Latest Updates
-
மீந்து போன சப்பாத்தி இருக்கா? அப்ப இப்படி சில்லி சப்பாத்தி செய்யுங்க.. அல்டிமேட்டா இருக்கும்.. -
செப்டம்பர் 30 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு தொட்டதெல்லாம் வெற்றிதானாம் -
October 2026: அக்டோபர் மாதம் இந்த 4 ராசிக்கு தொழில் ரீதியாக அதிர்ஷ்டமா இருக்கும்! -
சூரியன் துலாம் ராசிக்குள் நுழையப்போவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி என்ன? -
தாபா ஸ்டைல் ராஜ்மா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு அருமையா இருக்கும் -
1 கப் கடலைப்பருப்பு இருந்தா.. சப்பாத்திக்கு இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. டக்கரா இருக்கும்.. -
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பர்களுக்கு ரொம்ப விசுவாசமா இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
பார்லர் செல்லாமல் முகப்பொலிவை அதிகரிக்கணுமா? அப்ப ரோஸ் வாட்டரை இப்படி யூஸ் பண்ணுங்க... -
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
ஏன் இரவில் தலைக்கு குளிக்க வேண்டும் என தெரியுமா?
கூந்தல் பராமரிப்பு மிக முக்கியமானது. சரியாக பராமரிக்கும் கூந்தலில் பொடுகு, முடி உதிர்தல், போன்ற பாதிப்புகள் உண்டாகாது.அதில் முக்கியமானது தலைக்கு குளிப்பது. அதனைப் பற்றி இங்கு காண்போம்.
பொதுவாக நாம் காலையில்தான் தலைக்கு குளிப்போம். ஆனால் இரவில் குளிப்பதால் பல நன்மைகள் உண்டாகின்றன. காலையில் தலைக்கு குளிப்பது இரு மடங்கு வேலையாகும்.

தலைக்கு சரியாக எண்ணெய் மசாஜ் செய்ய முடியாது. துவட்ட நேரமின்றி ஓட வேண்டும். இதனால் தலைவலி, சைனஸ் போன்றவையும் தொற்றிக் கொள்ளும்.
ஆனால் இரவில் குளிப்பதால் அப்படியில்லை. பல நன்மைகள் உண்டாகின்றன. அவ்ற்றைப் பற்றி இங்கு காண்போம்.

நிதானமாக தலையை சுத்தம் செய்யலாம்:
காலையில் குளிக்கும்போது தலைமுடியை சரியாக அலச முடியாது. ஆனால் இரவில் அழுக்கு போக நிதானமாக தலைமுடியை அலசலாம்.

இயற்கை சரும எண்ணெய் :
இரவில் தலைக்கு குளிக்கும்போது தலையில் போதிய அளவு எண்ணெய் சுரக்க அவகாசம் கொடுக்கிறோம். இதனால் வறட்சியின்றி வெடிப்பின்றி கூந்தல் பாதுகாக்கப்படும்.

சூரிய ஒளி பாதிப்பு :
தலைக்கு குளித்ததும் கூந்தல் மிகவும் பலவீனமாக இருக்கும். அந்த சமயங்களில் சூரிய ஒளிப்படும் போது கூந்தல் கற்றைகள் பாதிக்கப்படும்.

சிகை அலங்காரம் :
காலையில் தலைக்கு குளித்த பின் செய்யப்படும் சிகை அலங்காரத்தால் கூந்தலின் வேர்க்கால்கள் பாதிக்கப்படும். இரவினில் அதனை அப்படியே விடுவதால் கூந்தல் பாதிக்கப்படுவதில்லை.

சைனஸ், தலைவலி இல்லை :
இரவில் தலைக்கு குளிக்கும்போது நன்றாக துவட்டுவீர்கள். இதனால் நீர் தலையில் தங்கும் வாய்ப்பில்லை. இதனால் நீர் கோர்க்கும் பாதிப்பு உண்டாகாது.



Click it and Unblock the Notifications
