இயற்கையான வழியில் ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்து கொள்வது எப்படி?

By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

பெண்கள் அழகுக் கலைகளில் தற்போது ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் (அதாவது, தலைமுடியை சீராக்குவது) ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. இதற்குத் தேவையான பொருட்களுக்கும் நிறைய கிராக்கி ஏற்பட்டுள்ளது. ஆனாலும் இவற்றில் பெரும்பாலானவற்றில் உள்ள வேதிப் பொருட்கள் தலைமுடிக்கும் உடலுக்கும் கேடு விளைவிக்கின்றன.

இதனால் இயற்கையான முறையில் ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்து கொள்ளலாமா என்று யோசித்து, பெண்கள் அதன் பக்கம் தங்கள் கவனத்தைத் திருப்பியுள்ளனர். உண்மை தான். இயற்கையில் கிடைக்கும் சில பொருட்களைக் கொண்டே அட்டகாசமாக ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் செய்து கொள்ளலாம் என்று கண்டறிந்துள்ளனர்.

ஆனால் பொறுமை மிகவும் முக்கியம். சலூனில் கிடைக்கும் ரிசல்ட் போல உடனடி பலன் கிடைத்து விடாது. வாரத்திற்குக் குறைந்தது இரு முறையாவது செய்து வர வேண்டும். நம் வீட்டிலும் கூட எளிதில் கிடைக்கும் அத்தகைய இயற்கையான ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங் பொருட்களைப் பற்றிப் பார்ப்போமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேங்காய்ப் பால் + எலுமிச்சை சாறு

தேங்காய்ப் பால் + எலுமிச்சை சாறு

தேங்காய்ப் பாலில் இயற்கையாகவே ஹேர் ஸ்ட்ரெயிட்டனிங்கிற்குத் தேவையான சத்துக்கள் உள்ளன. அத்துடன் எலுமிச்சைச் சாற்றையும் கலந்து கொண்டால் அதன் பலன் அதிகமாகும். இரண்டையும் கலந்து சில மணிநேரம் குளிர்பதனப் பெட்டிக்குள் வைத்திருக்கவும். அந்தக் கலவையின் மேல் ஒரு க்ரீம் படிந்திருக்கும். அந்தக் க்ரீமைத் தலைமுடியில் நன்றாகத் தடவி, பின்னர் ஒரு டவலைக் கொண்டு தலைமுடியைக் கட்டவும். ஒரு மணிநேரம் கழித்து, டவலைக் களைந்து விட்டு, தலைமுடியை ஷாம்பூ கொண்டு நன்றாகக் கழுவி உலர்த்தி விடவும்.

சூடான எண்ணெய்

சூடான எண்ணெய்

தேங்காய் எண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றைக் கலந்து, தலைமுடியில் அழுத்தி மசாஜ் செய்து தேய்த்து விட்டு, சூடான டவலைக் கொண்டு தலையில் மூடவும். சுமார் 45 நிமிடங்கள் கழித்து, ஷாம்பு தேய்த்து தலைமுடியைக் கழுவ வேண்டும். சில நாட்களுக்குப் பின் ஆலிவ் எண்ணெய்க்குப் பதிலாக பாதாம் எண்ணெயைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

டீ

டீ

டீ பானத்தை ஒரு நேச்சுரல் ஹேர் கண்டிஷனராகப் பயன்படுத்தி, அதைத் தலையில் தடவி விட்டு, பின்னர் கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

பால்

பால்

தலைமுடியைச் சீராக்குவதில் பாலுக்கு முக்கியப் பங்கு உண்டு. ஸ்பிரே பாட்டிலில் பாலை ஊற்றி, தலை முழுவதும் தெளிக்க வேண்டும். சுமார் அரை மணிநேரம் பாலில் தலைமுடி நன்றாக ஊறிய பின்னர், ஷாம்பு கொண்டு அதைக் கழுவ வேண்டும்.

பால் + தேன்

பால் + தேன்

பாலுடன் தேனைக் கலந்து பேஸ்ட் செய்து கொண்டு, அதைத் தலைமுடியில் தடவுங்கள். அந்தக் கலவை சுமார் ஒன்றரை மணிநேரம் வரை நன்றாக உலர்ந்ததும், தலைமுடியைக் கழுவவும். ஸ்ட்ராபெர்ரி அல்லது வாழைப்பழத்தை அந்தக் கலவையில் சேர்த்துக் கொண்டால் பலன் இன்னும் அதிகமாக இருக்கும்.

ஆலிவ் எண்ணெய் + முட்டை

ஆலிவ் எண்ணெய் + முட்டை

பொதுவாகவே தலைமுடியின் ஆரோக்கியத்திற்கு ஆலிவ் எண்ணெயும் முட்டையும் சிறந்தவை. ஆனால் இரண்டையும் தனித் தனியாகப் பயன்படுத்தினால், அவை தலைமுடியில் செய்யும் மாயமே அலாதியானது. இரண்டு முட்டைகளை நன்றாக அடித்துக் கொண்டு, அதில் ஆலிவ் எண்ணெயைக் கலந்து, தலைமுடியில் தடவ வேண்டும். பின், ஒரு மணிநேரம் கழித்து தலையை அலச வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

6 Natural Hair Straightening Products That Work Wonders

There are many such products present in your kitchen, regular use of these products make your hair smoother, softer and straighter. Let’s look at a few natural hair straightening ingredients that will help you in straightening hair at home:
Story first published: Sunday, November 23, 2014, 11:02 [IST]
Subscribe Newsletter