Just In
- 1 hr ago
சாணக்கிய நீதியின் படி திருமணத்திற்கு முன் இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க... இல்லனா பிரச்சினைதான்!
- 1 hr ago
மாதுளையை 'இப்படி' சாப்பிட்டா தொப்பை குறையுமாம்... அட இத்தன நாள் இது தெரியாம போச்சே...
- 8 hrs ago
Today Rasi Palan 23 January 2023: இன்று இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் பண பிரச்சனை நீங்கிடும்...
- 16 hrs ago
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் பிப்ரவரி 15 வரை இந்த 5 ராசிக்கு அட்டகாசமா இருக்கும்...
Don't Miss
- Technology
WhatsApp மெசேஜ்ஜை அடுத்தவருக்கு தெரியாமல் படிப்பது எப்படி? இந்த சீக்ரெட் மோட்-ஐ ON செய்யுங்க.!
- News
கிருஷ்ணகிரி மக்களின் நீண்டகால கனவு - நிறைவேற்றிக் கொடுத்த முதல்வர் ஸ்டாலின்
- Sports
"3 தனித்தனி அணிகள்.. ஆனாலும் ஒரு சிக்கல்".. பிசிசிஐ திட்டம் குறித்து கபில் தேவ் அறிவுரை.. அடேங்கப்பா
- Automobiles
கண் தெரியாமல் லாரியை ஓட்டும் டிரைவர்கள்! டாக்டர்கள் நடத்திய ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!
- Movies
அசீம் ரசிகர்களுக்கு அல்டிமேட்டாக வாழ்த்து சொன்ன நெட்டிசன்கள்... இதுக்குபேரு தான் மரண கலாய்
- Finance
இது மட்டும் நடந்துட்டா..? மாத சம்பளக்காரர்களுக்குப் பெரும் கொண்டாட்டம் தான்..!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
- Travel
உலகின் 7வது பழமையான நாடு இந்தியா – முதலிடத்தில் இருப்பது இந்த நாடா?
குதிகால் வெடிப்பு உங்க கால் அழகை கெடுக்குதா? இதோ அதை ஓரிரு நாட்களில் போக்கும் சில வழிகள்!
குதிகால் வெடிப்பு மிகுந்த சங்கடத்தையும், அசௌகரியத்தையும் ஏற்படுத்தும். அதுவும் அந்த வெடிப்பு வலியுடன் இருந்தால், அது இன்னும் வேதனையாக இருக்கும். ஒருவருக்கு குதிகால் வெடிப்பு எப்போது வரும் என்றால் குதிகால் பகுதி அதிக வறட்சிக்குள்ளாகும் போது தான். குதிகால் வெடிப்புகளுக்கு போதுமான பராமரிப்புக்களை கொடுக்காமல் விட்டுவிட்டால், பின் செல்லுலிடிஸ் எனப்படும் தோல் தொற்றுநோயைப் பெறுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.
பெரும்பாலும் குதிகால் வெடிப்பை எளிய இயற்கை வழிகளின் உதவியால் போக்கலாம். அப்படிப்பட்ட சில எளிய இயற்கை வழிகள் தான் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை தினமும் இரவு தூங்கும் முன் செய்து வந்தால், விரைவில் குதிகால் வெடிப்பைப் போக்கலாம்.

வாழைப்பழம்
வாழைப்பழத்தில் ஏராளமான அளவில் வைட்டமின் ஏ, பி6 மற்றும் சி உள்ளது. இவை அனைத்தும் சருமத்தின் நெகிழ்வுத்தன்மையைப் பராமரிக்க உதவுவதோடு, சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்துக் கொள்ளும். மேலும் வாழைப்பழம் ஒரு நல்ல மாய்ஸ்சுரைசரும் கூட. இத்தகைய வாழைப்பழத்தில் நன்கு கனிந்ததை கையால் நன்கு பிசைந்து, அதை பாதங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை, இரவு தூங்கும் முன் செய்தால், நல்ல பலன் கிடைக்கும்.

தேன்
தேன் மிகச்சிறந்த ஆன்டி-செப்டிக் பொருளாக கருதப்படுகிறது. எனவே இது குதிகால் வெடிப்பை சரிசெய்வதில் சிறந்தது. இத்தகைய தேனை ஒரு கப் எடுத்துக் கொள்ள வேண்டும். பின் அதை ஒரு வாளி வெதுவெதுப்பான நீரில் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின்பு பாதங்களை சுத்தமாக கழுவிவிட்டு, தேன் கலந்த நீரில் பாதங்களை 20 நிமிடம் ஊற வைத்து எடுக்க வேண்டும். பிறகு பாதங்களை நன்கு உலர்த்திவிட்டு, பாதங்களுக்கு மாய்ஸ்சுரைசரை தடவ வேண்டும்.

வெஜிடேபிள் ஆயில்
வெஜிடேபிள் ஆயில் சருமத்தால் எளிதில் உறிஞ்சப்படும். மேலும் வெஜிடேபிள் ஆயிலில் வைட்டமின் ஏ, டி மற்றும் ஈ போன்ற சருமத்தின் ஆரோக்கியத்திற்கு தேவையான சத்துக்கள் உள்ளன. இத தவிர இந்த எண்ணெய் பாதங்களில் புதிய செல்களை உருவாக்கி குதிகால் வெடிப்பைப் போக்கும். அப்படிப்பட்ட வெஜிடேபிள் ஆயிலை இரவு தூங்கும் முன் சுத்தம் செய்த பாதங்களில் தடவி, கால்களில் சாக்ஸை அணிந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், குதிகால் வெடிப்பு மாயமாய் மறைந்துவிடும்.

வேஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறு
அசிட்டிக் பண்புகள் நிறைந்த எலுமிச்சையுடன் ஈரப்பமூட்டும் விளைவு கொண்ட வேஸ்லினை சேர்த்து கலந்து, அதிகம் வறட்சியடைந்த சருமம் மற்றும் குதிகால் வெடிப்பில் தடவினால் நல்ல பலன் கிடைக்கும். அதற்கு 1 டீஸ்பூன் வேஸ்லினுடன் 4-5 துளிகள் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் பாதங்களை 15 நிமிடம் ஊற வைத்து, பின் நன்கு உலர்த்த வேண்டும். பின்னர் அந்த வேஸ்லின் கலவையை பாதங்களில் தடவி, சாக்ஸை அணிந்து, இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும். இப்படி தினமும் சில நாட்கள் தொடர்ந்து செய்ய, குதிகால் வெடிப்பு ஓரிரு நாட்களில் காணாமல் போகும்.

அரிசி மாவு, தேன் மற்றும் வினிகர்
ஒரு பௌலில் 2 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன், 1 டீஸ்பூன் தேன் மற்றும் 5-6 துளிகள் வினிகரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, பின் பாதங்களில் அந்த பேஸ்ட்டை தடவி, சிறிது நேரம் ஊற வைத்து, பின் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்ய குதிகால் வெடிப்பு நீங்கிவிடும்.