இந்திய ஆண்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளும்... அதற்கான தீர்வுகளும்...

Posted By:
Subscribe to Boldsky

பெண்களைப் போன்றே ஆண்களும் பல்வேறு சரும பிரச்சனைகளால் அவஸ்தைப்படுகின்றனர். ஆண்கள் இவ்வாறு சரும பிரச்சனைகளை சந்திப்பதற்கு காரணம் மோசமான சுகாதாரம் தான். இப்படி சுகாதாரமின்றி இருப்பதால், ஆண்களின் சருமத்தில் அழகைக் கெடுக்கும்படியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.

இங்கு இந்திய ஆண்கள் சந்திக்கும் சரும பிரச்சனைகளும், அதற்கான தீர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து, அதன்படி பின்பற்றி உங்களின் அழகை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரேசர் எரிச்சல்

ரேசர் எரிச்சல்

ஷேவிங் செய்த பின், சில ஆண்களுக்கு சருமத்தில் கடுமையான எரிச்சல் ஏற்படும். இப்படி எரிச்சல் ஏற்படுவதற்கு காரணம், மொக்கையான பிளேடு அல்லது ட்ரை ஷேவிங் செய்திருப்பது தான்.

இதைத் தடுக்க, ஷேவிங் செய்யும் முன் சருமத்தை மென்மையாக்க வேண்டும். அதற்கு ஷேவிங் ஆயிலை முதலில் பயன்படுத்தி, பின் ஜெல் க்ரீம் பயன்படுத்தி ஷேவிங் செய்துவிட்டு, இறுதியில் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். முக்கியமாக பயன்படுத்தும் ரேசர் புதியதாக இருக்க வேண்டும்.

பொடுகு

பொடுகு

பெண்கள் மட்டுமின்றி நிறைய ஆண்களும் பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுவார்கள். இதைத் தடுக்க ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் கலந்து, அதைக் கொண்டு தலைமுடியை அலசுங்கள்.

அதுமட்டுமின்றி மைல்டு ஷாம்பு பயன்படுத்துங்கள். ஈரமான முடியுடன் தலையணையில் படுக்காதீர்கள். ஏனெனில் தலையில் ஈரம் எப்போதும் இருந்தால், பொடுகுத் தொல்லை இன்னும் அதிகரிக்கும்.

முதுகு பருக்கள்

முதுகு பருக்கள்

பெரும்பாலான ஆண்களின் முதுகில் பருக்கள் அதிகம் இருக்கும். இப்படி முதுகில் பருக்கள் அதிகம் வருவதற்கு, அதிகப்படியான டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியினால், முதுகுப் பகுதியில் உள்ள எண்ணெய் சுரப்பி அதிகமான அளவில் எண்ணெயை சுரக்கும்.

முதுகில் வரும் பருக்களைத் தடுக்க, ஆன்டி-பாக்டீரியல் மற்றும் சாலிசிலிக் அமிலம் நிறைந்த பாடி வாஷ் கொண்டு முதுகுப் பகுதியை தினமும் சுத்தம் செய்யுங்கள். மேலும் காட்டன் உடைகளையே எப்போதும் உடுத்துங்கள்.

அதிகப்படியான சரும ரோமம்

அதிகப்படியான சரும ரோமம்

ஆண்களின் உடலில் ரோமம் அதிகம் இருந்தால், அது அவர்களின் ஆண்மையை வெளிக்காட்டும். இருந்தாலும், இக்காலத்து சில மார்டன் ஆண்கள் இந்த ரோமத்தை வெறுக்கிறார்கள். இதனைத் தவிர்க்க பலவற்றிற்கு உதவும் ட்ரிம்மரைப் பயன்படுத்துங்கள்.

மஞ்சள் நிற பற்கள்

மஞ்சள் நிற பற்கள்

காபி, சிகரெட் போன்றவற்றால் பற்கள் மஞ்சள் நிறத்தில் மாறுகின்றன. ஆண்கள் மஞ்சள் நிறத்தில் பற்களை வைத்திருந்தால், எந்த ஒரு பெண்ணும் அருகில் கூட வரமறுப்பார்கள்.

மஞ்சள் நிறப் பற்களைத் தவிர்க்க, சிகரெட் பழக்கத்தைக் கைவிடுவதோடு, பழங்கள் மற்றும் காய்கறிகளை பச்சையாக அதிகம் சாப்பிடுங்கள். இதனால் மஞ்சள் பற்கள் தடுக்கப்படும்.

தலைமுடி உதிர்வது

தலைமுடி உதிர்வது

பெண்களை விட ஆண்கள் தான் அதிகளவில் தலைமுடி உதிர்வால் அவஸ்தைப்படுகிறார்கள். அதோடு, நரைமுடியாலும் கஷ்டப்படுகின்றனர். இதற்கு காரணம் அவர்களது தவறான தலைமுடி பராமரிப்பு, மன அழுத்தம் போன்றவைகள் தான். இவற்றைத் தவிர்த்தால், தலைமுடி உதிர்வைத் தடுக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Common Indian Guy Grooming Problems, Solved!

Here are some common indian guy grooming problems and solutions. Read on to know more...
Story first published: Thursday, October 6, 2016, 12:58 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter