நீளமான கூந்தல் வேண்டுமா? அப்ப சீகைக்காய் யூஸ் பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

உங்களுக்கு கூந்தல் உதிர்தல் அதிகமாக உள்ளதா? கூந்தல் பொலிவிழந்து ஆரோக்கியமற்றதாக காணப்படுகிறதா? அப்படியெனில் அதற்கு நல்ல தீர்வை சீகைக்காய் கொடுக்கும். சீகைக்காய் தலைமுடியை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் ஒரு பொருள். இதனைக் கொண்டு கூந்தலைப் பராமரித்தால், கூந்தல் மென்மையாக, அழகாக, பொலிவோடு மற்றும் அடர்த்தியாக இருக்கும்.

இங்கு சீகைக்காய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவையும், சீகைக்காயைக் கொண்டு முடியை எப்படி பராமரிப்பது என்றும் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சீகைக்காயில் உள்ள சத்துக்கள்

சீகைக்காயில் உள்ள சத்துக்கள்

சீகைக்காயில் வைட்டமின் ஏ, சி, கே மற்றும் டி-யுடன் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகமாக உள்ளது. இவை கூந்தல் வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது. மேலும் இதில் உள்ள மைக்ரோ-நியூட்ரியன்ட்டுகள் கூந்தல் வளர்ச்சியை தூண்டி, முடியின் இயற்கை அழகைத் தக்க வைக்கும். அக்காலத்தில் எல்லாம் சீகைக்காயை வாங்கி அரைத்து தான் பயன்படுத்துவார்கள். ஆனால் தற்போது சீகைக்காய் பொடி கடைகளில் எளிதில் கிடைக்கிறது. ஆகவே எவ்வித கஷ்டமும் இல்லாமல், ஷாம்புவிற்கு பதிலாக சீகைக்காயை வாங்கிப் பயன்படுத்துங்கள்.

சீகைக்காய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவைகள்

சீகைக்காய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவைகள்

* சீகைக்காய் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பிருந்தே கூந்தலைப் பராமரிக்கப் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

* சீகைக்காயில் pH-இன் அளவு குறைவாக இருப்பதால், இதனைப் பயன்படுத்தும் போது, அவை தலையில் ஈரப்பசையைத் தக்க வைத்து, கூந்தலை பொலிவோடு வெளிக்காட்டும்.

சீகைக்காய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவைகள்

சீகைக்காய் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவைகள்

* சீகைக்காயைக் கொண்டு முடியைப் பராமரித்தால், அவை பொடுகுத் தொல்லையை முற்றிலும் நீக்கிவிடும். அதுமட்டுமின்றி சீகைக்காய் நல்ல வலிமையான மற்றும் அடர்த்தியான முடி வளர உதவும்.

* தலையில் பேன் தொல்லை அல்லது ஏதேனும் தொற்றுகள் இருந்தால், சீகைக்காய் பயன்படுத்தினால் உடனே நீங்கும்.

சீகைக்காயை ஷாம்பு போன்று எப்படி பயன்படுத்துவது?

சீகைக்காயை ஷாம்பு போன்று எப்படி பயன்படுத்துவது?

சீகைக்காயை ஷாம்பு போன்றும் பயன்படுத்தலாம். அதற்கு சீகைக்காயை தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து, அதனை தலையில் தடவி 2 நிமிடம் மசாஜ் செய்து, முடியை அலச வேண்டும். முக்கியமாக அளவுக்கு அதிகமாக தேய்க்க வேண்டாம். இப்படி சீகைக்காயைக் கொண்டு கூந்தலை அலசி வந்தால், முடி நன்கு பட்டுப்போன்று அழகாக இருக்கும்.

தயிருடன் சீகைக்காய்

தயிருடன் சீகைக்காய்

சீகைக்காய் பொடியில் தயிர் சேர்த்து கலந்து, அதனை தலையில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் நன்கு தேய்த்து, குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்தால், முடி நன்கு ஆரோக்கியமாக இருப்பதை உணரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Use Shikakai For Hair Growth?

Are you tired of seeing incessant hair fall? Do your tresses lack lustre and beauty? Shikakai is the solution to your problem. It enhances your beauty and makes your hair soft, beautiful, radiant and thick!
Story first published: Friday, March 6, 2015, 17:42 [IST]
Subscribe Newsletter