பொடுகைப் போக்கும் ஹென்னா ஹேர் பேக்குகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

பொடுகு பிரச்சனையால் பலர் அவஸ்தைப்படுகின்றனர். இந்த பொடுகு தலையில் வந்துவிட்டால், கூந்தல் உதிர்தல் அதிகம் இருப்பதுடன், முடியே வலுவிழந்து இருக்கும். இதனை தடுக்க பலர் பொடுகைப் போக்க கடைகளில் விற்கப்படும் கண்ட கண்ட ஷாம்புக்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இருப்பினும் பொடுகு போனதாக தெரியாது.

ஆனால் பொடுகைப் போக்க வீட்டிலேயே நிறைய பொருட்கள் உள்ளன. அதில் ஒன்று தான் ஹென்னா என்னும் மருதாணிப் பொடி. இந்த ஹென்னாவை தலைக்கு பயன்படுத்தினால், பொடுகு பிரச்சனை நீங்குவதோடு, கூந்தலும் ஆரோக்கியமாக இருக்கும். இங்கு அந்த ஹென்னாவைக் கொண்டு எப்படியெல்லாம் ஹேர் பேக் போடலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அதன் படி செய்து பாருங்கள்.

ஹென்னா, எலுமிச்சை மற்றும் தயிர் பேக்

4 டேபிள் ஸ்பூன் ஹென்னா பொடியுடன், எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, பின் அதனை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலச வேண்டும்.

ஹென்னா, ஆலிவ் ஆயில் மற்றும் வெந்தய ஹேர் பேக்

இரவில் படுக்கும் போது ஒரு பௌலில் 4 டேபிள் ஸ்பூன் ஹென்னா பொடியுடன், 1 டேபிள் ஸ்பூன் ஆயில் ஆயில், 1 டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகர், 1 டேபிள் ஸ்பூன் வெந்தயப் பொடி, 2 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாய் காலையில் தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி 2-3 மணிநேரம் ஊற வைத்து, பின் நன்கு அலச வேண்டும். இதனாலும் பொடுகு நீங்கும்.

முட்டை மற்றம் ஹென்னா பேக்

இந்த ஹேர் பேக் செய்ய ஒரு பௌலில் 3 டேபிள் ஸ்பூன் ஹென்னா, தண்ணீர், 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் நன்கு அடித்த முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும் படி நன்கு தலை முழுவதும் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

கடுகு எண்ணெய் மற்றும் ஹென்னா

Henna Hair Packs To Cure Dandruff

250 மிலி கடுகு எண்ணெயை ஒரு வாணலியில் ஊற்றி சூடாகி ஆவி வரும் போது, அதனை இறக்கி, அதில் 2 கையளவு மருதாணி இலை மற்றும் 1 டீஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து இரவு முழுவதும் நன்கு ஊற வைத்து, மறுநாள் காலையில் அதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி வைத்துக் கொண்டு, வாரம் ஒருமுறை அந்த எண்ணெய் கொண்டு தலையை மசாஜ் செய்து 1 மணிநேரம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்தாலும் பொடுகு மறையும்.

English summary

Henna Hair Packs To Cure Dandruff

Henna has been used for different hair treatments for centuries now. Here are some henna for dandruff treatment packs that will clear it out for good!
Story first published: Thursday, November 6, 2014, 15:08 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter