வாரம் 2 முறை பேக்கிங் சோடாவை பாதங்களில் தேய்ப்பதால் என்ன நடக்கும் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

பேக்கிங் சோடா, சமையலில் மட்டுமின்றி, மருந்துப் பொருளாகவும், சுத்தம் செய்யும் பொருளாகவும், அழகுப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. உங்கள் வீட்டில் பேக்கிங் சோடா உள்ளதா? அதை எப்படி பயன்படுத்துவது என்று உங்களுக்குத் தெரியாதா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

சரி, இப்போது பேக்கிங் சோடாவை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வழி #1

வழி #1

ஒரு அகன்ற வாளியில், நீரை நிரப்பி, அதில் 3 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, பாதங்களை அதில் நன்கு ஊற வைத்து, பின் தேய்த்துக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், பாதங்களில் உள்ள அழுக்குகள் முழுமையாக நீங்குவதோடு, பாதங்களும் அழகாக இருக்கும்.

வழி #2

வழி #2

அதிகமாக வியர்வை வெளியேறுகிறதா? அப்படியெனில் பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, அக்குளில் ஸ்ப்ரே செய்து கொண்டால், வியர்வை அதிகமாக வெளியேறுவது தடுக்கப்படுவதோடு, துர்நாற்றமும் நீங்கும்.

வழி #3

வழி #3

சுட்டெரிக்கும் வெயிலில் சுற்றி சருமம் பயங்கரமாக எரிகிறதா? அப்படியெனில் ஒரு பாத் டப்பில், வெதுவெதுப்பான நீரை நிரப்பி, அதில் 1/2 கப் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, அந்நீரில் 1/2 மணிநேரம் உட்காருங்கள். இன்னும் சிறப்பான பலன் கிடைக்க, துணியால் உடலைத் துடைக்காமல், அப்படியே உலர விடுங்கள்.

வழி #4

வழி #4

தலையில் எண்ணெய் அதிகமாக வழிகிறதா? அப்படியெனில் ஷாம்புவுடன் சிறிது பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, தலைக்கு பயன்படுத்துங்கள். இதனால் தலைமுடி நன்கு பட்டுப் போன்று இருக்கும். தலைமுடி இன்னும் எண்ணெய் பசையுடன் இருந்தால், பேக்கிங் சோடா கலந்த நீரை தலைமுடியில் ஸ்ப்ரே செய்து கொண்டு, பின் சீப்பால் தலைமுடியை சீவுங்கள்.

வழி #5

வழி #5

கூர்மையான பொருட்களால் சருமத்தில் கீறல்கள் இருந்தால், பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து காயத்தின் மீது தடவ, விரைவில் குணமாகும்.

வழி #6

வழி #6

தேனீக்கடிக்கு ஓர் சிறந்த வைத்தியம், பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பாதிக்கப்பட்ட இடத்தில் தடவ விரைவில் சரியாகிவிடும்.

வழி #7

வழி #7

பேக்கிங் சோடா சக்தி வாய்ந்த ஒரு ஆன்டாசிட் ஆகும். நெஞ்செரிச்சல் மற்றும் வயிற்று பிரச்சனைகள் இருந்தால், ஒரு டம்ளர் நீரில் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து குடியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Rub Baking Soda On Feet 2x Per Week. The Result is Stunning

Here are several uses of baking soda or sodium bicarbonate. Read on to know more...
Story first published: Thursday, May 4, 2017, 12:02 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter