முகம் பிரகாசமா ஜொலிக்கனுமா? இந்த 7 வகை ஃபேஸ் மாஸ்க் ட்ரை பண்னுங்க!! கியாரண்டியா ஜொலிக்கும்

By: Peveena Murugesan
Subscribe to Boldsky

ஒவ்வொரு பெண்களுக்கும் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும்,சருமம் ஒளிர்வதற்கும், பிரகாசத்திற்கும் இயற்கை பொருளான எலுமிச்சை உதவுகிறது.

இது சருமம் ஒளிர்வதற்கு மட்டுமின்றி தோல் தொடர்பான பிரச்சனைகளுக்கும் பயன்படுகிறது.எனவே இங்கே பல எலுமிச்சை ஃபேஸ் மாஸ்க்குகள் கொடுக்கப்பட்டுள்ளன.இவை சருமத்தின் நிறத்தை மேம்படுத்த உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1.எலுமிச்சை சாறு:

1.எலுமிச்சை சாறு:

ஒரு எலுமிச்சையை சாறு பிழிந்து அதன் சாறை காட்டன் பந்தின் உதவியுடன் முகம் முழுவதும் தடவ வேண்டும்.ஒரு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.தினமும் இவ்வாறு செய்து வந்தால் தோலின் நிறம் மேம்படும்.அது மட்டுமின்றி முகத்தில் ஏதேனும் வடு இருந்தால் நீங்கி விடும்.

2.எலுமிச்சை,தக்காளி மற்றும் மஞ்சள்:

2.எலுமிச்சை,தக்காளி மற்றும் மஞ்சள்:

3 தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன்,1 தேக்கரண்டி தக்காளி சாறு மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.எலுமிச்சையின் நற்குணம் தக்காளியில் உள்ள லைகோபீன் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் இவற்றுடனும், மஞ்சளில் உள்ள ஆன்ட்டி பாக்டீரியா மற்றும் அலர்ஜி எதிர்ப்பு இவற்றுடனும் இணைந்து தோலின் நிறத்திற்கு நல்ல தீர்வைத் தருகிறது.முகத்தில் இந்த கலவையை தடவி ஒரு மணி நேரம் கழித்து கழுவ வேண்டும்.

3.எலுமிச்சை,பால் மற்றும் தேன்:

3.எலுமிச்சை,பால் மற்றும் தேன்:

ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறுடன், தேன் ஒரு தேக்கரண்டி மற்றும் ஒரு தேக்கரண்டி பால் பவுடருடன் கலக்க வேண்டும்.இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் உலர விட வேண்டும்.பின்பு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.இந்த மாஸ்க்கை தினமும் போட்டு வந்தால் முகம் பளிச்சென வெண்மையாக ஒளிரும்.

4.எலுமிச்சை மற்றும் தேங்காய் நீர்:

4.எலுமிச்சை மற்றும் தேங்காய் நீர்:

எலுமிச்சை மற்றும் தேங்காய் நீரின் கலவை தோலின் நிறத்திற்கு மட்டுமின்றி இது தோல்களை சுத்தப்படுத்துவதாகவும்,தோலை ஈரப்பதத்துடனும் வைக்க உதவுகிறது.தேங்காய் நீர் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதுடன் தோலுக்கு ஊட்டத்தையும் தருகிறது.

எனவே சில துளிகள் எலுமிச்சை சாறை தேங்காய் நீருடன் கலந்து முகத்தில் தடவ வேண்டும். இவ்வாறு செய்வதால் முகம் பிரகாசமாகவும்,ஈரப்பதத்துடனும் இருக்கும்.

5.எலுமிச்சை மற்றும் சந்தனம்:

5.எலுமிச்சை மற்றும் சந்தனம்:

அரை எலுமிச்சையின் சாறை எடுத்து 4 தேக்கரண்டி சந்தன தூளுடன் கலந்து கொள்ள வேண்டும்.இந்த பேஸ்ட் மிருதுவாக இல்லையெனில் சிறிது நீர் கலந்து கொள்ள வேண்டும்.இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.இது உங்கள் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்குவதுடன் தோலை மென்மையாகவும்,தோலின் நிறத்தை அதிகரிக்கவும் செய்கிறது.

6.எலுமிச்சை,தேன் மற்றும் நறுமண எண்ணெய்:

6.எலுமிச்சை,தேன் மற்றும் நறுமண எண்ணெய்:

உலர்ந்த/வறண்ட சருமம் கொண்டவர்களுக்கு இது மிகவும் சிறந்தது.இவை அனைத்தையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவி 25 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் சில வாரங்களில் தோல் இயற்கையாகவே ஒளிரும்.

7.எலுமிச்சை,மஞ்சள் மற்றும் பால்:

7.எலுமிச்சை,மஞ்சள் மற்றும் பால்:

இந்த மூன்றும் இயற்கையாகவே முகத்தை மென்மையாகவும்,ஆரோக்கியமானதாகவும் மாற்றும் சிறந்த மாஸ்க்காக உள்ளது.இந்த கலவையை முகத்தில் தடவி நன்கு காய்ந்ததும் வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவ வேண்டும்.

எலுமிச்சை சில அற்புதமான நன்மைகளைக் கொண்டுள்ளது.ஆனால் எலுமிச்சையை உபயோகப்படுத்துவதற்கு முன்பு சில விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.தோலில் ஏதேனும் காயங்கள் (அ) தடிப்புகள் இருந்தால் எலுமிச்சையை உபயோகப்படுத்தினால் எரிச்சல் ஏற்படும் மற்றும் சென்சிடிவ்(உணர்ச்சிமிக்க) தோல் கொண்டவர்களுக்கு ஏதேனும் எதிர்வினையை ஏற்படுத்தலாம்.எனவே இவற்றை மனதில் கொண்டு சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டு முகத்தை மென்மையுடனும்,ஒளிர்வாகவும் மாற்றுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

7 incredible Lemon face mask to get flawless and glowing skin

7 incredible Lemon face mask to get flawless and glowing skin
Story first published: Thursday, April 6, 2017, 8:15 [IST]
Subscribe Newsletter