For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த 10 வழிகள்!!!

By Maha
|

பொடுகுத் தொல்லையால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம் இருக்கிறது. கோடைகாலத்தில் உடலில் வறட்சி ஏற்படுவது மட்டுமின்றி, அதிகப்படியான வியர்வையின் காரணமாக, தூசிகள், அழுக்குகள் எளிதில் தங்கிவிடுகின்றன. குறிப்பாக தலையில் அழுக்குகள் தங்கி, பொடுகுத் தொல்லை ஏற்படுகிறது. தலையில் பொடுகு அதிகம் இருப்பதால், முடி கொட்டுதல் அதிகம் ஏற்படும். அதுமட்டுமின்றி இத்தகைய பொடுகுத் தொல்லை ஏற்படுவதற்கு அதிகப்படியான வறட்சி, மோசமான கூந்தல் பராமரிப்பு பொருட்கள் போன்ற பல உள்ளன.

மேலும் பொடுகுத் தொல்லை ஆண், பெண் என்று இருவரும் தான் பாதிக்கப்படுகின்றனர். அதிலும் 10 முதல் 20 வயதுக்குள்ளவர்களும், 30 வயதிற்கு மேற்பட்டவர்களும் தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். மேலும் வேலைக்கு செல்பவர்கள் ஏசியில் நீண்ட நேரம் வேலை செய்வதால், உடல் மற்றும் தலையில் அதிகப்படியான வறட்சி ஏற்பட்டு, அதிகப்படியான அரிப்புக்களால் அவஸ்தைப்படுகின்றனர். எந்நேரமும் தலையில் கையை வைத்துக் கொண்டு இருந்தாலோ அல்லது பொடுகானது உடுத்தும் ஆடைகளில் உதிர்ந்து விழுந்திருந்தாலோ, அது மற்றவர்கள் மத்தியில் கெட்ட எண்ணத்தை ஏற்படுத்தும்.

எனவே இத்தகைய பிரச்சனை இருந்தால், அதனை உடனே தவிர்ப்பதற்கு முயற்சிக்க வேண்டும். அத்தகைய பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்காக, ஒருசில சிறந்த இயற்கை வழிகளை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து பின்பற்றி, பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் சீடர் வினிகர்

ஆப்பிள் சீடர் வினிகர்

பொடுகுத் தொல்லையை நீக்குவதற்கு ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு சிறந்த வழி. அதற்கு 1/2 கப் ஆப்பிள் சீடர் வினிகரை, 1/2 கப் தண்ணீருடன் சேர்த்து, ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி, ஸ்கால்ப்பில் தெளித்து, சிறிது நேரம் மசாஜ் செய்து, குறைந்தது 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து மூன்று மாதத்திற்கு, வாரத்தில் 2 முறை செய்து வந்தால், பொடுகுத் தொல்லை முற்றிலும் அகலும்.

டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயில்

டீ ட்ரீ ஆயிலில், பொடுகை நீக்கும் ஆன்டி-செப்டிக் மற்றும் ஆன்டி-பயாடிக் பொருள் அதிகம் நிறைந்துள்ளது. இந்த எண்ணெயை ஆலிவ் ஆயிலுடன் சேர்த்து கலந்து மசாஜ் செய்தால், பொடுகுத் தொல்லை நீங்கும். அதிலும் 20 மி.லி டீ ட்ரீ ஆயிலுடன், 60 மி.லி ஆலிவ் ஆயிலை சேர்த்து நன்கு கலந்து கொண்டு, பின் அதனை ஸ்கால்ப்பில் தடவி 3 நிமிடம் நன்கு மசாஜ் செய்து, 1 மணிநேரம் ஊற வைத்து, பிறகு தலையை அலச வேண்டும்.

கற்றாழை

கற்றாழை

கற்றாழையும் பொடுகை நீக்கும் ஒரு சிறந்த பொருள். அதற்கு கற்றாழை ஜெல்லை, இரவில் தூங்கும் முன் தலையில் தடவி மசாஜ் செய்து, காலையில் முடியை அலசினால், பொடுகு அகன்றுவிடும்.

வெந்தயம்

வெந்தயம்

வெந்தயம் மற்றொரு பொடுகை போக்கும் சிறப்பான பொருள். அதற்கு இரவில் 2 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை, நீரில் ஊற வைத்து, காலையில் எழுத்ததும் அதனை அரைத்து, ஸ்கால்ப்பில் படும் படி நன்கு தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, சீகைக்காய் போட்டு குளிக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்வது நல்ல பலனைத் தரும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா ஒரு அல்கலைன் என்பதால், அது ஸ்கால்ப்பை ஆரோக்கியத்துடன் எந்த பிரச்சனையும் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளும். அதற்கு முதலில் ஸ்கால்ப்பை நீரில் நன்கு அலசி, பின் பேக்கிங் சோடாவை கையில் எடுத்துக் கொண்டு, ஸ்கால்ப்பில் தேய்த்து, பின் குளிக்க வேண்டும். இந்த முறையை ஒவ்வொரு முறை தலைக்கு குளிக்கும் போதும் செய்தால், தலையில் ஏற்படும் வறட்சி குறைந்து, ஸ்கால்ப்பில் இயற்கை எண்ணெயானது உற்பத்தி ஆகும். அதுமட்டுமின்றி, இது கூந்தலை பட்டுப் போன்றும் வைத்துக் கொள்ளும். குறிப்பாக இவ்வாறு செய்யும் போது, தலைக்கு ஷாம்பு போடக்கூடாது.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றை, 5 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி, மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு குளித்தால், தலையில் உள்ள பொடுகு நீங்கி, ஸ்கால்ப்பில் உள்ள திசுக்கள் ஆரோக்கியமாக, ஈரப்பசையுடன் இருக்கும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் ஒரு சிறந்த ஈரப்பதமூட்டும் ஒரு பொருள். அதே சமயம் இது பொடுகுத் தொல்லையையும் நீக்கக்கூடியது. அதற்கு ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்கால்ப்பில் தடவி, பின் ஒரு ஈரமான துணி கொண்டு தலையை சுற்றி, சிறிது நேரம் ஊற வைத்து, ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்.

ரோஸ்மேரி எண்ணெய்

ரோஸ்மேரி எண்ணெய்

வாசனை திரவியங்களுள் ஒன்றான ரோஸ்மேரி எண்ணெயும் பொடுகை நீக்க ஒரு சிறந்த பொருள். இந்த எண்ணெயை ஷாம்புடன் ஊற்றியோ அல்லது அதனைக் கொண்டு நேரடியாக ஸ்கால்ப்பிற்கு மசாஜ் செய்யவோ செய்யலாம். இதனாலும் பொடுகுத் தொல்லை நீங்கும்.

வேப்பிலை

வேப்பிலை

வேப்பிலையில் ஆன்டி-செப்டிக் பொருள் நல்ல அளவில் உள்ளது. எனவே இதனை பொடுகு உள்ள தலைக்கு பயன்படுத்தினால், பொடுகுத் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். அதற்கு வேப்பிலையை இரவில் படுக்கும் முன் சூடான நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்ததும், அந்த வேப்பிலை நீரைக் கொண்டு, தலையை அலசலாம் அல்லது அந்த வேப்பிலையை அரைத்து, அந்த பேஸ்ட்டை ஸ்கால்ப்பில் தடவி ஊற வைத்து குளிக்கலாம்.

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெய்

பாதாம் எண்ணெயும் பொடுகை நீக்கும் ஒரு சிறந்த பொருள். பாதாம் எண்ணெயை தலையில் நன்கு தடவி மசாஜ் செய்து, 15 நிமிடம் ஈரமான, அதுவும் சூடான நீரில் நனைத்து பிழிந்த துணி கொண்டு சுற்றி, பின் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும். இதனை தொடர்ந்து செய்து வந்தால், நல்ல பலன் விரைவில் கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 Natural Remedies For Dandruff | பொடுகுத் தொல்லையை தவிர்க்க உதவும் சிறந்த 10 வழிகள்!!!

Dandruff can affect anyone both men and women, but is more common on men than women, and it is often occurs on those between the ages of 10 and 20 and affects up to 40 percent of people over the age of 30. The following are some effective natural remedies that can help you to get rid of dandruff.
Story first published: Wednesday, May 8, 2013, 13:28 [IST]
Desktop Bottom Promotion