For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திராட்சை பழ ஜுஸ் மூலம் கிடைக்கும் அழகு நன்மைகள்!!!

By Boopathi Lakshmanan
|

திராட்சை பழம் நல்லவகை மது தயாரிப்பதற்கு மட்டுமல்லாமல் இதற்கு நல்ல மருத்துவ குணங்களும் உண்டு. இப்பழத்தில் உள்ள ரெஸ்வெராட்ரால் அல்லைமர் நோயை குணமாக்கும் சக்தியை கொண்டுள்ளது. இவை உடம்பில் உள்ள கொழுப்பையும் சிறுநீரக உறுப்பில் உள்ள யூரிக் அமிலத்தையும் நீக்க உதவுகின்றது. இதனால் இதயம் மற்றும் சிறுநீரகம் ஆகியவை சீருடன் செயல் பட உதவுகின்றது.

சரும அழகை அதிகரிக்க ஆசையா? அப்ப உருளைக்கிழங்கை யூஸ் பண்ணுங்க...

வைட்டமின்கள், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச் சத்து ஆகியவை அதிக அளவு உள்ள இந்த பழத்தில் சருமத்தை நல்ல நலத்துடன் வைத்துக்கொள்ளும் சக்தி உண்டு. இது நமது ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். இதை நாம் அவ்வப்போது அருந்தினால் சலி, இருமல், போன்ற வைரஸ் தாக்குதலை தடுக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகத்தை சுத்தப்படுத்தும்

முகத்தை சுத்தப்படுத்தும்

வெளிரென்ற முகத்தை பெற விரும்பினால், திராட்சை பழச்சாற்றை பிழிந்து எடுத்த பின் மீதம் உள்ள சக்கையை தூக்கி போடாமல் அதை முகத்தில் ஒரு மாஸ்க் போன்று பூசி சிறிது நேரத்திற்கு பின் கழுவ வேண்டும். திராட்சை சாற்றில் அதிக அளவு ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் உள்ளது. இது உங்கள் சருமத்தை சுத்திகரித்து இரத்தத்தில் உள்ள பிளேட்லட்ஸ்களை அதிகப்படுத்தி சருமம் புதிதாகவும் சுத்தமாகவும் மாற்றுகின்றது.

சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாப்பது

சூரிய வெப்பத்திலிருந்து பாதுகாப்பது

ஃப்ளேவோனாய்டுகள் அதிகம் உள்ள இப்பழச் சாற்றின் மூலம் சூரிய வெப்பத்திலிருந்து தாக்கக் சூடிய சரும பாதிப்புக்கள் மற்றும் கதிர்களிடமிருந்தும் வெப்பத்தினால் வரும் கட்டியிலிருந்து பாதுகாப்பு கிடைக்கும். திராட்சை சாறு இயற்கையாவே சருமப் பிரச்சனைகளை வர விடாமல் தடுக்கும் சக்தி கொண்டது. பொதுவாக வெயில் காலத்தில் தினமும் ஒரு டம்ளர் திராட்சை சாறு அருந்துவது சிறந்தது.

ஒளிரும் சருமம்

ஒளிரும் சருமம்

இந்த சாறை அருந்தும் போது இரத்தத்தை சுத்தம் செய்து அதில் உள்ள அழுக்குகளை நீக்கி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கின்றது. இந்த பழச் சாற்றில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. தினசரி ஒரு கப் சுத்தமான திராட்சை சாறை அருந்தும் போது சருமம் ஒளிரும் வண்ணம் அமைகின்றது. நல்ல இரத்தம் உற்பத்தியினாலும் அதன் சீரான ஓட்டத்தினாலும் ஒளிரும் சருமம் கிடைக்கின்றது. இது மிக ஆரோக்கியமானதாகும்.

வயதான தோற்றத்தை எடுக்கின்றது

வயதான தோற்றத்தை எடுக்கின்றது

திராட்சை பழச்சாறு இறந்த தோலை நீக்குவதில் உதவக் கூடியதாகும். இதை நீங்கள் சருமத்தில் போட்டால் போதும். உடனடியாக தோல் உரிய ஆரம்பித்து விடும். இவை இறந்த திசுக்களை நீக்கி சுறுக்கங்கள் அற்று இயற்கையாக காணப்படும். நல்ல இரத்த ஓட்டத்தின் காரணமாக சருமத்தின் நீட்சித்தன்மையையும் திராட்சை அதிகரிக்கின்றது. நீர் பதத்தை சருமத்திற்கு கொடுக்கும் போது திராட்சை சாறு ஈரப்பதத்தை சருமத்திற்கு இயற்கையாக அளிக்கின்றது.

ஈரப்பதமூட்டுதல்

ஈரப்பதமூட்டுதல்

திராட்சையின் நற்குணங்களை காட்டிலும் அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். இவை நமது சருமம் முழுவதும் பாதுகாக்க உதவுகின்றது. ஒரு ஸ்பூன் திராட்சை சாற்றை எடுத்து முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி 15 நிமிடங்கள் விட்டு விட வேண்டும். இதனால் உங்கள் சருமம் ஈரப்பதத்துடன் காணப்படும்.

கண்களுக்கு நல்லது

கண்களுக்கு நல்லது

கண்களில் கருவளையங்களை கொன்டவர்கள் பலர் உண்டு. அது மிகவும் அசிங்கமாக இருக்கும். திராட்சையை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவினால் போதும். இந்த வழியை பயன்படுத்தி கண்களை சுற்றி உள்ள பகுதியில் கருவளையங்கள் வர விடாமல் தடுக்க முடியும்.

வறண்ட சருமத்தை சீர்செய்கின்றது

வறண்ட சருமத்தை சீர்செய்கின்றது

ஒரு ஸ்பூன் திராட்சை சாற்றை எடுத்து அதில் ஒரு ஸ்பூன் முட்டை வெள்ளையை கலந்து முகத்தில் போட்டு 10 நிமிடங்கள் கழித்தப் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் வரண்டு விடாமல் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion