முடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க தலைக்கு எப்படி குளிப்பது?

Posted By:
Subscribe to Boldsky

ஒருவரின் அழகில் முக்கிய பங்கினை வகிப்பது முடி. அத்தகைய முடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பது மிகவும் இன்றியமையாதது. அதற்காக பலரும் முடியைப் பராமரிக்க கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட பொருட்களை பயன்படுத்துவதோடு, ஹேர் பேக்குகளையும் போடுவார்கள். அதுமட்டுமின்றி, சிலர் தினமும் தலைக்கு குளித்து வருவார்கள்.

பலருக்கு தினமும் தலைக்கு குளிப்பது சரிதானா என்ற கேள்வி இருக்கும். ஆனால் தாங்கள் சரியாகத் தான் தலைக்கு குளிக்கின்றோமா என்ற தெரியாது. ஆம், நிறைய பேருக்கு சரியான வழியில் எப்படி முடியை அலசுவது என்று தெரியாது. ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை முடி ஆரோக்கியமாக இருக்கவும், அதன் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் எப்படி முடியை அலச வேண்டும் என்று கொடுத்துள்ளது. அதன்படி குளித்து வந்தால், நிச்சயம் முடி ஆரோக்கியமாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முடியை அலசவும்

முடியை அலசவும்

எப்படி துணியைத் துவைக்கும் முன், நீரில் ஒருமுறை அலச வேண்டுமோ, அதேப்போல் தலைக்கு ஷாம்பு போடும் முன் முடியை நீரில் நன்கு அலச வேண்டும். அதிலும் வெதுவெதுப்பான நீரில் முடியை அலசினால், ஸ்கால்ப்பில் உள்ள மயிர்துளைகள் திறக்கப்பட்டு அதில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேற உதவியாக இருக்கும்.

நீளமான முடிக்கு கண்டிஷனர்

நீளமான முடிக்கு கண்டிஷனர்

உங்களுக்கு முடி நீளமாக இருந்தால், முதலில் ஷாம்பு போடுவதற்கு முன், கண்டிஷனர் போடுங்கள். இதனால் முடியின் முனைகள் ஆரோக்கியமாக இருப்பதுடன், க்யூட்டிகிள்களில் ஏதேனும் துளைகள் இருந்தால், அவை நிரப்பப்பட்டு, மென்மையாகி, முடி பட்டுப் போன்று இருக்கும்.

ஷாம்பு ஸ்கால்ப்பிற்கு மட்டுமே!

ஷாம்பு ஸ்கால்ப்பிற்கு மட்டுமே!

ஷாம்புவை ஸ்கால்ப்பிற்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். முடியின் முனை வரைப் பயன்படுத்தினால், ஷாம்புவில் உள்ள கெமிக்கல்கள் முடியில் உள்ள இயற்கை எண்ணெய் பசையை நீக்கி, முடியின் முனைகளில் வெடிப்புக்களை ஏற்படுத்திவிடும். அதுவே ஸ்காப்பிற்கு மட்டும் போட்டு அலசினால், ஸ்கால்ப்பில் உள்ள அழுக்குகள் நீங்குவதோடு, ஸ்கால்ப்பில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் ஸ்கால்ப்பை வறட்சி அடையாமல் தடுக்கும்.

ஒருமுறை போதும்

ஒருமுறை போதும்

தலையில் அழுக்கு அதிகம் உள்ளது என்று இரண்டு முறை ஷாம்பு போட வேண்டாம். அப்படி ஷாம்பு போட்டால், அவை தலையில் உள்ள எண்ணெய் பசை அனைத்தையும் முற்றிலும் வெளியேற்றி, ஸ்காப்பின் ஆரோக்கியத்தைப் பாதித்துவிடும். எனவே ஒருமுறை ஷாம்பு போடுவதோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.

முடியின் முனைகளில் மட்டும் கண்டிஷனர்

முடியின் முனைகளில் மட்டும் கண்டிஷனர்

ஷாம்பு போட்டு குளித்த பின்னர், முடியின் முனைகளில் மட்டும் மீண்டும் கண்டிஷனர் தடவி அலச வேண்டும்.

குளிர்ந்த நீர்

குளிர்ந்த நீர்

தலைக்கு குளித்த பின்னர், இறுதியில் குளிர்ந்த நீரினால் முடியை அலச வேண்டும். இதனால் தளர்ந்த மயிர்கால்கள் இறுக்கமடைவதோடு, க்யூட்டிகிள்களும் இறுக்கமடைந்து, முடிக்கு ஒரு பொலிவான அதே சமயம் ஆரோக்கியமான தோற்றத்தைக் கொடுக்கும்.

தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா?

தினமும் தலைக்கு குளிப்பது நல்லதா?

உண்மையில் தினமும் தலைக்கு குளிப்பது என்பது நல்லதல்ல. அப்படி தினமும் குளித்தால், ஸ்கால்ப்பில் உள்ள இயற்கையான எண்ணெய் பசை நீங்கி, முடி உதிர்வது, பொடுகுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படும். மேலும் வாரத்திற்கு 2-3 முறை தலைக்கு குளிப்பது தான் சிறந்ததும் கூட.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to Wash Your Hair — The Right Way

You may do it practically every day, but do you really know how to wash your hair the right way? Using the correct techniques can make a world of difference in your hair’s health, bounce, and shine — but if you’re making some common mistakes, you could be damaging your strands without even knowing it.
Story first published: Saturday, February 28, 2015, 17:22 [IST]
Subscribe Newsletter