TRENDING ON ONEINDIA
-
இன்றே முடிவுக்கு வருமா நாராயணசாமி தர்ணா.. பேடியுடன் பேச்சு
-
ரூ.15 லட்சம் அல்ல... இந்தியர்கள் அனைவருக்கும் தலா ரூ.50 ஆயிரம்... மோடியின் திடீர் முடிவுக்கு காரணம் இதுதான்
-
தயாரிப்பாளர், இயக்குநர் இடையே மோதல்: '96' தெலுங்கு ரீமேக்கில் சிக்கலோ சிக்கல்
-
கிருஷ்ணரின் கையில் இருக்கும் மகிமை வாய்ந்த பாஞ்சன்ய சங்கு அவருக்கு எப்படி கிடைத்தது தெரியுமா?
-
பாகிஸ்தான் இணையத்தை அதிரடியாக முடக்கி தெறிக்கவிட்ட ஹேக்கர்கள்.!
-
இம்ரான் கான் வாயைத் திறந்து பேசமாட்டாரா? எதிர்ப்பு நடவடிக்கை எடுத்த இந்திய கிரிக்கெட் மைதானங்கள்!
-
பாகிஸ்தான் மீது இந்தியா தொடுத்த வர்த்தகப் போர்: இறக்குமதி பொருட்களுக்கு 200% வரி - உடனடி அமல்
-
கோடியில் புரள்பவர்களின் ரகசியம் இதுதான்! இந்த பத்து கோவில்களுக்கும் ஒரு முறை சென்றால் போதுமாம்...
படுக்கையறையில் நடந்த கொலை... 2012 ஆம் ஆண்டு தமிழகமே அதிர்ந்த கொலை வழக்கு!
திருமண வாழ்க்கையில் இப்படியெல்லாம் கூட நடக்கலாம். அதுவும் பெற்றோர் பார்த்து செய்து வைக்கப்பட்ட திருமணத்தில் என்பதற்கு உஷா ராணியின் வாழ்க்கை ஒரு பாடம்.
கடந்த 2012 ஆம் ஆண்டு நடைப்பெற்ற சம்பவம் பெரும் பரபரபப்பாக பேசப்பட்டது. அந்தக் கதையைக் கேட்டால் இன்று வரை பரபரப்பாக திக் திக்கென்று தான் இருக்கிறது. சம்பவத்தை கேட்ட நமக்கே இப்படியென்றால் அந்த தருணத்தை சந்தித்த அந்த குழந்தைகளுக்கும் உஷா ராணிக்கும் எப்படி இருந்திருக்கும்? சொல்ல வார்த்தைகளே இல்லை.
மனதை உறைய வைக்கும் உண்மைச் சம்பவத்தின் பின்னணி.....
திருமணம் :
உஷா ராணிக்கு பதினெட்டு வயதாகும் போது பெற்றோர்களால் திருமணம் நிச்சியிக்கப்பட்டது. கடந்த பத்து வருடங்களாக தங்களுக்கு தெரிந்த குடும்பம் தான் என்கிற நம்பிக்கையில் தங்கள் வீட்டுப் பெண்ணான உஷாவை ஜோதிபாசுவுக்கு திருமணம் செய்து கொடுக்க சம்மதித்தனர் பெற்றோர்.
உஷாவின் அப்பா வங்கியில் பணியாற்றிக் கொண்டிருந்திருக்கிறார். அவரின் ஆலோசனைகளை பெறுவதற்காக அடிக்கடி வருவார்கள். அவர்களின் குடும்பத்திற்கு அப்பா நிறைய உதவிகளை செய்திருக்கிறார்.
கல்வி :
ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் சமம் என்ற எண்ணமுடைய குடும்பத்தில் பிறந்திருந்தாலும் திருமணப் பேச்சு எடுக்கப்பட்டதால் பன்னிரெண்டாம் வகுப்போடு கல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய நிலைமை உஷா ராணிக்கு ஏற்ப்பட்டது.
ஜோதி பாசு அந்த வீட்டின் மூத்தப்பையன் குடும்பத்தின் பொறுப்பை சுமக்கும் விதத்தில் எட்டாம் வகுப்பிற்கு மேல் அவரால் படிக்க முடியவில்லை. கல்வியின் அருமை அவருக்கு தெரிந்திருக்கும் தொடர்ந்து படித்துக் கொண்டிருப்பவர்களை விட படிப்பை பாதியிலேயே விட்டவருக்குத் தான் அந்த அருமை நன்றாக புரியும். திருமணத்திற்கு பிறகு நான் பட்டப்படிப்பு தொடரலாம் என்று நினைத்திருந்தார் உஷா ராணி.
ஆனால் மாமனார் வீட்டினரின் திட்டமோ வேறு மாதிரியாக இருந்தது.
பிஸ்னஸ் செய்ய லோன் :
அப்பாவிடம் சொல்லி கணவர் புதிதாக பிஸ்னஸ் செய்ய உஷா ராணியின் பெயரில் லோன் வாங்கப்பட்டிருக்கிறது.புதிதாக அப்பளம் தயாரிக்கும் கம்பெனியை ஆரம்பித்திருக்கிறார்கள்.
வீட்டையும் கம்பெனியையும் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் உஷா ராணிக்கு ஏற்பட்டது. இதில் உஷா ராணிக்கு சம்மதமில்லை என்றாலும் கணவருக்காக நாம் வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறிட வேண்டும் என்ற லட்சியத்துடன் பல இன்னல்களை தாங்கிக் கொண்டார். இதோடு முடிந்தால் பரவாயில்லை. ஆனால் உஷாவின் மாமனார் குடும்பத்தினர் இன்னும் பல பயங்கரமான திட்டங்களுடன் தான் உஷாவை தன் வீட்டு மருமகளாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
சகோதர்கள் :
எட்டாம் வகுப்பு கூட தாண்டாத ஜோதிபாசுவின் உடன் பிறந்த சகோதரியை உஷாவின் தம்பிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணினார்.
உஷாவின் முதல் சகோதரர் வங்கியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் அதோடு அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் நிச்சயமும் ஆகிவிட்டிருந்தது. இரண்டாவது சகோதரர் எம்.பில் படித்திருந்தார்.
அவர் ஜோதிபாசுவின் சகோதரியை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை.
ஒரு சாக்கு :
உஷாவை டார்ச்சர் செய்ய சாக்கு கிடைத்து விட்டது. உஷா தான் பேசி தன் சகோதரர்களின் மனதை மாற்றியிருப்பார் என்று நினைத்து கொடுமைகளை செய்ய ஆரம்பித்தார். தினமும் அடி உதை தான். இந்த லட்சணத்தில் உஷாவுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன.
நான்கு குழந்தைகளை பராமரிக்க வேண்டிய பொறுப்பு, வீட்டு வேலை, கம்பெனியை பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் இவை எல்லாவற்றையும் தாண்டி அடி... உதை. பல்லை கடித்துக் கொண்டு சமாளித்தார்.
மகளுக்கு திருமணம் :
உஷாவின் மூத்த மகளுக்கு 14 வயதான போது நிலைமை மோசமானது. அவரது மாமியார், மகளின் படிப்பை நிறுத்தி விட்டு மட்டன் ஸ்டால் ஒன்றில் வேலை பார்க்கும் தன் உறவினர் ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எண்ணினார்.
ஆனால் உஷாவுக்கு அதில் துளியளவும் விருப்பமில்லை. மகள் நன்றாக படிக்க வேண்டும் என்று நினைத்தார், மகளும் அதே போலத்தான் இன்னும் நிறைய படிக்க வேண்டும் என்றே விரும்பினார். என்ன செய்வதென்று தெரியாமல் நேரடியாக மகள் படிக்கும் பள்ளிக்குச் சென்று தலைமையாசிரியரை சந்தித்தார்,. நிலைமையைச் சொல்லி புரியவைத்தார்.
கொடூர சம்பவம் :
மகளை பள்ளி விடுதியிலேயே தங்கி படிக்க வைப்பதாக தலைமையாசிரியர் உறுதியளித்தார். விஷயம் மாமியார் குடும்பத்தினருக்கு எட்டியது. என் மீது பயங்கர கோபமானார்கள்.
நேராக வீட்டிற்கு வந்து என்னை அடித்து உதைத்தார்கள் வெளியில் எங்கும் தப்பித்துச் சென்றுவிடக்கூடாது என்பதற்காக என் கால் இரண்டையும் உதைத்தார்கள். ரத்தம் சொட்டச் சொட்ட மயக்க நிலையில் அப்படியே விட்டுச் சென்றார்கள்.
அப்போது என்னை அடிப்பதை தடுக்க வந்த என் இரண்டு வயது மகனை அவனைத் தூக்கி சுவற்றில் விசிறியெறிந்தார்கள்.
அதற்குள் அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஒன்று கூட போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நானும் மகனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டோம். போலீசிடத்தில் மகன் நடந்த சம்பவங்களை விவரமாக கூறினான்.
வரவேற்ற குடும்பம் :
ஜோதிபாசு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்கு பதியப்பட்டது.
இந்த சம்பவம் 2003 ஆம் ஆண்டு நடைப்பெற்றது. இவ்வளவு தூரம் நடந்த பிறகு இனி சேர்ந்து வாழ்ந்து எந்த பிரயோஜனமும் இல்லை என்ற முடிவுடன் குழந்தைகளுடன் பிறந்த வீட்டிற்கு வந்தார் உஷா. மொத்தக் குடும்பமும் ஆதரவளித்தது.
நீ படி... படித்து உனக்கான தேவையை பூர்த்தி செய்து கொள்கிற அளவுக்காகவது நீ சம்பாதிக்க வேண்டும் என்று சொல்லி உஷாவின் சகோதரர்கள் உஷாவை படிக்க வைத்தனர்.
விவாகரத்து :
காலங்கள் உருண்டோடியது. உஷா ஜோதிபாசுவை விவாகரத்து செய்ய கோர்ட்டில் தாக்கல் செய்தார், அதோடு திருமணத்தின் போது போடப்பட்ட நகை மற்றும் பணம் அனைத்தையும் திரும்பித்தர வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.
உடனே மாமியார் குடும்பத்தினரிடமிருந்து உஷாவின் நடத்தை சரியில்லை பணத்தை எல்லாம் பிஸ்னஸில் போடுகிறேன் என்று சொல்லி எல்லாவற்றையும் அவரே அழித்து விட்டார் என்று குற்றம் சுமத்தப்பட்டது.
கேஷ் கவுண்டர் வேலை :
இந்நிலையில் உஷாவுக்கு மதுரையில் இருக்கும் அரசு மருத்துவமனையின் கேஷ் கவுண்டரில் வேலை கிடைத்தது. வேலையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.
தொடர்ந்து தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் அட்மிஷன் ஆபிஸில் அட்மின்ஸ்ட்ரேட்டராக வேலை கிடைத்தது. அதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றிக் கொண்டே பகுதி நேரமாக சைக்காலஜி படிக்கவும் செய்தார் உஷா.
தொடர்ந்த படிப்பு :
படிப்பிற்கான செலவுகள் எல்லாம் உஷாவின் சம்பளத்தில் இருந்து இன்ஸ்டால்மெண்டாக பிடிக்கப்பட்டது. வேலை, படிப்பு,குழந்தைகள் என்று மிகக் கடுமையாக போராடினார்.
இந்நிலையில் உஷா பிசியோதெரபி சிகிச்சைக்கும் சென்று கொண்டிருந்தார் 2003 ஆம் வருடம் மாமியார் குடும்பத்தினர் நடத்திய தாக்குதலுக்குப் பின்னர் நடப்பதற்உ கூட மிகவும் சிரமப்பட்டார்.
கோர்ட் விவாகரத்து வழங்கியது. உஷா மிகுந்த உற்சாகத்துடன் தன் படிப்பைத் தொடர்ந்தார் சைக்காலஜியில் மாஸ்டர்ஸ் படிக்க ஆரம்பித்தார். மூத்த மகளை வெளியூருக்கு அனுப்பி கல்லூரியில் படிக்க வைத்தார். இரண்டு மகள்களும் ஒரு மகனும் உஷாவுடனே இருந்தனர்.
மீண்டும் வந்த ஜோதிபாசு :
சட்டப்படி இருவரும் பிரிந்து விட்டாலும் ஜோதிபாசு உஷாவை விடுவதாக இல்லை. தொல்லை கொடுக்க ஆரம்பித்தான். பெற்றோருக்கு எதிராக வன்கொடுமை வழக்கு, உஷா பார்த்து வந்த கம்பெனி நொடிந்து விட்டது. பணக்கஷ்டம் இவை எல்லாம் மீண்டும் உஷாவைத் தேடி தேடி வர வைத்தது.
உஷா பணியாற்றும் பல்கலைக்கழகத்திற்கே வந்து உஷாவைப் பற்றிய அவதூறுகளை கிளப்புவது,டார்ச்சர் செய்வது என்று தொடர்ந்து கொண்டேயிருந்தது. குழந்தைகளை அவனிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்பதற்காகவே நான்கு வீடுகள் வரை மாற்றினார் உஷா.
நான் திருந்தி விட்டேன் :
அது 2010 ஆம் ஆண்டு. மொத்த குடும்பத்தினருக்கும் அதிர்ச்சியளிக்கும் விதமாக ஜோதி பாசு உஷாவின் வீட்டிற்கு வந்தார். உஷாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்....
நான் திருந்திவிட்டேன், என்னை மன்னித்து விடு என் தவறை உணர்ந்து கொண்டேன் இனி ஒரு போதும் அப்படி நடந்து கொள்ளமாட்டேன் என்னை மன்னித்து விடு என்று கெஞ்சுகிறார்.
ஜோதிபாசு மிகவும் உடல் தளர்ந்திருந்தான். அவனது உடல்நிலையும் மிகவும் மோசமாக இருந்தது. அவனை ஒருவரர் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவன் உடல்நிலையிருந்தது.
இந்நேரத்தில் மன்னித்து விடு, திருந்திவிட்டேன் குடும்பத்துடன் சில காலங்கள் செலவழிக்க வேண்டும் என்று விரும்புகிறேன் என்று கேட்டதும் குழந்தைகளும் அப்பா இருக்கட்டுமே என்று சொல்ல ,உஷா ஒரு கண்டிஷனோடு மட்டுமே உள்ளே அனுமதித்தார்.
கண்டிஷன் :
இந்த குழந்தைகளின் தகப்பனாக நீ எவ்வளவு காலம் வேண்டுமானாலும் இங்கேயிரு ஆனால் என் கணவனாக உனக்கு ஒரு போதும் அனுமதியில்லை என்றே அனுமதித்தார்.
சில நாட்கள் அமைதியாக நகர்ந்தன. திடிரென்று ஒரு நாள் சில பேப்பர்களில் கையெழுத்து போடச்சொல்லி உஷாவை வற்புறுத்தினார் ஜோதிபாசு. பெற்றோருக்கு எதிராக போடப்பட்டிருக்கும் வன்கொடுமை வழக்கினை வாபஸ் பெறக்கூறித் தான் அந்த கையெழுத்து கேட்டிருக்கிறான், அவன் வீட்டிற்குள் நுழைந்ததன் நோக்கம் தெளிவானது.
சேலையை பிடித்து இழுக்க :
குழந்தைகளும் வெறுத்து விட்டனர். இனிமேல் இந்தப்பக்கமே வரக்கூடாது என்று சொல்லி திட்டி வெளியே அனுப்பிவிட்டோம்.
மறு நாள் முழுவதும் குடித்து விட்டு அதே பேப்பருடன் மீண்டும் உஷாவின் வீட்டிற்குள் நுழைந்தான் ஜோதிபாசு. எனக்கு ரொம்ப பசிக்கிறது சாப்பிட எதாவது கொடு என்று கேட்டபடி வீட்டிற்குள் உட்கார்ந்து கொண்டான்.
சரி உணவு தயாரிக்கிறேன் என்று சொல்லி சமையலறைக்குச் சென்றேன்.பின்னாலேயே வந்து என் சேலையை பிடித்து இழுக்க ஆரம்பித்தான். அப்போது தான் அவனுக்கு வந்திருப்பது என்ன பசி என்று என்னால் யூகிக்க முடிந்தது.
போராட்டம் :
என்னிடமிருந்து அவனை விலக்கிட முயற்சித்தேன்.அதை விட மனதில் முதன் முறையாக பயங்கரமான பயம் படர்ந்தது. இதுவரை இந்த விஷயத்தை என் குழந்தைகளிடமிருந்து கூட மறைத்து வைத்திருந்தேன். குழந்தைகளிடத்தில் தான் சொல்லவில்லை என்றாலும் உஷா முன் ஜாக்கிரதையாகவே இருந்தார்.
சில மாதங்களுக்கு முன்பு ஜோதி பாசு வீட்டில் தங்கியிருந்த போது உடல் நலம் சரியில்லாத நிலையில் மருத்துவ சிகிச்சை மற்றும் சில டெஸ்ட்டுகள் எடுக்கப்பட்டதில் ஜோதிபாசுவுக்கு எயிட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
காயங்களுக்கு மருந்து :
திருமணமான பின்பு வேறு பெண்களுடன் ஏற்பட்ட தொடர்பினால் தான் இந்த நிலைமைக்கு ஆளாகியிருக்கிறான் ஜோதிபாசு. இருந்தும் அவன் வீட்டில் தங்கியிருந்த சில நாட்களுக்கு நான் உடனிருந்து கவனித்துக் கொண்டேன்.
அவன் உடலில் ஏற்ப்பட்டிருந்த காயங்களுக்கு எல்லாம் மருந்து வைத்தேன்.
அம்மாவை அப்பா எதோ செய்கிறார் என்பதை உணர்ந்த குழந்தைகள் இருவரையும் பிரிக்க முயற்சித்தன. இரண்டாவது மகள் அப்பாவை பிடித்து இழுத்தாள்.
மகளை அறையில் அடைத்து :
கோபமாக பார்வையை திருப்பிய ஜோதிபாசு உங்க அம்மா வர்லன்னா என்ன நீ வா என்று சொல்லிக் கொண்டே மகளை அறையில் தள்ளி கதவை சாத்தினார். அறையிலிருந்து மகளின் அலறல் கேட்க ...
உஷாவுக்கு என்ன செய்வது எப்படி மகளை காப்பாற்றுவது என்றே தெரியவில்லை மகளுக்கும் எயிட்ஸ் வந்துவிட்டால் என்ற பயம் நெஞ்சை அடைத்தது.
அப்போது தான் மகன் விளையாட பயன்படுத்திய கிரிக்கெட் பேட் கண்ணில் பட்டது. அதையெடுத்து ஜன்னல் கதவுகளை உடைத்தார். கதவைத்திறந்து உள்ளே சென்றார். மகளின் துப்பட்டாவை விடும் வரை கிரிக்கெட் மட்டையில் கணவரை ஓங்கி அடித்துக் கொண்டிருந்தார்.
கொலை :
துப்பட்டாவை விட்டான் சுருண்டு விழுந்தான். மேற்கொண்டு அவனிடமிருந்து எந்த அசைவும் இல்லை என்ற தருணத்தில் தான் அடிப்பதை நிறுத்தினார் உஷா. நேராக போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.
ஏற்கனவே வழக்கு பதிந்திருப்பதால் நிலைமையை உணர்ந்து கொண்ட போலீஸ் உஷாவை கைது செய்வதற்கு பதிலாக செக்ஷன் 100ப்படி உஷாவை கைது செய்யாமல் விட்டனர்.
இந்த வழக்கில் தான் Private defence என்ற சட்டம் தமிழகத்தில் முதன் முதலாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
தன்னை கற்பழிக்கவோ அல்லது கொலை செய்யவோ ஒருவன் வரும் போது, தற்காத்துக் கொள்ள எதிரியை தாக்குவது. அப்படி நடத்தப்பட்ட தாக்குதலில் எதிராளி உயிரிழந்தால் அது கொலைக்குற்றம் ஆகாது.
பொருளாதார சுதந்திரம் :
ஒரு முறை மட்டும் குழந்தைகளுடன் கோர்ட்டில் ஆஜராகி நடந்த சம்பவங்களை விவரித்தார். அவ்வளவு தான் அதன் பிறகு கோர்ட்டுக்கு ஒரு முறைகூட சென்றதில்லை உஷா. படிப்பைத் தொடர்ந்தார்.
வங்கித்தேர்வு எழுதி வேலையும் வாங்கினார். வாழ்வில் திரும்பி பார்க்கவே கூடாத பக்கமாக தன் கணவனுடன் வாழ்ந்த நாட்களை நினைவு கூறும் உஷா. குடும்ப வன்முறையால் பாதிக்கப்படும் பெண்களுக்கு ஓர் சாட்சி.
உங்களை நீங்களே பொருளாதார ரீதியாக சுதந்திரம் பெற்றவராக வைத்திருங்க்ள். அது பல பிரச்சனைகளிலிருந்தும் உங்களை பாதுகாக்கும் என்கிறார் உஷா.