Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
தீபாவளிக்கு எந்த மாதிரி ஹேர் ஸ்டைல் பண்ண போறீங்க....
சாதாரணமாக பண்டிகை என்றாலே நல்ல அழகான ஆடைகளை உடுத்தி, அலங்கரித்துக் கொண்டு வெளியே கோவில் அல்லது மற்ற இடங்களுக்குச் சென்று வருவோம். ஆனால் தீபாவளி பண்டிகை என்று வரும் போது புதிய ஆடை, பட்டாசு, இனிப்புகள் போன்றவை மட்டும் தான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அந்த நாளிலும், வெளியே அழகாக அலங்கரித்துக கொண்டு, நண்பர்கள் அல்லது உறவினர்கள் வீட்டிற்கு சென்று, அந்த பண்டிகையை கொண்டாடலாம்.
அவ்வாறு அலங்கரிக்கும் போது, அந்த அலங்காரத்தில் உடைகள், மேக்-கப், ஹேர் ஸ்டைல் போன்றவை அடங்கும். அதிலும் பெண்களுக்கு இருக்கும் கூந்தலில் பல வகைகள் உள்ளன. அதாவது, நீளமான கூந்தல், அடர்த்தியான கூந்தல், பாய் கட் போன்றவை. அவ்வாறு கூந்தல் உள்ளவர்கள், பட்டாசு விடும் போது, கூந்தலால் எந்த ஒரு இடையூறும் இல்லாமல் இருக்க, எந்த மாதிரியான ஹேர் ஸ்டைல் பண்ணலாம் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்களேன்...

ஐஸின் அப்சரா லுக்
தீபாவளிக்கு அழகாக சேலை அணிந்து, நெற்றிச்சுட்டி போன்றவற்றை அணிவதாக இருந்தால், ஐஸின் அப்சரா லுக்கான கூந்தலை பிண்ணி, அதனைச் சுற்றி மல்லிகைப் பூவால் அலங்கரிக்கலாம்.

ரோஸி ரோல்
இந்த ஹேர் ஸ்டைலில், சிறிது சிறிதாக கூந்தலை எடுத்து, அவற்றை கிடைமட்டமாகச் சுற்றி, அதில் ரோஸ் பூக்களை வைத்து அலங்கரிக்கலாம். ஆனால் இந்த ஸ்டைல் 60-ல் மிகவும் பிரபலமானது.

ஆண்டி கொண்டை
இந்த கொண்டையின் சிறப்பம்சம் என்னவென்றால், அனைத்து முடியையும் ஒன்றாக பிடித்து சுருட்டி, தலையில் ஹேர் பின் வைத்து குத்திக் கொள்ள வேண்டும். பொதுவாக இதை 30-40-ல் தான் போடுவார்கள். ஆனால் தற்போது இதுவும் ஒரு சூப்பரான ஒரு கொண்டை.

பூக்கொண்டை
அது ஒரு சாதாரணக் கொண்டை. இதில் சாதாரணமாக கொண்டை போட்டு, அதன் பக்கவாட்டில் சூரியகாந்திப் பூ அல்லது மற்ற பெரிய பூவை வைத்து, அலங்கரித்தால், அது தான் பூக்கொண்டை.

சுருட்டை
கூந்தல் குறைவாக இருப்பவர்கள், முடியை சுருட்டையாக்கிக் கொண்டால், அது பார்க்க சற்று வித்தியாசமான தோற்றத்தை தரும். அதைத் தான் தீபிகாவும் செய்துள்ளார்கள்.

வலைக் கொண்டை
இந்த ஸ்டைலில் கரீனாக் கபூர் அழகாக சேலை அணிந்து, அதை வலையால் சுற்றிக் கொண்டு, அதைச் சுற்றி பூக்களை வைத்து அலங்கரித்து, பார்க்க ஒரு டீசண்ட் லுக்கோடு காணப்படுகிறார்.

குதிரை வால் கொண்டை
எப்போது அழகாகக் காணப்படும் வித்யா பாலன் அவர்கள், தன் கூந்தலில் பாதியை கொண்டை போல் போட்டு, மீதியை குதிரை வால் போல் விட்டு, ஒரு வித்தியாசமான அழகில் காணப்படுகிறார். இதை நீங்களும் ட்ரை செய்தால், சூப்பராக இருக்கும்.



Click it and Unblock the Notifications