For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருமண கோலத்தில் உங்களை பளபளப்பாக மாற்றும் பிரத்தியேக ஆயுர்வேத முறைகள்..!

|

நாம் மற்ற நாட்களை விட சில சிறப்புமிக்க நாட்களிலே மிகவும் அழகாக இருக்க விரும்புவோம். பெரும்பாலும் விழா காலங்களில், பிறந்த நாள் கொண்டாட்டத்தில், திருமண நேரங்களில். இப்படி பல வகையான விஷேஷமிக்க நாட்களிலே நாம் மிகவும் மகிழ்வுடன் நம்மை அலங்கரித்து கொள்வோம். குறிப்பாக யாருக்காவது திருமணம் என்றால், அவ்வளவுதான்...! அனைத்திற்கும் ஏற்ற நிறத்திலே நாம் எல்லாவற்றையும் அணிவோம். அதுவே, நம் திருமணம் என்றால் சும்மா விடுவோமா..?

Wedding Beauty Tips For Bride And Groom

அழகழகான உடைகள், அவற்றிற்கேற்ற நிறத்திலே வளையல்கள், கிளிப்புகள் என பெண்கள் அணிந்து கொள்வர். ஆண்களும் ஒரே நிறத்திலே உடைகள், செருப்புகள், கைக்கடிகாரம் என அட்டகாசமாக இருப்பர். அந்த வகையில் திருமண நேரத்தில் மணமேடையில் ஆணும் பெண்ணும் ஜொலிக்க செய்யும் முறைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மணநாளின் மகத்துவம்..!

மணநாளின் மகத்துவம்..!

மற்ற நாட்களை விட ஒருவரின் திருமண நாள் மிகவும் இன்றியமையாத நாளாகவே பலராலும் கருதப்படுகிறது. பல ஆயிரம் வருடத்திற்கு முன்பில் இருந்தே திருமணத்தை ஒரு விழாவை போல மக்கள் கொண்டாடி வருகின்றனர். திருமண நாள் அன்று மற்றவர்களை காட்டிலும் மணமக்கள் அட்டகாசமாக இருக்க வேண்டும். இதற்கு இந்த எளிய முறைகள் பயன்படும்.

ஜொலிக்கும் ஃபேஸ் மாஸ்க்..!

ஜொலிக்கும் ஃபேஸ் மாஸ்க்..!

திருமண நாளன்று ஆணும் பெண்ணும் தகதகவென ஜொலிக்க வேண்டும் என்றால் இந்த ஃபேஸ் மாஸ்க் எடுப்பாக இருக்கும். மேலும், இது அவர்கள் இருவரையும் அழகாக காட்டும்.

தேவையானவை :-

3 ஓட்ஸ்

1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு

1 டீஸ்பூன் தேன்

2 டீஸ்பூன் யோகர்ட்

வெது வெதுப்பான நீர்

செய்முறை :-

செய்முறை :-

முதலில் ஓட்ஸை நன்கு பொடி செய்து கொள்ளவும். அடுத்து அவற்றுடன் நீர் சேர்த்து கலக்கவும். பிறகு தேன், எலுமிச்சை சாறு, யோகர்ட் ஆகியவை சேர்த்து நன்கு கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்யவும். 20 நிமிடம் கழித்து இந்த ஃபேஸ் மாஸ்க்கை நீரில் கழுவினால் ஜொலிக்கும் முகத்தை பெறலாம்.

வறண்ட சருமத்தை மேம்படுத்த...

வறண்ட சருமத்தை மேம்படுத்த...

பெரும்பாலான மக்களுக்கு இப்போதெல்லாம் முகம் மிகவும் வறண்டு காணப்படுகிறது. இதற்கு காரணம் எண்ணற்ற தூசிகள், அழுக்குகள் காற்றில் கலந்து விடுவதாலே. உங்கள் வறண்ட சருமத்தை மீண்டும் மெதுமெதுவென மாற்ற இந்த குறிப்பு போதும்.

தேவையானவை :-

1 டீஸ்பூன் தேன்

1 டீஸ்பூன் ரோஸ் நீர்

1 டீஸ்பூன் தயிர்

செய்முறை :-

செய்முறை :-

வறண்ட முகத்தை அழகு பெற செய்ய, இந்த முக்கிய குறிப்பை செய்து பாருங்கள். தேன், தயிர், ரோஸ் நீர் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் பூசி மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவினால், முகத்தின் வறட்சி மறைந்து போகும்.

கைகளின் அழகை மேம்படுத்த...

கைகளின் அழகை மேம்படுத்த...

முகத்தை அழகு படுத்திய நீங்கள் கைகளின் அழகை கண்டு கொள்ளாமல் இருந்து விடாதீர்கள். முகத்தின் அழகு எந்த அளவிற்கு முக்கியமோ, அதே அளவிற்கு கைகளின் அழகும் முக்கியமாகவும்.

தேவையானவை :-

1 உருளை கிழங்கு

1 டீஸ்பூன் தேன்

1 டீஸ்பூன் பால்

செய்முறை :-

செய்முறை :-

வேக வைத்த உருளை கிழங்கை நன்கு மசித்து கொள்ளவும். அடுத்து இவற்றுடன் தேன் மற்றும் பால் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த ஹாண்ட் மாஸ்க்கை கைகளில் பூசி மசாஜ் செய்யவும். பின் வெது வெதுப்பான நீரில் கழுவினால் கைகள் பொலிவு பெரும். மேலும் உருளை கிழங்கு மிருதுவாக கைகளை மாற்றும்.

ஹேர் மாஸ்க்

ஹேர் மாஸ்க்

தலையில் உள்ள முடியின் அழகை மேம்படுத்தும் பொறுப்பு நமக்கு உள்ளது. பலர் திருமண நாளில் அவர்களின் தலையை பராமரிக்க தவறி விடுவர். உங்களுக்கான ஆயுர்வேத முறை இதுவே.

தேவையானவை :-

பாதி அவகேடோ பழம்

1 டேபிள்ஸ்பூன் தேன்

செய்முறை :-

செய்முறை :-

அவகேடோ பழத்தை நன்கு அரைத்து கொள்ளவும். அடுத்து அவற்றுடன் தேன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை 20 நிமிடம் ஊற வைத்து விடுங்கள். பின் இவற்றை முடியின் அடி வேரில் தடவி 20 நிமிடம் கழித்து சிறிது சிகைக்காய் தேய்த்து தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் முடியின் போஷாக்கு அதிகரித்து, மென்மை பெறும்.

பாதங்களை அழகாக்க...

பாதங்களை அழகாக்க...

உங்கள் பாதங்களை மென்மையாக வைத்து கொள்ள 2 டீஸ்பூன் முல்தானி மட்டி மற்றும் 1 முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை ஒன்றாக அடித்து பாதங்களில் பூசி மசாஜ் செய்யுங்கள். பின் வெண்ணீரில் கழிவி விடுங்கள். இவை பாதத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி மென்மை தரும்.

இவற்றையெல்லாம் பின்பற்றி அழகான புதுமண தம்பதியாக கலக்குங்கள் நண்பர்களே...

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களுக்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Wedding Beauty Tips For Bride And Groom

Bridal makeup comes with many options. Groom makeup is a little limited. Here are some beauty tips for both of them.
Story first published: Tuesday, September 11, 2018, 18:08 [IST]
Desktop Bottom Promotion