Latest Updates
-
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்னென்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க
நரை முடியை கருப்பாக்கும் பீட்ரூட் ஹேர் டை!! ஒரு தயாரிப்பு முறை!!
நரைமுடியை கருப்பாக்கும் பீட்ரூட் ஹேர் டை தயாரிக்கும் முறையும் அதனை உபயோகப்படுத்தும் முறையும் இங்கே தரப்பட்டுள்ளது.
நரைமுடியை கடைகளில் வாங்கும் கெமிக்கல் ஹேர்டை கொண்டு மறைப்பதால் உண்டாகும் கடும் தீங்குகளை மருத்துவர்கள் கூறிக் கொண்டுதான் இருக்கின்றனர்.
தற்காலிகமாக இது தீர்வு தந்தாலும் இதனால் உண்டாகும் பாதிப்புகள் நிறைய.

இயற்கைக்கு மாறுவதாக என்ணினாலும் அவை சரியாக பயன் தருமா என்ற கேள்வியாலேயே அந்த எண்ணத்தை பலரும் கிடப்பில் போட்டுவிடுகிறார்கள்.
இன்னும் சிலர் அதனை தயாரிப்பதற்கு சோம்பேறித்தனம் பட்டு ரசாயன டையையே உபயோகப்படுத்துகிறார்கள்.
இயற்கையை எப்படி பயன்படுத்தலாம் என பலவித வல்லுநர்கள் பலவற்றையும் சோதித்து சிறந்த இயற்கை டைக்களை தயாரித்து வெற்றியும் பெற்றிருக்கிறார்கள்.. அவ்வகையில் இந்த பீட்ரூட் ஹேர் டை மிகவும் பயனை உபயோகமாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள்.

தேவையானவை :
பீட்ரூட்- நடுத்த அளவு
காபி பொடி - 3 ஸ்பூன்
செம்பருத்தி - 10
எலுமிச்சை - சாறு

செய்முறை :
முதலில் பீட்ரூட்டை துருவிக் கொள்ளுங்கள். அதனுடன் காபிப் பொடி மற்றும் செம்பருத்தி பேஸ்ட்டை கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

அடர் கடிகாஷன் :
200 மி.லி நீரை எடுத்து அதனுடன் பீட்ரூட் கலவை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும்.கலவை 50 மி.லி அளவு சுண்டும் வரை கொதிக்க வைத்தால் அடர் நிற டிகாஷன் உண்டாகும்.

தலையில் தடவவும் :
சூடு ஆறியதும் அதனுடன் எலுமிச்சை சாறை கலந்து இந்த கலவையை தலையில் தேய்க்கவும். 1 மணி நேரம் வரை அப்படியே ஊற வைத்திடுங்கள். ஷவர் கேப் போடாமல் நன்றாக காய விடுங்கள்.

வாரம் ஒருமுறை :
பின்னர் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலசுங்கள். இவ்வாறு வாரம் ஒருமுரை செய்துவந்தால் கூடிய விரைவில் நரைமுடியை கருமையாக மாற்றலாம்.



Click it and Unblock the Notifications
