For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியைத் தூண்ட சாப்பிட வேண்டிய உணவுகள்!

இங்கு தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உங்கள் உணவில் சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

|

தலைமுடி பிரச்சனை இல்லாதவர்களே இருக்க முடியாது. தலைமுடி உதிர ஆரம்பித்தால், முதலில் நம்மில் பெரும்பாலானோர் செய்வது, அதைத் தடுக்க உதவும் ஹேர் ஆயில், ஹேர் மாஸ்க் போன்றவற்றை தான். தலைமுடி உதிர்ந்தால், முதலில் அதற்கான காரணங்களை அறிந்து கொண்டு, பின் அதற்கேற்றாற் போல் செயல்பட வேண்டும்.

Diet To Reverse Hair Loss: Best Foods For Hair Growth

தலைமுடி உதிர்வதற்கு மன அழுத்தம், மயிர்கால்களின் வளர்ச்சிக்குத் தேவையான ஊட்டச்சத்துக் குறைபாடுகள், பழக்கவழக்கங்கள் போன்றவை தான். எனவே தலைமுடி அதிகம் உதிர்வது போல் இருந்தால், மன அழுத்தத்தைக் குறைக்க யோகா, உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடுவதுடன், நல்ல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

இங்கு தலைமுடி உதிர்வதைத் தடுத்து, முடியின் வளர்ச்சியைத் தூண்டும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உங்கள் உணவில் சேர்த்து நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மயிர்கால்களுக்கு ஊட்டமளித்து, தலைமுடியின் ஆரோக்கியமான வளர்ச்சியை ஊக்குவிக்கும். இச்சத்தை எவ்வளவுக்கு எவ்வளவு உணவில் சேர்த்துக் கொள்கிறோமோ, அவ்வளவு ஆரோக்கியமாக தலைமுடி இருக்கும்.

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள்

ஆளி விதை, வால் நட்ஸ், சால்மன் மீன், சூரை மீன், கேல் கீரை, முளைக்கட்டிய கிளை கோசுகள் போன்றவை.

ஜிங்க்

ஜிங்க்

ஜிங்க் சத்து உடலில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் மற்றும் இதர ஹார்மோன்களின் உற்பத்தியை சீராக வைத்து, ஸ்கால்ப்பில் சீரான அளவில் எண்ணெயை உற்பத்தி செய்து வெளியிட்டு, திசுக்கள் வளர்ச்சி மற்றும் அவைகளைப் புதுப்பித்து, தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும்.

ஜிங்க் நிறைந்த உணவுகள்

ஜிங்க் நிறைந்த உணவுகள்

கொண்டைக்கடலை, கடல் சிப்பி, மாட்டிறைச்சி போன்றவற்றில் ஜிங்க் சத்து ஏராளமாக உள்ளது.

புரோட்டீன்

புரோட்டீன்

புரோட்டீன் உடலில் குறைவாக இருந்தால், தலைமுடி ஏராளமாக கொட்டும். தலைமுடியின் உருவாக்கத்திற்கு புரோட்டீன் முக்கிய பொருள் என்பதால், இச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்து வர, தலைமுடி வலிமையடைந்து உதிர்வது குறையும்.

புரோட்டீன் நிறைந்த உணவுகள்

புரோட்டீன் நிறைந்த உணவுகள்

தயிர், முட்டை மஞ்சள் கரு, கேல் கீரை, வேர்க்கடலை, பீன்ஸ், பட்டாணி, பருப்பு வகைகள், டோஃபு, சிக்கன் மற்றும் வான் கோழி.

இரும்புச்சத்து

இரும்புச்சத்து

ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கு இரும்புச்சத்து அவசியமானது. உடலில் இரும்புச்சத்து குறைவாக இருந்தால், இரத்த உற்பத்து மற்றும் அதன் ஓட்டம் பாதிக்கப்பட்டு, முடியின் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். ஆகவே தலைமுடி உதிரும் போது இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுங்கள்.

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்

இரும்புச்சத்து நிறைந்த உணவுகள்

பச்சை இலைக் காய்கறிகள், முழு தானியங்கள், பீன்ஸ், மாட்டிறைச்சி, வான் கோழி, முட்டை மஞ்சள் கரு, கடல் சிப்பி, பருப்பு வகைகள், உலர்ந்த முந்திரிப்பழம்.

வைட்டமின் ஏ மற்றும் சி

வைட்டமின் ஏ மற்றும் சி

இந்த இரண்டு வைட்டமின்களும், ஸ்கால்ப்பில் எண்ணெய் உற்பத்தியை தூண்டி, தலைமுடி உதிர்வதைத் தடுக்கும். மேலும் வைட்டமின் சி சத்து இரும்புச்சத்து உற்பத்தியை ஊக்குவிக்கும்.

வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த உணவுகள்

வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்த உணவுகள்

பசலைக் கீரை, ப்ராக்கோலி, கேரட், சர்க்கரைவள்ளிக் கிழங்கு, பூசணிக்காய், ப்ளூபெர்ரி.

மக்னீசியம்

மக்னீசியம்

மக்னீசியம் குறைபாடு இருந்தாலும், தலைமுடி அதிகமாக உதிரும். எனவே மக்னீசியம் நிறைந்த உணவுகளை தினமும் சாப்பிட்டு வாருங்கள்.

மக்னீசியம் நிறைந்த உணவுகள்

மக்னீசியம் நிறைந்த உணவுகள்

பாதாம், பசலைக்கீரை, முந்திரி, பருப்பு வகைகள், கைக்குத்தல் அரிசி.

செலினியம்

செலினியம்

செலினியம் என்னும் கனிமச்சத்து தான், உடலில் செலினோபுரோட்டீன்களை உற்பத்தி செய்து, மெட்டபாலிசம், இனப்பெருக்கம், டிஎன்ஏ கூட்டுச்சேர்க்கை போன்றவற்றை சீராக்குவதோடு, மயிர்கால்களை ஊக்குவித்து முடியின் வளர்ச்சியைத் தூண்டும்.

செலினியம் நிறைந்த உணவுகள்

செலினியம் நிறைந்த உணவுகள்

பிரேசில் நட்ஸ், டூனா மன், இறால், மத்தி மீன் போன்றவற்றில் செலினியம் அதிகம் நிறைந்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Diet To Reverse Hair Loss: Best Foods For Hair Growth

Here are some best foods for hair growth. Read on to know more....
Desktop Bottom Promotion