For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அக்குள் ரொம்ப கருப்பா இருக்கா..? அதை போக்க இதோ சில வழிகள்!!!

By Maha
|

தற்போதுள்ள பெண்கள் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அதிகம் அணிவதால், அக்குளை நன்கு சுத்தமாகவும், அழகாகவும் வைத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சிலருக்கு அக்குள் மிகவும் கருப்பாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் அக்குளில் உள்ள கருமையை போக்கினால் தான் ஸ்லீவ்லெஸ் ஆடைகளை சங்கடப்படாமல் அணிந்து கொள்ள முடியும்.

அதற்கு குறிப்பாக அக்குளில் வளரும் தேவையற்ற முடிகளை தவறாமல் நீக்க வேண்டும். அதிலும் வேக்சிங், ஹேர் ரிமூவல் க்ரீம் அல்லது ஷேவிங் மூலம் நீக்கலாம். மேலும் அக்குளில் உள்ள கருமையை மேக் அப்பின் மூலம் சரிசெய்ய முடியாது. ஆனால் ஒருசில இயற்கை பொருட்களைக் கொண்டு அக்குளை பராமரிப்பதன் மூலம் போக்க முடியும்.

இங்கு அக்குளில் உள்ள கருமையைப் போக்க உதவும் சில இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றை தினமும் இரவில் படுக்கும் போது அக்குளில் தடவி, காலையில் எழுந்து கழுவி வந்தால், விரைவில் அக்குளில் உள்ள கருமையைப் போக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் இயற்கையாகவே ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், அதனை தினமும் அக்குளில் தடவி 10-15 நிமிடம் ஊற வைத்து, கழுவ வேண்டும். வேண்டுமானால் எலுமிச்சை சாற்றுடன், உப்பு அல்லது சர்க்கரை சேர்த்தும் பயன்படுத்தலாம். அதிலும் இந்த முறையை தினமும் 2-3 முறை செய்து வந்தால் நல்ல பலன் தெரியும்.

சர்க்கரை

சர்க்கரை

சர்க்கரையைக் கொண்டு அக்குளைப் பராமரித்து வந்தால், சர்க்கரையானது அக்குளில் உள்ள இறந்த செல்களை நீக்கிவிடும். அதற்கு சர்க்கரையை நீரில் கலந்து, அதனைக் கொண்டு ஸ்கரப் செய்ய வேண்டும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, அதனைக் கொண்டு அக்குளை ஸ்கரப் செய்து வந்தால், அக்குள் கருமை நீங்குவதுடன், அக்குளில் இருந்து வெளிவரும் துர்நாற்றமும் நீங்கும். வேண்டுமானால், பேக்கிங் சோடாவுடன், ரோஸ் வாட்டர் கலந்து கொள்ளலாம்.

பால்

பால்

பாலில் குங்குமப்பூவை சேர்த்து, அந்த கலவையைக் கொண்டு அக்குளை மசாஜ் செய்து வந்தாலும், நல்ல மாற்றம் தெரியும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் கொண்டு தினமும் மூன்று முறை மசாஜ் செய்து வந்தால், அக்குள் கருமை நீங்கிவிடும். அதிலும் தேங்காய் எண்ணெயுடன் எலுமிச்சை சாறு மற்றும் தயிர் சேர்த்து கலந்து செய்தால், இன்னும் நல்ல பலன் கிடைக்கும்.

கடலை மாவு

கடலை மாவு

கடலை மாவும் சருமத்தில் உள்ள கருமையைப் போக்க உதவும் பொருட்களில் ஒன்று. அதிலும் அக்குளில் உள்ள கருமையைப் போக்க வேண்டுமானால், கடலை மாவுடன், தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தடவி உலர வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் இரண்டு முறை செய்ய வேண்டும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கின் துண்டுகளைக் கொண்டு அக்குளை சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இதனை தினமும் இரண்டு தடவை செய்து வருவது நல்லது.

மெருகேற்ற உதவும் கல்

மெருகேற்ற உதவும் கல்

எரிமலைக் கற்களான மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு, அக்குளை மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் அந்த கல்லானது அக்குளில் உள்ள இறந்த செல்களை நீக்கி, அக்குள் கருமையைப் போக்கிவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lighten Armpits Overnight: Remedies

Dark armpits can be a really embarrassing view. So, to whiten your dark armpits, you need some immediate remedy. Here are the best natural remedies to whiten your dark underarms overnight!
Story first published: Friday, March 7, 2014, 10:33 [IST]
Desktop Bottom Promotion