Latest Updates
-
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
அக்டோபர் மாத சூரிய பெயர்ச்சி: இந்த 6 ராசிக்காரங்க அடுத்த 1 மாதம் கவனமா இருக்கணும்! -
சைக்கோவாக நடந்து கொள்ளும் 4 ஆபத்தான ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
1/2 மூடி தேங்காய் இருந்தா.. இத ஒரு டைம் ட்ரை பண்ணுங்க.. 15 நாள் வரை வெச்சு சாப்பிடலாம்..
அலுமினியத்தாளை தலையில் சுற்றிக் கொள்வதால் பெறும் நன்மை பற்றி தெரியுமா?
அலுமினியத்தாளை தலையில் சுற்றி ஹேர் மாஸ்க்கை ஊற வைப்பதால், ஹேர் மாஸ்க்கில் உள்ள சத்துக்கள் ஸ்கால்ப் மற்றும் தலைமுடியால் உறிஞ்சப்பட்டு, பொடுகுத் தொல்லை மற்றும் தலைமுடி உதிர்வது போன்றவை தடுக்கப்படும்.
யாருக்கு தான் அழகான பட்டுப்போன்ற தலைமுடியின் மீது ஆசை இருக்காது. ஆனால் தற்போதைய மாசுக்கள் நிறைந்த சுற்றுச்சூழலால் பல்வேறு தலைமுடி பிரச்சனைகளை சந்திக்கிறோம். குறிப்பாக ஸ்கால்ப்பில் அழுக்குகளின் தேக்கத்தால் தலைமுடி உதிர்வதை சந்தித்து, முடியின் அடர்த்தியை இழக்க நேரிடுகிறது.

இதனால் பலரும் தங்கள் முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்த எத்தனையோ நேச்சுரல் ஹேர் மாஸ்க்குகளை முயற்சித்திருப்போம். ஆனால் இயற்கைப் பொருட்களைக் கொண்டு போடும் ஹேர் மாஸ்க்குகளில் உள்ள சத்துக்கள் தலைச்சருமத்திற்கு கிடைக்கிறதா என்று கேட்டால் பலருக்கும் தெரியாது. இருப்பினும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழியைப் பின்பற்றிப் பாருங்கள்.

நேச்சுரல் ஹேர் மாஸ்க்கிற்கு தேவையான பொருட்கள்:
ஆரஞ்சு/எலுமிச்சை - 1
வாழைப்பழம் - 1
பால் -2 லிட்டர்
அலுமினியத்தாள்

செய்யும் முறை #1
முதலில் எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழத்தை பிழிந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

செய்யும் முறை #2
பின் மிக்ஸியில் வாழைப்பழம் மற்றும் பாலை ஊற்றி, அதோடு எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழச்சாற்றினை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

செய்யும் முறை #3
பிறகு அதை ஸ்கால்ப்பில் படும்படி 2-3 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின் அலுமினியத்தாளை தலையில் சுற்றி, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

செய்யும் முறை #4
இறுதியில் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.

அலுமினியத் தாள் நன்மை
அலுமினியத்தாளை தலையில் சுற்றி ஊற வைப்பதால், ஹேர் மாஸ்க்கில் உள்ள சத்துக்கள் ஸ்கால்ப் மற்றும் தலைமுடியால் உறிஞ்சப்பட்டு, பொடுகுத் தொல்லை மற்றும் தலைமுடி உதிர்வது போன்றவை தடுக்கப்படும்.



Click it and Unblock the Notifications
