவினால் முடியில் உள்ள வெள்ளைகள் மறையும். அத்துடன், முடி அழகான பழுப்பு கலந்த ஆரஞ்ச் நிற கலராக மாறும். மேலும் இந்த குறிப்பை மாதத்திற்கு 2 முறை செய்யலாம்.

குறிப்பு #3

குறிப்பு #3

சற்றே கருமையாகவும் மெல்லிய ரோஸ் வண்ணம் போன்ற ஹேர் கலர் பெற விரும்புவோர், இந்த திராட்சை மற்றும் மாதுளை குறிப்பை செய்து பாருங்கள். திராட்சையில் உள்ள ஆன்ந்ரோ சைனின்ஸ் (anthrocyanins) முடியை பொலிவுடன் மாற்றி மெல்லிய சிவப்பு வண்ணத்தை தரும்.

தேவையானவை :-

திராட்சை சாறு

மாதுளை

காபி டீகாஷன்

மருதாணி பவுடர்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் மாதுளை மற்றும் திராட்சை ஆகியவற்றை அரைத்து, சாற்றை மட்டும் தனியாக எடுத்து கொள்ளவும். பிறகு அதனுடன் 3 டீஸ்பூன் மருதாணி பவுடர் சேர்த்து கலக்கவும். கடைசியாக 1 டீஸ்பூன் காபி டீகாஷன் சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின், இதனை தலைக்கு தடவினால் வெள்ளை முடிகள் காணாமல் போய் விடும். அத்துடன் மெல்லிய ரோஸ் அல்லது சிவப்பு நிற கலரிங் செய்த முடியையும் பெறலாம்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் தலை முடியின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hair Coloring Tips Using Fruits & Vegetables

Hair coloring is truly fun. Nobody likes it dull and drab. That is exactly why colors are there for. Vegetable & fruit hair dyes are a safe, natural alternative to the chemical-laden hair dyes.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more