புருஷன் - பொண்டாட்டி சந்தோஷமா இருக்க அந்த 2 விட, இந்த 2 தான் அவசியமாம்!

By Staff
Subscribe to Boldsky

பெரும்பாலான மிடில் கிளாஸ் மாதவன்களோட திருமண வாழ்க்கை எல்லாம் லோ-லோன்னு லோன் கட்டியே முடிஞ்சிடுது. அடிச்சுப் புடிச்சு கடன் வாங்கியாச்சும் ஒரு நல்ல ஸ்கூல்ல படிக்க வைக்கன்னும். 12வது படிக்க வெச்சு முடிக்கிறதுக்குள்ள கையில இருக்க காசெல்லாம் கரைஞ்சு போயிடும். பின்ன, இருக்கவே இருக்க எஜுகேஷன் லோன் ... அத வாங்கி என்ஜினியரிங் சேர்த்து விட்டுடலாம்.

நாலு வருஷம் படிச்சு முடிச்சு, நாப்பது கம்பெனி ஏறி இறங்கி ஒரு சுமாரான வேலைக்கு போயி வாங்குன எஜுகேஷன் லோன் கட்டி முடிக்கும் போது கல்யாணம் பண்ணிக்க சொல்வாங்க. ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும்... அப்படி இப்பிடின்னு... சேமிப்பு போக ரெண்டு, மூணு இலட்சம் பர்சனல் லோன் வாங்கி ஹனிமூன் வரைக்கும் போயிட்டு வர வரைக்கும் ஜாலியா தான் இருக்கும். ஆனா, அதுக்கு அப்பறம் திரும்ப லோன் கட்ட ஆரம்பிக்கணும்.

கல்யாணம் ஆன மூனே மாசத்துல என்ன விஷேசமான்னு ஊருக்குள்ள நாலு பேரு வாய திறந்து கேட்கிறதுக்குள்ள புள்ளைய பெக்கணும். அதோட நிக்குமா....? நாமளாவது என்ஜினீயரிங் படிக்க தான் லோன் வாங்குனோம். ஆனா, இப்போ ஸ்கூல்ல ஃபீஸ் கேட்கிறத பார்த்தா எல்.கே.ஜி'கே லோன் போடணும் போல. எல்.கே.ஜி படிக்க வைக்க லட்ச ரூபா கேட்கிறாங்க. கேட்டா ஹார்ஸ் ரைடிங், ஸ்விம்மிங் சொல்லிக் கொடுப்போம்ன்னு சொல்றாங்க.

எல்.கே.ஜி'யில முதல்ல எச் ஃபார் ஹார்ஸ்ன்னு ஒழுங்க சொல்லிக் கொடுங்க சார். என் மவனுக்கு / மவளுக்கு இன்னும் ஒழுங்கா நடக்கவே தெயரியாதுன்னு சொன்னா. இது காம்பிட்டிஷன் உலகம். இப்பவே எல்லாம் கத்துக் கொடுக்கணும்ன்னு அப்பா, அம்மாவுக்கே கிளாஸ் எடுப்பாங்க.

சரி! இதோட இது முடிஞ்சதான்னு நினைகிறீங்களா? எப்படியோ கல்யாணம் பண்ணி பார்த்தாச்சு, அப்படியே வீட்ட கட்டிப் பார்த்துட்டா எல்லாம் முடிஞ்சிடும்ன்னு சொல்வாங்க. ஆனா, உண்மை என்னன்னு பார்த்தீங்கன்னா... ஹவுஸிங் லோன் கட்டி முடிக்கிறதுக்குள்ள நாமளே முடிஞ்சிடுவோம்.

இப்பாடியான அவசர கதி வாழ்க்கையில புருஷன் - பொண்டாட்டி எப்படி சந்தோஷமா இருக்க முடியும். பணம் - ஆடம்பரமான வாழ்க்கைங்கிற இந்த 2 விட, நேரம் - வார்த்தைகள்ங்கிற 2 தான் சந்தோஷமான வாழ்க்கையின் ஆணிவேர்ன்னு சொல்றாங்க. அது என்னன்னு பார்ப்போம் வாங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கணவன் என்ன நினைக்கிறார்?

கணவன் என்ன நினைக்கிறார்?

இன்றைய கணவர்கள் என்ன நினைகிறார்கள் எனில், மனைவிக்கு நல்ல உடை, உபகரணங்கள், கருவிகள், வசதியான வீடு, நல்ல இடங்களுக்கு அழைத்து செல்வது., ஹோட்டல்,ரெஸ்டாரன்ட், வெளி ஊர் பயணங்கள் போன்றவை கொடுத்துவிட்டால் மனைவி மகிழ்ச்சியாக இருப்பார்கள் என்று கருதுகிறார்கள்.

ஆனால், மனைவி தங்களுடன் சேர்ந்த நேரம் செலவழிக்க வேண்டும் என்றே விரும்புகிறார்கள். தங்கள் வாழ்வில் நடந்த முக்கிய நாட்களை நினைவு கூர்ந்து அதை கொண்டாட வேண்டும் என்று கருதுகிறார்கள்.

மனைவி என்ன நினைக்கிறார்?

மனைவி என்ன நினைக்கிறார்?

இன்றைய மனைவிகள் என்ன நினைக்கிறார்கள் எனில், கணவன் வேண்டுவதை ஏற்படுத்திக் கொடுப்பது, பரிசுகள் கொடுப்பது, ஆச்சரியப்படுத்துவது, போன்றவை அவர்களை சந்தோசப்படுத்தும். அதுவே அவர்களை திருப்திப் படுத்தி விடும் என்று கருதுகிறார்கள்.

ஆனால், கணவர்கள் தங்களுடன் அமர்ந்து அதிகம் பேச வேண்டும் என்று கருதுகிறார்கள். கொஞ்சல், ரொமான்ஸ் என்பதை தாண்டி, ஏதேனும் பிரச்சனைகளை தங்கள் தலைக்குள் கொண்டு வந்து ஏற்றுவதற்கு பதிலாக... வேலை முடித்து வரும் போது சோர்வை போக்கும் வகையில், கவலை விலகும் படி அரவணைப்புடன் பேச வேண்டும் என்றே கருதுகிறார்கள்.

காதல் மொழி!

காதல் மொழி!

தமிழ், ஆங்கிலம் போல காதலும் ஒரு தனி மொழி தான். இந்த மொழியை கணவன் - மனைவி எனும் இருவர் மட்டுமே பேசிக் கொள்ள போகிறார்கள்.

பொதுவாக தம்பதிகள் ஒரு தவறு செய்வார்கள். அதே தவறை தங்கள் பிள்ளைகள் மீதும் திணிப்பார்கள். என்னவென்று யோசிக்கிறீர்களா? உனக்கு என்ன பிடிக்கும் என்று கேட்காமல் தங்களுக்கு பிடித்ததை செய்வது.

கணவன் தனக்கு பிடித்ததை மனைவிக்கு பரிசளித்து, வாங்கிக் கொடுத்து அவள் மகிழ்வாள் என்று கருதுகிறேன். மனைவி தனக்கு பிடித்தவற்றை எல்லாம் செய்து அதை கணவன் ஏற்றுக் கொள்வான், மனம் மகிழ்வான் என்று கருதுகிறாள்.

இங்கே ஒரு சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினால் போதும். நமக்கு பிடித்ததை மற்றவர்கள் ஏற்று மகிழ்வார்கள் என்று கருதாமல். அவர்களை விரும்புவதை அறிந்து அதை வாங்கிக் கொடுத்து அவர்களை மகிழ்விப்பதே மெய் இன்பம்.

கேளுங்களேன்...

கேளுங்களேன்...

பெரும்பாலும் நாம் செய்வதை, நாம் விரும்புவதை தான் மற்றவர்களும் அனுபவித்து மகிழ்வார்கள் என்று கருதுகிறோம். ஒரே ஒரு முறை... இது உனக்கு பிடித்திருக்கிறதா? இதை நீ விரும்புகிறாயா? என்று கேட்டு அதன் பிறகு செய்தோமேயானால் நிச்சயம் மகிழ்ச்சி இரட்டிப்பு ஆகும்.

நீங்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்க... இதுவரைக்கும் பல இடங்கள்ல நமக்கே தெரியாம இந்த தவற நாம அப்பப்போ செஞ்சிருப்போம். கணவன் / மனைவியும் துணையின் மனம் சங்கடப் பட்டு போய்விடக் கூடாது என எண்ணி அதை முழு மனதுடன் ஏற்றுக் கொண்டது போல நடிப்பார்கள்.

பிள்ளைகள் மத்தியிலும்...

பிள்ளைகள் மத்தியிலும்...

இதையே தான்... நமக்கு கிடைக்காத, நம்மால் அடைய முடியாத கனவுகளை நமது பிள்ளைகளை சுமக்க செய்து... அவர்களை சூழ்நிலை கைதி ஆக்குகிறோம். சில சமயம் நம் கனவுகளை சுமையாக்கியும், பல சமயம் இதை படித்தால் தான் சமூகம் ஏற்கும் என்ற போது மடத்தனத்தை சுமையாக்கியும் பிள்ளைகளின் கனவுகளை, அவர்களது தனித்துவமான திறமைகளை வீணடித்துவிடுகிறோம்.

நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒரு சிறிய மாற்றம் தான்... இது, இல்வாழ்வில் பெரிய நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்துவதோடு... கணவன் மனைவி வாழ்வும் பிரகாசிக்க உதவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    What Couples Needs for a Happy Life is Time and Words

    More Than Money and Luxurious Lifestyle What Couples Needs for a Happy Life is Time and Words.
    Story first published: Monday, May 7, 2018, 16:40 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more