இன்னொரு கல்யாணம் பண்ணிக்கிறியாம்மா? மகனின் அதிர்ச்சிக் கேள்வி My Story #142

Posted By:
Subscribe to Boldsky

எங்க இருக்க... ?

துணி தைக்க கொடுத்தது வாங்க வந்துருக்கேன். நீங்க வீட்டுக்கு வந்துட்டீங்களா...

சிக்கிரம் என்று சொல்லிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் போன் டொய்ங்..... என்று வைக்கும் சத்தம் கேட்டது.

திருமணமாகி இருபது வருடங்கள் ஆகிவிட்டிருக்கிறது. கல்லூரிக்குச் செல்லும் மகனும்,பள்ளிப்படிப்பை முடிக்கவிருக்கும் மகனும் தான் சாரதாவின் துணை. இருபது வருடங்கள் என்ன வாழ்க்கை வாழ்ந்தாய் என்று கேட்டால் வீட்ட பாத்துகிட்டேன், இவருக்கு பணிவிடை செஞ்சேன், புள்ளைங்கள பெத்துப் போட்டு படிக்க வைக்கிறேன், வேலைக்கு போறேன் என்பாள்.

 Son Asked his mother to marry

ஆமா, வீட்ல அம்மாங்க இதத்தான செய்றாங்க.... என்று கடந்து செல்லவதற்கு முன்னர், இது தான் வாழ்க்கையா? இது தான் ஒரு குடும்பத்தில் பெண்ணின் பங்கா? சென்னையில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாரதாவின் கதை உங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பாடமாய் அமையும் என்பதில் சந்தேகமில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
திருமண வாழ்க்கை :

திருமண வாழ்க்கை :

கவர்மெண்ட் உத்தியோகம் மாசமான சுலையோ சம்பளம் வந்துரும் இதுக்கு மேல என்ன வேணும் என்று சொல்லி சென்னையில் இருக்கும் மாப்பிள்ளையை சாரதாவிற்கு கட்டி வைத்தார்கள். அந்தக் காலத்தில் வெளியூருக்கு வாக்கப்பட்டு போறா பெரிய இடம் தான்.... இனி சாரதா வாழ்க்கை ஜோரா இருக்கப்போகுது என்று பேசிக் கொண்டார்கள் எல்லா உறவுகளும்.

பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிந்ததுமே திருமணம் பேசி முடித்தாகிவிட்டது.

இது தான் திருமணம் :

இது தான் திருமணம் :

திருமணமாகி ஊரை விட்டு சொந்தங்களை விட்டு கணவனை மட்டுமே நம்பி வந்திருக்கும் சாரதாவின் திருமண வாழ்க்கை மிகவும் சிரமமானதாகவே இருந்திருக்கிறது.

சந்தேகப் பேய் கணவனின் ரூபத்தில் சாரதாவின் வாழ்க்கையில் நுழைந்து ஒவ்வொரு நாளையும் ரணமாய் மாற்றியிருக்கிறது.

எழுந்தால், நின்றால்,சிரித்தாள்,உட்கார்ந்தாள் எதற்கெடுத்தாலும் குத்தம் கண்டுபிடித்து.... பட்டிக்காடு,படிக்காத கழுத ஒண்ணுத்துக்கும் லாயக்கில்ல என்று வசை பொழிவான். அரசாங்கத்தில் ஒப்பந்தத் தொழிலாளராக வேலை, அங்கே சந்திக்கும் பிரச்சனைகளுக்கு எல்லாம் சாரதா தான் காரணம் என்பான். உன் மூஞ்சில முழிச்சிட்டு போனேன்ல அதான்.

மகன்கள் :

மகன்கள் :

குழந்தைகள் பிறந்து வளர ஆரம்பித்தனர். அவன் குடித்து விட்டு வரும் சமயத்தில் மட்டும் சாரதாவுடன் படுத்துக் கொள்வான்,மற்றபடி சாரதா என்றாளே கடுகடுவென்று எரிந்து விழுவான்.

அன்பாக பேசியது போலவோ, உடம்பு சரியில்லை என்று அக்கறையாக விசாரித்தது போன்றோ ஒரு நாளும் நினைவில் இல்லை. மகன்களையும் சொல் பேச்சுக்கு அடங்குகிற பிள்ளையாகவே வளர்த்திருந்தான்.

அப்பா வேணாம்மா :

அப்பா வேணாம்மா :

வெளியில் விளையாடச் சென்றால், தெருவில் மற்ற குழந்தைகளோடு நின்றிருந்தால், மார்க் குறைந்தால்,டிவி பார்த்துக் கொண்டிருந்தால் என்று எல்லாவற்றிற்கும் அடி விழும்.

வாயைத் திறந்தாலே கடுமையான சொற்கள் தான் வந்து விழும். அதனாலேயே அப்பாவைக் கண்டாலே மகன்கள் பயந்து நடுங்குவார்கள்.

திடீர் மாற்றம் :

திடீர் மாற்றம் :

ஒரு நாள் வழக்கத்திற்கு மாறாக மதியம் போலவே வீட்டிற்கு வந்து விட்டான். சாரதாவிற்கு எதுவும் புரியவில்லை, எங்கே எதாவது கேட்டுவிட்டாள் கத்தி அடித்து விடுவானோ என்று பயம்.

தட்டில் சோறு போட்டு சாப்பிட அழைத்தாள். அமைதியாக வந்து உட்கார்ந்து சாப்பிட்டான். பசங்க எங்க, பள்ளிகூடம் போய்ருகாங்களா? எப்போ வருவாங்க என்று கேட்டான்.

பேசுவது என் கணவர் தானா? என்று சாரதாவிற்கு ஆச்சரியம் தாங்கவில்லை.

அடப்பாவி மனுஷா :

அடப்பாவி மனுஷா :

உடம்பு சரியில்லையாங்க... ஆஸ்பத்திரிக்கு போவோமா.... முகமே வாடிப்போயிருக்கு.

அதெல்லாம் ஒண்ணுமில்ல கொஞ்ச நேரம் தூங்கினா சரியாப் போகும். என்று சொல்லிவிட்டு தூங்கச் சென்றுவிட்டான். ஒரு மணி நேரம் கழித்து வந்து பார்த்தாள் நன்றாக தூங்கிக் கொண்டிருந்தான்.

நெற்றியில் கைவைக்க.... முழித்துக் கொண்டான். இல்ல காச்ச அடிக்கிதான்னு....

அதெல்லாம் ஒண்ணுமில்ல டயர்டா இருக்கு அவ்ளோ தான் என்று சொல்லி திரும்பி படுத்துக் கொண்டான். சரிங்க.... நான் பக்கதுல மிஷின்ல மாவு அரைக்க கொடுத்திருக்கேன் அது போய் வாங்கிட்டு வந்திடறேன். அவன் வேற நாலு மணிக்கு டான்னு மூடிருவான். இப்போ பசங்க வந்திருவாங்க பெல் அடிச்சா போய் தொறக்குறீங்களா? இல்ல சும்மா கதவ சாத்திட்டு மட்டும் போகட்டுமா என்றாள்.

இல்லல்ல என்னால தொறக்க முடியாது. யாரு வரப்போறா லேசா சாத்திட்டு போ என்றான்.

வழியில்.... :

வழியில்.... :

அதான இந்த மனுஷன் எங்க வீட்டுக்கு வேல செய்றது, ரெண்டு புள்ளைகளுக்கு அப்பன்னு தான் பேரு.... என்று நினைத்துக் கொண்டே பெரிய கட்டைப்பையை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.

தெரு முக்கை அடையும் போது இரண்டு மகன்களும் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்கள்.

என்னங்கடா..... பரிட்சைய எப்டி எழுதுனீங்க நாளைல இருந்து லீவா?

இல்லம்மா ஸ்கூல் இருக்கும்மா.... எங்க போற

நானும் வரேன் :

நானும் வரேன் :

மிஷினுக்கு போறேன்... வீட்டுக்கு போங்க உங்கப்பன் இருக்கான்.

என்னது அப்பாவா? என்ன இந்நேரத்துல....

என்னன்னு தெர்ல மதியம் வீட்டுக்கு வந்தாரு சாப்ட்டு தூங்கிட்டு இருக்காரு.

டேய் ஒருத்தன் சைக்கள எடுத்துட்டு என்னோட வாங்க ரெண்டு வாளியிருக்கும் தூக்கிட்டு வரணுமேன்னு நினச்சேன். சைக்கிள்ள வந்தா அப்டியே வச்சு கொண்டு வந்துரலாம். நீ வீட்டுக்கு போ நானும் அண்ணனும் போய்ட்டு வரோம்.

இளையவன் யோசித்தான்.

பத்து நிமிஷத்துல வந்துருவோம் போடா.....

ஐயோ நானும் உங்களோடயே வரேன்மா நான் மட்டும் வீட்டுக்குப் போய் என்ன பண்ண என்று சொல்லி அவர்களோடே கிளம்பினான்.

கண்ணீர் அஞ்சலி :

கண்ணீர் அஞ்சலி :

வீட்டிற்கு வந்தாள், படுத்துக் கொண்டிருந்த கட்டிலின் மேலே தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறான் கணவன். சாரதாவிற்கு ஒரு கணம் தூக்கி வாரிப்போட்டது. இரண்டு குழந்தைகளின் கண்ணை மூடி அணைத்துக் கொண்டாள். வெளியே வந்து பக்கத்து வீடுகளில் இருப்பவர்களை உதவிக்கு அழைத்தாள்.

போலீஸ் வந்தது... விசாரணை நடந்தது என்ன காரணம் என்று எதுவும் தெரியவில்லை, கணவனின் திடீர் மாற்றத்தை தவிர சாரதாவினால் எதையும் சொல்ல முடியவில்லை, அவனது அலுவலக அட்ரஸ் கூட முழுமையாகத் தெரியவில்லை.

உறவுகள் எல்லாம் வந்தார்கள், குழந்தைகள் இருவரும் அம்மாவை இறுக்க அணைத்து பயத்தில் அழுது கொண்டிருந்தார்கள். பெரியவன் சற்று நிதானத்துடன் இருந்தான்.

சடங்கு சம்பிரதாயங்கள் :

சடங்கு சம்பிரதாயங்கள் :

பிரேத பரிசோதனை முடிந்து மறுநாள் உடல் வந்தது. அம்மாவுக்கு தாலியறுப்பது, பொட்டை அழிப்பது போன்ற சடங்குகள் செய்வதை இரண்டு மகன்களும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

கதறி கதறி அம்மா அழுவது, இருவருக்குமே ஒரு வித அச்ச உணர்வை ஏற்படுத்தியது. இருவரும் அம்மா மடியில் உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்று நினைத்து ஓட.... சுற்றி இருந்த உறவினர்கள் இருவரையும் இருக்க பிடித்துக் கொண்டார்கள்.

முழு அலங்காரம் செய்து உட்கார வைத்து சடங்குகள் செய்வது,பின் ஒவ்வொன்றாய் களையும் போதும் சாரதா கத்தி கத்தி அழுதாள்... என்னைய இப்டி அனாதய விட்டுட்டு போய்டீங்களே.....

அப்பா எப்ப பாத்தாலும் திட்டி அடிக்கும், அப்பறம் ஏன் அம்மா இப்டி அழுவது, இனி சந்தோஷமா இருக்கலாம் தான என்று மகன் நினைத்துக் கொண்டான்.

காரணங்கள் ஒவ்வொன்றும் :

காரணங்கள் ஒவ்வொன்றும் :

காரியம் முடிந்து ஒவ்வொருவராய் கிளம்பினார்கள். பதினைந்து நாட்கள் கழித்து தலைவலி ஆரம்பித்தது.

கவர்மெண்ட் ஆபிஸ்ல வேல பாக்குறன்னா வேலைல இருக்கும் போதே இறந்துட்டான்னு சொல்லி பென்ஷன் பணம் கிடைக்கும், பெரிய பையனுக்கு அப்பா பாத்த வேலைய கொடுப்பாங்க.... நீ போய் ஆபிஸ்ல கேளு என்று சிலர் கிளப்ப சாரதாவும் பெரிய மகனை அழைத்துக் கொண்டு அலுவலகத்திற்கு சென்றாள் அங்கே சொல்லப்பட்ட தகவல்கள் ஒவ்வொன்றும் கேட்க கேட்க அதிர்ச்சியாக இருந்தது.

தற்கொலைக்கான காரணம் :

தற்கொலைக்கான காரணம் :

யாரை பார்ப்பது, எங்கே கேட்பது என்று தெரியாமல் அங்க போ.... அவர்ட்ட கேளு என்று கை காட்டிய திசைகளுக்கெல்லாம் பறந்து சோர்ந்து உட்கார்ந்திருந்தவளிடம் ஒரு ஆள் வந்தார்.

இந்தாப்பாரும்மா... இங்க அலையுறது வேஸ்ட்டு யாருமே உன் புருஷனுக்கு உதவ மாட்டாங்க. அவன் கவர்மெண்ட் ஸ்டாஃப் கிடையாது, காண்ட்ராக்ட்ல தான் இருந்தான். அங்க என்ன பிரச்சனையோ அவன காண்ட்ராக்ட்ல இருந்து போன வருஷம் முன்னாடியே தூக்கிட்டாங்க.... அப்பறம் வேல கேட்டு இங்க அடிக்கடி வருவான்.

கடன் :

கடன் :

அப்பறம் பொண்டாட்டிய ஆஸ்பத்திரில சேத்துருக்கேன், புள்ளைக்கு ஸ்கூல் ஃபீஸ் கட்டணும், அப்பாவுக்கு ஆப்ரேஷன்னு சொல்லி சொல்லி.... இங்க இருக்குற நிறைய பேர்ட்ட ஐஞ்சு லட்ச ரூபா வரைக்கும் கடன் வாங்கியிருக்கான். பணம் கொடுத்தவங்க பணத்த திருப்பி கேக்க அவங்களுக்கு கொடுக்கன்னு கடன் வளர்ந்துட்டே போயிருக்கு.

அதோட இங்க காண்ட்ராக்டல இருந்தப்போ எதோ ஆபிசர் சைன் மாத்தி போட்டு கோல்மால் பண்ணியிருக்கான் அதனால தான் அவன வேலைய விட்டு தூக்கினாங்க நேத்தும் இங்க வந்து பணம் கேட்ருக்கான் என்கிட்ட பணத்த வாங்கிட்டு ஏமாத்திட்டானு ஒருத்தன்.... ஆரம்பிக்க பிரச்சனை பெருசாகிடுச்சு சாகுறதுக்கு ஒரு வாரம் முன்னாடி இவனத் தேடிப் போய் பணத்த கேட்டு மிரட்டியிருக்காங்க, பத்து நாள்ல ரெடி பண்றேன். கண்டிப்பா கொடுத்துருவேன்னு சொன்னான்.

கொடுக்கலன்னா வீட்டுக்கு வருவோம். போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண்ணுவோம்னு சொன்னாங்க. ஆனா, இப்டி பண்ணிக்கிட்டான்.

எதுவுமே தெரியாது :

எதுவுமே தெரியாது :

எல்லாரும் வீட்டுக்கு போய் பொணத்த எடுக்க விடக்கூடாது, பணத்த வச்சிட்டு பொணத்த தூக்குங்கன்னு சொல்லணும்னு பேசினாங்க அப்பறம் ஆபிசர் ஐயா தான் ரெண்டு புள்ளைகள வச்சிட்டு பொம்பள கஷ்டப்படுது, கொஞ்ச நாள் பொறுத்து போய் கேக்கலாம் இப்பவே வேணாம்னு சொன்னாரு.

கதையை கேட்க கேட்க இவளுக்கு அழுகை வந்து கொண்டிருந்தது. பாவி மனுஷன் ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லல.... அம்புட்டு பணத்த வாங்கி என்ன தான் பண்ணானோ உதவி கிடைக்கும்னு வந்தா இப்டி பண்ணி வச்சுட்டு போயிருக்கான். அவன் நிம்மதியா போய் சேந்துட்டான் கூடவே எங்களையும் கூட்டிட்டு போயிருக்கலாம்ல என்று அழுதாள்.

தனியொருத்தி :

தனியொருத்தி :

கணவனின் கடன் தொகையை செலுத்த வேண்டுமென்று வக்கீல் நோட்டீஸ் வந்திருந்தது. சாரதா வேலைக்குச் செல்ல ஆரம்பித்தாள். கணவன் இறக்கும் போது பெரிய மகன் ஐந்தாம் வகுப்பும்,இளைய மகன் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார்கள்.

கடுமையாக உழைத்தாள், பன்னிரெண்டாம் வகுப்பு படித்தவளுக்கு என்ன வொயிட் காலர் ஜாபா கிடைத்துவிடப் போகிறது. கார்மெண்ட்ஸ்,தையல் கடை,என்று முதலில் வேலைப் பார்த்தாள்,பின் டைப்ரைட்டிங் கற்றுக் கொண்டாள் கோர்ட்டில் வேலை கிடைக்கும் என்றும் யாரோ சொல்ல, கற்றுக் கொண்டாள், டிகிரி கட்டாயம் என்றார்கள் படித்தாள். ஒரு பக்கம் வேலை, ஒரு பக்கம் வீடு,தன்னுடைய படிப்பு,குழந்தைகள்,அவர்களுக்கான செலவுகள், கணவன் சேமித்து வைத்த கடன் என்று எல்லாவற்றையும் சமாளித்தாள். இதோடு இன்னொரு மிகப்பெரிய விஷயத்தையும் சமாளித்தாள்.

அதான் புருஷன் போய்ட்டான்ல :

அதான் புருஷன் போய்ட்டான்ல :

இந்தப் பிரச்சனையை பலரும் சந்தித்திருப்பார்கள். தனியாகத் தானே இருக்கிறாள், கேட்க ஆள் இல்லை, அதுவும் இரண்டு குழந்தைகளோடு தனியாக இருக்கிறாள் கொஞ்சம் வலை விரிப்போம்.

பணம் தருகிறேன், உதவி செய்கிறேன்,குழந்தைகளை படிக்க வைக்கிறேன் என்று சொன்னால் விழுந்து விடப்போகிறாள் என்று எத்தனையோ பேர் இவளை அடைய நினைத்தார்கள். நாசுக்காகவும், வெளிப்படையாகவும் கேட்டுப் பார்த்தார்கள், மிரட்டிப் பார்த்தார்கள் அத்தனையையும் சமாளித்தாள்.

அம்மா :

அம்மா :

மகன்களுக்கு விவரம் தெரிந்து அம்மா எத்தனையோ நாள் தூக்கமில்லாமல் அழுது தீர்த்திருக்கிறாள், உங்களுக்காகதான் இருக்கேன், கட்டிட்டு வந்ததுல இருந்து நிம்மதியே இல்ல... முன்னாடி புருஷன் டார்ச்சர் இருந்துச்சு இப்போ வர்றவன் போறவன் எல்லாம் என்று அழுவாள்.

இதை எப்படி மகன்களிடம் சொல்ல முடியும். வேல பாத்து உடம்பு வலிக்கிது, வேல கஷ்டமா இருக்கு என்று சமாளிப்பாள்.

அம்மாவிடம் ஒரு கேள்வி :

அம்மாவிடம் ஒரு கேள்வி :

அன்றைக்கு இருவருக்கும் லஞ்ச் வைத்து விட்டு அவசர அவசரமாக அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்தவளை கை பிடித்து உட்கார வைத்தான் மகன், அம்மா... ஒரு நிமிஷம் உக்காரு,

ஆபிஸ் போகணும் நீ காலேஜ் போகலயா? என்ன ஃபீஸ் கட்டணுமா? வண்டி செக்கண்ட் ஹேண்ட்ல கேட்ருக்கேண்டா வந்ததும் சொல்றேன்னு சொல்லியிருக்காங்க வாங்கிறலாம் என்று படபடத்தாள்.

அதெல்லாம் ஒண்ணும் அவசரமில்ல ஒரு நிமிஷம் இங்க உக்காரு. கையை பிடித்து இழுத்து உட்கார வைத்தான்.

நீ ஒரு கல்யாணம் பண்ணிக்கோம்மா.

உளராதடா :

உளராதடா :

கேட்டதும் திக்கென்றது. என்னடா உளர்ற.... கைய விடு மொதோ

அம்மா சொல்றத கேளு ஒரு நிமிஷம். நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோமா... கல்யாணம் பண்ணதுல இருந்து அப்பாவுக்கு பயந்துட்டு வாழ்ந்த அப்பறம் எங்களுக்காக.... எப்போதான் உனக்காக வாழப்போற.

எனக்கு இப்போ 45 வயசாகிடுச்சு. இனிமே எனக்கென்ன வாழ்க்கையிருக்கு? ரெண்டு குழந்தைங்க ஆகிடுச்சு அவங்கள படிக்க வச்சு பெரியாள் ஆக்கணும் அது தான் என் லட்சியம். அது தாண்டா எனக்கு சந்தோஷம்.

மகனின் வார்த்தைகள் :

மகனின் வார்த்தைகள் :

எங்களுக்கு அப்பறம்? சும்மா சினிமாட்டிக்கா பேசாதம்மா.... நீ தினம் தினம் என்ன கஷ்டப்படுறன்னு எங்களுக்கு தெரியும். பொண்ணுங்களுக்கு கல்யாணத்துக்கு பிறகு ஒரு லைஃப் இருக்கும்மா.

கல்யாணமாகி குழந்த பிறந்துட்டா அவ்ளோ தான் அதோட அந்த பொண்ணோட கேரக்டர் க்ளோஸ்.... உனக்குன்னு ஒரு லைஃப், உனக்கு ஒரு ஆம்பிஷன், உனக்குன்னு ஒரு ட்ரீம் எதுவுமே இல்லாதது தான் இங்க பிரச்சனையே.

என் வாழ்க்கையே நீங்க தான், உங்களுக்காகத் தான் உயிரோட இருக்கேன்னு எப்பவும் இன்னொருத்தர டிப்பெண்ட் பண்ணி இருக்கணும்னு நினைக்காதம்மா.... எனக்காக நான் வாழப்போறேன். இதுவரைக்கும் நீ எப்டி வாழ்ந்தன்னு தெரியல ஆனா இனிமே உனக்காக வாழு.

இப்டி சொன்னதும், இப்டி நினச்சதும், எதோ நீ ரொம்ப பெரிய தப்பு பண்ணப்போறதாவும், ஒழுக்கம்கெட்டவளாவும் நினைக்காத.... ரியாலிட்டிய யோசி.

இறுதி முடிவு :

இறுதி முடிவு :

இளைய மகனும் சேர்ந்து கொண்டான். ஆமாம்மா.... அண்ணன் சொல்றது கரெக்ட்தான் நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கோ

மகன்களின் இந்த புரிதலைக் கண்டு வியப்பதா, அல்லது அவர்கள் வைக்கிற டிமாண்டை நினைத்து வியப்பதா என்று தெரியாமல் அவளுக்கு அழுகை வந்தது.

நீண்ட யோசனைக்குப் பிறகு, சரி நான் கொஞ்ச நாள் எனக்காக வாழ்றேன். எனக்கு பிடிச்சது என்னன்றதே எனக்கு தெரியல அத யோசிக்கிறேன். இந்த வீடு,குழந்தைங்க, ஆபிஸ்,எல்லாத்தையும் மூட்ட கட்டி வச்சுட்டு எனக்காக கொஞ்ச நாள் அது ட்ராவல் பண்றதா, புக்ஸா, இல்ல சமையலா, டிவி, சினிமான்னு எதுவா வேணாலும் இருக்கலாம். அந்த லைஃப் வாழ்றேன். அப்போ எனக்கு ஒரு கம்ப்பேனியன் தேவன்னு தோணிச்சுன்னா கல்யாணத்தப் பத்தி யோசிக்கலாம்.

அம்மாவிடம் இருந்த இந்த தெளிவு மகன்களுக்கு சந்தோஷக் கண்ணீரை வரவழைத்திருந்தது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Son Asked his mother to marry

Son Asked his mother to marry
Story first published: Monday, January 15, 2018, 14:30 [IST]
Subscribe Newsletter